Archive for 2011

நெல்லூர் டைரிஸ்..

               நீ.....ண்ட காலத்திற்கு பின் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நெய்வேலி to நெல்லூர் பயணித்தபின் அவ்வுளவாக இணையதளத்தில் நேரத்தை செலவிடமுடியவில்லை. என்னுடைய உயர் படிப்பிற்காக வெளியில் சென்று படிக்க ஆயத்தமானபோது ஆந்திராவிலுள்ள 'நாராயணா கல்வி குழுமங்களை'ப் பற்றி கேள்விப்படநேர்ந்தது. ஒரு புது அனுபவத்திற்காகவும் சவாலாகவும் நெல்லூரிலுள்ள நாராயணா கிளையில்
சேர்ந்தேன். ஆங்கிலத்தை தவிர வேற்று மொழிகள் பேசத்தெரியாத எனக்கும்
 
தெலுங்கை தவிர வேற்று மொழிகள் பேசாத ஆந்திர மாணவர்களுக்கிடையே இருந்த நட்பின் மூலம் நான் அங்கு கற்றுக்கொண்ட விஷயங்கள் மற்றும் பட்டறிந்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள மிகவும் ஆவலோடு இருக்கிறேன். எனவே வரும் வாரங்களில் அவைகளை தொகுத்து பதிவிடுகிறேன். மிக்க நன்றி///
Wednesday, October 5
Posted by Sibhi Kumar SenthilKumar

அமைச்சரின் இறப்பிற்கு காரணம் யார்?

வாசகர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிப்பெற்று, 'சுற்றுசூழல் அமைச்சராக' மே 16 'ஆம் தேதி பதவியேற்று, மே 23 'ஆம் தேதி உயிரிழந்த மரியம் பிச்சை அவர்களை 'பாவம்' என்று சொல்வதா, 'கொடுத்து வைக்காதவர்' என்று சொல்வதா?


மரியம் பிச்சையின் உயிரிழப்புக்கு பின் அதனை தொடர்ந்து நிறைய சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து சுமார் 40 கி.மீ. தள்ளி நடந்திருக்கும் இவ்விபத்திற்கு முன், அமைச்சரின் வாகனத்திற்கு பாதுகாப்பாக ஒரு எஸ்கார்டு வண்டியே அனுப்பப்பட்டுள்ளது.


இவ்விபத்தை வேறு விதமாக யோசிக்கும் போது விதி விளையாடிருப்பது நன்றாக தெரியும். திருச்சியில் விழாவை முடித்துவிட்டு வழக்கமான தனது 'ஸ்கார்பியோ' காரில்தான் சென்னைக்கு பயணத்தை தொடர்ந்தார். நடு வழியில் 'இனோவா' காருக்கு மாறிவிட்டு 'ஸ்கார்பியோ'வை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். அடுத்த பத்தாவது நிமிடம்... மணியாகிவிட்டது என்று வேகமாக சென்றுகொண்டிருந்த 'இனோவா' முன்னே சென்றுக்கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் இடித்து விபத்துக்குள்ளானது.

சற்றே விரிவாக 'இனோவா'வின் டிரைவர் ஆனந்த் சொல்லும்போது, "மணியாகிவிட்டது என்று வேகமாக செல்லும்போது முன்னே சென்று கொண்டிருந்த 'கன்டெய்னரை' முந்தும் விதமாக ஹாரனை அடித்து கொண்டே சாலையின் வலதுபுறத்தில் அதை முந்த முயன்றேன். திடீரென்று அந்த கன்டெய்னரும் வலதுபுறமாக திரும்பியதால் அமைச்சர் உட்கார்ந்திருந்த, அதாவது காரின் இடதுபுறத்தில் இடித்தது" என்கிறார்.

இந்த விபத்தை பார்த்த சாட்சி, இடித்தது 'டிப்பர்' லாரி என்று சொன்னார். எனவே சி.பி.ஐ. டோல்கேட்டுகளில் இரண்டு வகையாகவும் விசாரித்து வந்தனர். இவ்விரண்டு வகை லாரிகள் அனைத்தையும் விசாரித்த பின் அனைத்து லாரிகளையும் விசாரிக்க துவங்கினர்.

இந்நிலையில் இடித்த லாரியை மே 31 'ஆம் தேதி மேற்கு வங்காளத்திலுள்ள கடக்பூர் என்கிற இடத்தில் சுற்றி வளைத்தனர். ஆனால் இதில் தான் நிஜ குழப்பமே உள்ளது. AP 16 TB 9744 என்ற ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரை கொண்டிருந்த அந்த லாரி 'கன்டெய்னரோ', 'டிப்பரோ' கிடையாது. அது 'டாரஸ்' வகையை சேர்ந்தது!
'டாரஸ்' வகை லாரி
பிடிபட்ட லாரி!

இந்த குழப்பங்களை தவிர்த்து, இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்த இரண்டு பேரை பற்றி உங்களுக்கு சொல்கிறேன்...

முதல் மற்றும் முக்கிய காரணம் அமைச்சர் மரியம் பிச்சைதான்! அட.. சத்தியமா அவர்தாங்க. ஏன்னா, சாதாரண குடிமகன்களே இன்று, 'காற்றுப்பைகள்' இல்லாத வாகனங்களை பயன்படுத்துவதில்லை. மரியம் பிச்சை இவ்வகை வண்டியை பயன்படுத்தியிருந்தால், இந்நேரம் அமைச்சரவையில் உட்கார்ந்துகொண்டிருப்பார்." 'காற்றுப்பை' என்றால் என்ன?" என்பவர்களுக்கு எனது முந்தைய கட்டுரையை பாருங்கள்_ காற்றிருக்கும்போதே தூற்றிக்கொள்!

அடுத்த காரணம் வேகம். சற்று பொறுமையாக போயிருந்தால், மரியம் பிச்சை படுகாயங்களோடு தப்பியிருப்பார். அவர்கள் சென்ற வேகத்தை சொல்லவேண்டுமானால் கீழுள்ள படத்தை பாருங்கள். இடித்த பின் பிரேக் அடித்த உடன் வேகமாக வந்த கார் நிற்கும்போது ஏற்பட்ட டயரின் தடங்களை பாருங்கள்.

இதன் மூலம் நான் கூறிக்கொள்வது என்னவென்றால், மிதமான வேகமோடும், பாதுகாப்பான வண்டியையோடும் நாம் பயணிக்க வேண்டும் என்பதே!

வாழ்க்கை நிலையற்றது என்பதற்கு உதாரணமாக கீழுள்ள படங்கள் இருக்கின்றன.
ஒரு மணிநேரத்திற்கு முன்னால்...

...பின்னர்

பாடல்கள் பலவிதம்_ என்னை வசீகரித்தவை...

வாசகர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். 'எப்பவும் கார், இல்லை ஏதாவது பொதுவான விஷயத்தை பற்றி சொல்லும் இவன் இப்போது திடீரென்று பாடல்கள் பக்கம் வருவது ஏன்?' என்று நினைப்பது உங்கள் கண்  மூலமாக எனக்கு தெள்ள தெளிவாக தெரிகிறது.

எல்லோருக்கும் பொதுவாக சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைத்து காலக்கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பிடிக்கும். சில பாடல்களை கேட்டால் அவர்களுக்கே உரிய பழைய ஞாபகங்கள் தலைதூக்கும். சிலருக்கு இளையராஜா அவர்கள் இசையமைத்த பாடல்களை கேட்கும்போது அவர்களின் இளமை காலம் ஞாபகத்திற்கு வந்து செல்லும். சிலருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களை கேட்டால் மெய்மறந்து போய்விடுவார்கள்.

சிலர் தனக்கு குறிப்பிட்ட இசையமைப்பாளரை தான் பிடிக்கும். எனவே அவர் இசையமைத்த பாடல்களை மட்டும்தான் கேட்பர்.

என்னுடைய பாலிசி என்னவென்றால் ஒரு பாடலில் இசை, வரிகள், படியவருடைய குரல் ஆகியவை நன்றாக இருக்குமேயானால் நான் அந்த பாடலுக்கு அடிமை. ஆனால் இந்த முடிவு எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு மாதத்தில் மாறிவிடும்! அப்போது புதிதாக வெளிவந்த பாடல்களின் வரிகளை என் வாய் முனுமுனுக்கும்.

சில பாடல்கள் என்னை மெய்மறக்க செய்துவிடும். குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் என்னை கவரத் தவறுவதில்லை. எனவே எனக்கு பிடித்த பாடல்களை அவற்றின் வரிகளையும், அதில் எனக்கு பிடித்த வரிகளையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

சமீபத்தில் வெளிவந்த படமான 'எங்கேயும் காதல்' என்ற திரைப்படத்தில் வரும் தீம் பாடலான 'எங்கேயும் காதல்' என்கிற பாடலை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.(எனக்கு பிடித்த வரிகளை ஹைலைட் செய்திருக்கிறேன்)

இசையமைப்பாளர்; ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்; ஆலாப் ராஜு, ராணினா ரெட்டி
பாடல் வரிகள்; கவிஞர் தாமரை


"எங்கேயும் காதல்
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில் ஓட

முதல்வரும் காதல்
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்

காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும்ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே

கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல்
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில் ஓட

முதல்வரும் காதல்
 மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்த்திடுமே


முகங்களையோ உடல் நிறங்களையோ  
இது பார்க்காதே .. பார்க்காதே
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமேயார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூச்செண்டால் பூமி திண்டாடும்


எங்கேயும் காதல்
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல்
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே"

Wednesday, May 18
Posted by Sibhi Kumar SenthilKumar

தகிக்கும் வெயிலும் வெளியூர் பயணமும்

அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகமாகிக்கொண்டிருப்பதை போலவே வெயிலின் தாக்கமும் தினம் தினம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த வெயிலினால் விரைவில் நாம் சோர்ந்துபோகிறோம். அதிலும் வெளியூர் பயணங்கள் நம்மை மிகவும் வாட்டுகிறது.


பேருந்துகளில் செல்லும்போதுதான் அவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒருசில சொகுசு பேருந்துகளை தவிர அனைத்து பேருந்துகளிலும் 'ரெக்சின்'  இருக்கைகள் தான் உள்ளது. இவை மேலும் எரிச்சலாக இருக்கும்.

எனவே வெளியூர் பயணங்களுக்கு பேருந்துகளில் செல்வதை முடிந்த வரை தவிர்த்து கார் பயணங்களையே அனைவரும் விரும்புவீர்கள். இனிமேல் உங்களுக்கு சில டிப்ஸ்.

சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு...

 • உங்களின் பயணத்திற்கான வழித்தடங்களை முழுவதுமாக முன்கூட்டியே முடிவு செய்துவிடுங்கள்.
 • நீங்கள் இரவு நேரத்தில் ஓட்டிய அனுபவம் இருந்தாலொழிய நீங்கள் இரவு நேரத்தில் ஓட்டாதீர்கள். வாடகை ஓட்டுநர்கள் அமர்த்தி நீங்கள் சுகமாக செல்லுங்கள்.
 • வெயில் காரில் ஏ.சி. உபயோகிக்கும்போது மினிமம் ஸ்பீடிலேயே உபயோகிங்கள்.
 • வெயிலில் காரை பார்க் செய்துவிட்டு நீண்ட நேரம் கழித்து வந்தீர்களானால், காரின் ஜன்னல்களை திறந்துவிட்டு ஏ.சி. யை கொஞ்ச நேரத்திற்கு ஆன் செய்யுங்கள். இதனால் அதிகரித்த காரின் தட்பவெட்பம் சமமாகும். பிறகு ஜன்னல்களை மூடிவிட்டு ஏ.சி. யை ஆன் செய்துவிட்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்.
 • முடிந்தவரை அடிக்கடி வழியில் தென்படும் இயற்கை பழச்சாறுகளை பருகுங்கள்.
 • ஏ.சி. பயன்படுத்தினால் மைலேஜ் கணிசமாக குறையுமென்பதால், இரவில் செல்லும்போது ஏ.சி. யை பயன்படுத்தாமல் ஜன்னல்களை திறந்துவிட்டு ஃபேன்களை பயன்படுத்துங்கள்.

வாடகை காரை பயன்படுத்துபவர்களுக்கு...

 • முடிந்தவரை 'டிராவல் ஏஜென்சி'களிடமிருந்தே வண்டியை எடுங்கள். சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேர்வதோடு மட்டுமில்லாமல் தங்களால் வரமுடியாத சூழ்நிலைகளில் வேறு வண்டியை ஏற்பாடு செய்துவிடுவர்.
 • உங்கள் குடும்பம் ஐந்து உறுப்பினர்களை கொண்டதாக வைத்துக்கொள்வோம். ஐந்து நபர்களுக்கு சரியாக இருக்கும் வண்டிகளை (அதாவது... இண்டிகா, அம்பாசிட்டர்...) எடுக்காமல் சற்று பெரிய காராக (அதாவது... சுமோ, இன்னோவா, டவேரா...) எடுங்கள்.
 • வண்டியை புக் செய்யும்போதே ஏ.சி. வேண்டுமென்று சொல்லிவிடுங்கள். ஏ.சி. க்கு எவ்வுளவு பணம் அதிகமாக கொடுக்கவேண்டுமென்பதையும் முன்பே பேசிவிடுங்கள்.

புதிதாக கார் வாங்குபவர்களுக்கு...


புதிதாக கார் வாங்குபவர்கள் அடர் நிறங்களான கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு ஆகிய நிறங்களை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் இந்த நிறங்கள் சூட்டை இழுத்துக்கொள்ளும். அதற்கு பதிலாக கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் நிறங்களான வெள்ளை, சில்வர், மெல்லிய நீல நிறம் ஆகியவை சிறந்தது.
Wednesday, May 11
Posted by Sibhi Kumar SenthilKumar

இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது..

மனிதன் தினம் தினம் புதிய சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்  கண்டுபிடிக்கிறான்.  உலகில் அனைவரும் அவரவர் வேலைகளை  எளிதாக மற்றும் வேகமாக  செய்வதற்கே இவை  கண்டுப்பிடிக்கபடுகின்றன.

இவற்றை கண்டுப்பிடிப்பதற்கு அவர்கள் எத்தனை நேரம் சாப்பிடாமல் யோசித்து கொண்டிருப்பர்?  தங்கள் குடும்பம், குழந்தைகளை  எவ்வுளவு நாள் பிரிந்து தங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பார்கள்?


சர்.ஐன்ஸ்டீன் அவர்கள், தாங்கள் செய்யும் ஆராய்ச்சியில் மூழ்கிவிடுவார். எனவே அவர் தன்னுடைய முடியை வெட்ட மறந்துவிடுவார். ஒருநாள் அவர் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் அழுக்கான சட்டையை போட்டுகொண்டு, முகம் கழுவாமல் பரட்டை தலையோடு வந்து கொண்டிருந்தான்.

இதை பார்த்த ஐன்ஸ்டீன் அவனை அழைத்து, 50 பென்ஸ்'ஐ (pence) காட்டி அவன் தலை வாரி, முகத்தை கழுவிக்கொண்டு வந்தால் அவனிடம் அதை தருவதாக சொன்னார். ஐம்பது 'பென்ஸ்' என்பது அரை பவுண்டிற்கு சமம். அவன் அவர் சொன்னபடியே செய்து முடித்தபின் அவரிடம் வந்தான். அவர் மகிழ்ச்சியுடன் 50 பென்ஸ்'ஐ அந்த சிறுவனிடம் கொடுத்தார். அவன் அதை வாங்கிக்கொண்டு திரும்பி ஐன்ஸ்டீன்'ஐ பார்த்து, "ஐயா, தாங்கள் உங்கள் முடியை வெட்டிக்கொண்டு வந்தால் இந்த பணத்தை உங்களிடமே கொடுத்து விடுகிறேன்" என்று சொன்னானே பார்ப்போம்! அப்போது தான் ஐன்ஸ்டீன்'க்கு தான் முடி வெட்டவில்லை என்று ஞாபகம் வந்தது!!

இந்த சம்பவம் சிரிப்பதற்காக சொல்லவில்லை. தங்களின் ஆராய்சியின்மேல்   அவர்கள் கொண்டிருந்த சிரத்தையை இது காட்டுகிறது.

"எதுக்கு திடீரென்று இவன் இதையெல்லாம் சொல்கிறான்?" என்று நீங்கள்  மனதில் நினைப்பது உங்கள் கண் மூலமாக எனக்கு தெரிகிறது!

இதையெல்லாம் சொல்ல தூண்டியது ஒரு நாய் எனக்கு அனுப்பிய  மின்னஞ்சல் தான். (இந்த வலைப்பூ பொதுவாக அனைவராலும்  வாசிக்கபடுவதால்  நாயோடு நிறுத்திகொள்கிறேன்)

அதன் சாராம்சம் இதுதான். ஒரு படத்தை போட்டு (பார்க்க மேரி  மாதாவை போல் இருந்தது) அதன் கீழே ஒரு வாசகம். 'நீங்கள் இந்த மின்னஞ்சலை பார்த்த உடனே இருபது பேருக்கு இதை  ஃபார்வர்ட் செய்யவில்லை என்றால் ஒரே மாதத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து விடுவீர்கள்'

இன்னும் கீழே, 'மைக்கேல் லாஸோ என்பவர் ஒரு பணக்காரர். இந்த  மின்னஞ்சலை பார்த்து விட்டு தன் பி.ஏ. விடம் இதனை ஃபார்வர்ட்  செய்யச்  சொன்னார். ஆனால் அந்த பி.ஏ. அதனை மறந்து விட்டாள். எனவே அவளுக்கு வேலை போய்விட்டது. மேலும் வீட்டிற்கு வரும் வழியில்  ஆக்ஸிடன்டில் இறந்து விட்டாள்.'

வேலை எதுவும் இல்லாதவர்கள் இதுபோன்ற  கண்றாவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த படத்தை பார்த்தபோது, "இவர்கள் கிருஸ்துவ மதத்தை பரப்புகிறவர்களோ" என்றும் தோன்றியது. உடனே இதை யார் எனக்கு ஃபார்வர்ட் செய்தார்கள் என்ற தகவலை பார்த்தேன். மேலும் அவருக்கு ஃபார்வர்ட் செய்தவர்களின் மின்னஞ்சல்  முகவரிகளுக்கே இந்த மின்னஞ்சலை ஃபார்வர்ட் செய்துவிட்டு அந்த மின்னஞ்சலை உடனே அழித்து விட்டேன்.

இதுபோன்ற மின்னஞ்சல்கள் ஒரு மனிதனின் மனரீதியான  பலவீனங்களை  அடிப்படையாக கொண்டே எழுகின்றன. இதனை பார்க்கும்போது, "ச்சே.. 20 பேருக்கு அனுப்பி தொலைத்துவிடுவோமே" என்று  பெரும்பாலானவர்களுக்கு தோன்றிவிடுகிறது. இவற்றால் சலனப்பட்டு நாம் அறிந்தவர்களுக்கு அனுப்பி அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதால், தேவையற்ற மனகசப்பே மிஞ்சும்.

மேலும், இதுபோல் தொழில்நுட்பங்களை வீணாக்குவது அந்த  கண்டுபிடிப்பாளர்களின் உழைப்புக்கு நாம் செய்யும் துரோகம் என்றே  கருதுகிறேன். அவரவர் வாழ்நாளில் அடுத்தவர்க்கு உபயோகமாய் இருக்க முயல்வதே உன்னதம்.
Thursday, April 14
Posted by Sibhi Kumar SenthilKumar

WWW க்கு புது அர்த்தத்தை கொடுத்த தமிழர்!

அனைத்து வாசகர்களுக்கும் எனது உகாதி நல்வாழ்த்துக்கள். இன்று ஒரு பல்சுவை பதிவு.

எனக்கு எப்போதும் பழைய வார இதழ்களை படிக்க மிகவும் விருப்பமாக இருக்கும். அதுபோல நேற்று போன வருடத்து 'ஆனந்த விகடனை' படிக்கும்போது ஒரு சுவாரசியமான நபரைப் பற்றி படித்தேன். அவர் ஒரு பாடகர். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டில் பிறந்த அவர் 'தான் அனைத்து நாட்டு மக்களுக்கும் சொந்தமானவர்' என்றுதான் அடையாளப்படுத்தி கொள்கிறார். ஆமாம்... உண்மையிலே இவர் ஒரு உலகம் சுற்றும் வாலிபர்!

இவர் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு மேடைகளில் பாடுபவர் அல்ல. மதுரைக்காரரான இவர் ஆங்கிலத்தில் தான் பாடுவார்! அவரது ஆங்கிலம் எளிதாக இருக்கும். பார்க்கும் நமக்கு ஆங்கில அறிவு தேவையில்லை. பாடலிலுள்ள துள்ளல் இசையும் இவரது ஆட்டமும் மிகவும் நன்றாக இருக்கும். youtube'இல் இவர் எந்த வீடியோவை ஏற்றினாலும் கண்டிப்பாக ஒரு இலட்சம்பேர் கண்டு ரசிப்பர்.

"எங்கள் ஊருக்கு வந்தீர்களாமே... ஏன் எங்களிடம் இவ்விஷயத்தை முன்னரே தெரிவிக்கவில்லை?" என்று கோபமாக சொல்லும் ரசிகர்கள் இவருக்கு உண்டு! சில சினிமா நடிகர்கள் கூட இவரின் ரசிகர்கள்.

இவருக்கு பாடல்கள் பாடுவது மட்டும் வேலையில்லை. பிறருக்கு தெரியாத விஷயங்களை சொல்லிக் கொடுப்பதும் இவர் செய்யும் வேலை. இவர் தனி மரமல்ல. தோப்பு! ஆமாங்க.. இவர் தனி ஆளாக செயல்படுவதில்லை. இவருக்கென்று தனியாக ஒரு நிறுவனம் உண்டு. அதுதான் WWW.

என்னடா இவன்.. ரொம்ப நேரமா பெயரையே சொல்லலியே என்று பார்க்கிறீர்களா... ஸ்... சாரி... அவர்தாங்க "வில்பர் சற்குணராஜ்".


இப்ப கேளுங்க, "அது என்ன WWW?"... WWW- Wilbur World Wide! அவருடைய வலைதளத்தின் முகவரி- http://www.wilbur.asia/  வெளிநாட்டவர்கள் இந்தியாவில் பழக வேண்டிய விஷயங்கள், இந்தியர்கள் வெளிநாட்டில் பழக வேண்டிய விஷயங்களையும் இவர் செயல்முறை விளக்கங்கள் கொடுக்கிறார்.

செயல்முறை விளக்கங்கள் கொடுப்பதில் இவரை மிஞ்ச ஆளில்லை. ஆனால் சில நேரம் மனிதர் கொஞ்சம் ஓவராக போய்விடுவார். எ.கா. பாம்பே டாய்லெட்-உபயோகப் படுத்துவது எப்படி? , வெஸ்டர்ன் டாய்லெட்-உபயோகப் படுத்துவது எப்படி?மிர்ச்சி சிவாவுடன் வில்பர்

அவரது சில காணொளிகளை இங்கே பதிவேற்றியுள்ளேன் பாருங்கள்.

                       Love Marriage  மிகவும் பிரபலமான இவரது பாடல் இது. 


Blog Song   வலைப்பூவைப் பற்றிய இவரது பாடல்.மாட்டுவண்டியை ஓட்டுவது எப்படி?  நான் மிகவும் சிரித்த ஒரு காணொளி.


மேலும் இவரது காணொளிகளை காண... http://www.youtube.com/user/wilbursargunaraj
Monday, April 4
Posted by Sibhi Kumar SenthilKumar

காசேதான் கடவுளடா

     ண்டமாற்று முறைக்கு மாற்று வழியாக வந்த பணம் இன்று உலகத்தையே ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் தமிழகத்தில் எந்த மு.க.  வெற்றிவாகை (!)  சூடினாலும்  பணம்தான்  ஆட்சி செய்யப்போகிறது என்பது   நம் அனைவருக்கும் தெரியும்.  எனவே பணத்தை  சேமிக்கவேண்டும் என்று தான் அனைவரும்   விருப்பபடுவர். 

சில பேர் சேமிக்க வேண்டிய காலத்தில் சேமிப்பின் அவசியத்தை உணராமல்  பின் வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் தாங்கள் சேமிக்கவில்லை என்று  வருத்தபடுவர்.

இன்றும் 'பட்ஜெட் பத்மநாபன்' போல் வாழும் ஒருவரைப் பற்றி என் அப்பா கூறியிருந்தார்.அவர் பெயர் (எதுக்கு இந்த வம்பு???). 'மிஸ்டர் எக்ஸ்' ன்னு  வச்சிக்குவோம்.  மிஸ்டர் எக்ஸ் எங்கள்  அப்பா  வேலைசெய்யும்  நிறுவனத்தில் வேலை  செய்கிறார்.  வீட்டிலுள்ள  நாலு  பேருக்கும் மொத்தமாக  மளிகை பொருள் மாதம் ரூ.500/- க்கு  மட்டும்  தான்  வாங்குவார்!  சந்தைக்கு  சென்றால்  காய்கறிகளை  நூறு  கிராம்'க்கு  வாங்கும்  ஒரே நபர் அவர்தான்!

இன்னொருவர் அதற்கு பத்து மடங்கு மளிகை பொருள்  வாங்குகிறார்!  தினசரி  கிலோ கணக்கில் காய்கறி தேவைப்படுகிறது.

நாம் இதுபோல கஞ்சமாகவும் இருக்கவேண்டாம் அதிக செலவாளியாகவும்  இருக்கவேண்டாம். சிக்கனம் என்பது நம்மால் முடிந்தவற்றில்  செய்யவேண்டுமே தவிர முடிந்தவரை செய்யக்கூடாது.

இன்று நம்மில் பெரும்பாலானோர் இருசக்கர வாகனம்(கள்)  வைத்திருக்கிறோம்.  தினமும் அதற்கு போடும் பெட்ரோல்'ஐ சேமித்தால் நம்  பட்ஜெட்டில்  பெரிய  தொகை சேமிக்கலாம். எனவே  அதற்குரிய  வழிகளை  தற்போது  உங்களுக்கு  சொல்கிறேன்;

>> உங்கள் வாகனத்தை முறையாக சர்விஸ் செய்யுங்கள்.

>> பெரும் நகரங்களில் வாழுபவர்கள் உங்கள் திட்டமிட்டு துவங்கினால்  சிக்னலில் மாட்டாமல்  தப்பிக்கலாம்.  அப்படி  சிக்னலில்  மாட்டிக்கொண்டால்  இன்ஜினை ஆஃப் செய்துவிடுங்கள்.

>> ஏர் பில்டரை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட இடைவேளையில் ஆயிலை மாற்றுங்கள்.

>> பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு முடிந்தவரை மிதிவண்டியில் போவதுதான்  உத்தமம்.

>> சிக்னலில் நிற்கும்போது கடுப்பாக ஆக்ஸிலேட்டரை முறுக்காதீர்கள்!

>> முடிந்தவரை 40-50 கி.மீ. வேகத்திலே செல்லுங்கள். இது உங்கள் பர்சுக்கும் உங்களுக்கும் நல்லது!

>> பெட்ரோல் போடும்போது அப்படியே அங்கேயே ஏர் செக் பண்ணிருங்க.

>> பேட்டரி மற்றும் ஸ்பார்க் ப்ளக் சரியா வேலைசெய்யுதா'ன்னு அடிக்கடி செக்  பண்ணுங்க.

>> நண்பர்களுடன் வெளியே செல்லும்போது வெவ்வேறு வண்டிகளில்  போகாமல் சேர்ந்து போங்கள்.

>> உங்கள் வண்டி மேனுவலில் குறிப்பிட்ட எடைக்கு தாண்டி வண்டியில்  ஏற்றாதீர்கள். இதனால் வண்டியும் சீக்கிரமாக தேய்ந்துவிடும்.

---------------------------------------------------------------------------------------------------------
பரிசுப் போட்டி!

"அப்பாடி... இப்ப நான் ஃப்ரீயா  இருக்கேன்!".

 என்ன  காரணமென்று  எனக்கு   சரியாக மின்னஞ்சல்  (mynameissibhi@yahoo.com)  அனுப்புபவருக்கு இலவசமாக சுஜாதாவின்  'கற்றதும்  பெற்றதும்'   அளிக்கப்படும்! முந்துங்கள்! இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!

---------------------------------------------------------------------------------------------------------

என் நண்பர் ஒருவர் வலைப்பூ ஆரம்பிக்க ஆலோசனை கேட்டார்.  அப்போதுதான் 
பிரபல பதிவராவது எப்படி? -நிறைவுப் பகுதி  என்ற பதிவை இடுகையிட்டேன். எனவே அவருக்கு சில உதவிகளை செய்யமுடிந்தது. அவரது இரண்டாவது  பதிவிலே   பிரபலமாகிவிட்டார்! அவரை என் அடுத்த பதிவில் உங்களுக்கு  அறிமுகபடுத்த விழைகிறேன். இருந்தாலும் அவருடைய  வலைப்பூவை நீங்கள்  வாசிக்குமாறு  தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
அவருடைய வலைப்பூவின் முகவரி- http://1hourcom.blogspot.com/

---------------------------------------------------------------------------------------------------------
Saturday, March 26
Posted by Sibhi Kumar SenthilKumar

பிரபல பதிவராவது எப்படி? -நிறைவுப் பகுதி

பாகம் ஒன்றை காண க்ளிக் செய்யவும்-பிரபல பதிவராவது எப்படி? பாகம் 1
---------------------------------------------------------------------------------------------------

பின்னூட்டங்கள்;

பதிவர்கள் பெரும்பாலும் தங்கள் வலைப்பூவில் பதிவிடுவது மட்டுமல்லாமல் பிற வலைப்பூக்களையும் வாசிப்பார்கள். பிடித்திருந்தால் வோட்டு போடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு பின்னூட்டத்தை போடுவதால் அந்த பதிவருக்கு ஊக்கம் கொடுத்தது போல் இருக்கும். பின்னூட்டத்தை ஒரே வரியில், அதாவது 'நல்ல பதிவு', 'அருமையான பதிவு' , என்று போடவேண்டாம். அந்த பதிவில் உங்களுக்கு பிடித்த வரி ஆகியவற்றை குறிப்பிட்டு போட்டால் உங்களை பற்றியான மதிப்பு உயரும்.
ஏதேனும் தவறுகள் மற்றும் திருத்தங்களை பின்னூட்டத்தில் சொல்ல விரும்பினால் 'வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை'ப்போல சொல்லவேண்டும். இதனால் பதிவர்களிடையே தேவையில்லாத மனக்கசப்பு ஏற்படாது.

விளம்பரம்;

அனைவருக்கும் தங்களின் வலைப்பூ மூலம் பணம் சம்பாதிக்க விருப்பம் இல்லாமலா இருக்கும்?

கூகிள் ஆட்சென்ஸ் (Adsence) ஒரு நல்ல வழி. இதைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அதைப்பற்றி சொல்கிறேன்.

உங்களின் பிளாக்கர் கணக்கில் உள்நுழையவும். பின் 'Monitize' என்கிற பகுதியிற்கு செல்லவும். அங்கே, கீழ் உள்ளதுபோல செய்யவும்.

சரியாக தெரியவில்லை என்றால் படத்தை க்ளிக் செய்யவும்.

அதற்கு பின் அது காட்டிய வழியில் செல்லவும். நிறைய பேருக்கு 'ஆட்சென்ஸ்' சரியாக வேலைசெய்யாது.

இந்த வசதியை நிறைய வலைத்தளங்கள் செய்கின்றது. அதில் குறிப்பிடத்தக்கது Admaya .

டிஸ்கி: உங்கள் வலைப்பூவில் விளம்பரம் போடுவது மட்டுமல்லாமல் பிற வலைப்பூவிலுள்ள விளம்பரங்களையும் சும்மாவாச்சும் க்ளிக் செய்யுங்கள்!

காணொளிகள்;

நிறையப் பேர் தங்கள் அலுவலகங்களில்தான் வலைப்பூ பார்க்கிறார்கள். சில பேர் தங்கள் வீட்டில் பார்க்கிறார்கள். எனவே காணொளிகளை பப்ளிஷ் செய்யாமல் அதன் லிங்க்'ஐ கொடுங்கள்.
(எ.கா. இதையும் பாருங்கள்- http://www.youtube.com/watch?v=wNyHE__TdJA )

பதிவுகள்;

என்னதான் நாம் தொழில்நுட்பரீதியாகவும் பின்னோட்டம் போடுவதிலும்  ராஜாவாக  இருந்தாலும்  நம்மிடம்  உள்ள  சரக்கை  (விஷயத்த சொன்னேன்!!!)  வைத்துதான் நம்முடைய வலைப்பூவிற்கு வரவேற்ப்பு இருக்கும்.

முடிந்தவரை ஒரு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் மட்டும் போடுங்கள். உங்கள் வாசகர்களுக்கு போதுமான இடைவெளி கொடுங்கள். உங்கள் பதிவை பப்ளிஷ் செய்யும்முன் ஒருமுறை படித்து பாருங்கள். உங்களுக்கு முழு திருப்தியை அளித்தால் மட்டுமே பப்ளிஷ் செய்யுங்கள்.

உங்களுக்கு வேலை பளு அதிமாக இருந்தால் அப்புறம் போட்டு கொள்ளலாம் என்று பேசாமல் இருந்துவிடுங்கள். ஏதாவது ஒரு பதிவை கண்டிப்பாக போடவேண்டுமென்ற அவசியமில்லை.

உங்கள் பதிவுகளின் தலைப்பை சுவையாக வையுங்கள்.

'சைடுபார்', 'ஃபூட்டர்' என்று அனைத்து இடங்களிலும் உங்கள் படைப்புகளை வெளியிடாதீர்கள். வாசகர்களை அது சலிப்புற செய்யும். முடிந்தவரை நிறைய விட்ஜெட்'களையும் வைக்காதீர்கள்.

இவையனைத்துமே நம்மால் முடிந்த காரியங்கள் தான். எனவே வருகிறேன் பிரபல பதிவரே!

டிஸ்கி: அடர்த்தியான கலரில் டெம்ப்ளேட்'ஐ வைக்காதீர்கள்.
Monday, March 14
Posted by Sibhi Kumar SenthilKumar

பிரபல பதிவராவது எப்படி?


     வலையுலகம் என்பது எல்லையற்றது. இன்று வலைப்பூ அனைவருக்கும் சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் ஏற்பட்ட மாற்றமிது. அறிமுக எழுத்தாளர்களுக்கு ஒரு புத்தகமாகவும், அசத்தல் எழுத்தாளர்களுக்கு ஒரு ஆவணமாகவும், வெளிநாட்டில்  வாழும்  தமிழர்களுக்கு ஒரு குடும்பமாகவும் வலைப்பூ பங்காற்றுகிறது.

அனைத்து பதிவர்களுக்கும் தாங்கள் பிரபல பதிவராக வேண்டுமென்பது இயல்பான ஆசை. எனவே ஒரு மூலையில் உட்கார்ந்து நான் யோசித்து பார்த்ததில் கீழ்கண்ட யோசனைகள் எனக்கு வந்தது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

டெம்ப்ளேட்;

பல்சுவை பதிவெழுதுபவர்கள் பிளாக்கர் அளித்துள்ள 'template designer' ஐ பயன்படுத்துங்கள். அதுப்போல மாதத்திற்கு ஒரு முறையாவது டெம்ப்ளேட்'ஐ மாத்துங்கள். இந்த யுக்தி உங்களது வாசகர்களை கவர்ந்திழுக்கும்.

ஒரு துறையைப் பற்றி பதிவெழுதுபவர்கள், (எ.கா. இலக்கியம், அரசியல், சினிமா, சமையல், etc...) தங்களுடைய  முத்திரையாக  ஒரே  டெம்ப்ளேட்'ஐ  வைத்திருங்கள். இதற்கு பிளாக்கர் அளித்துள்ள  டெம்ப்ளேட்'ஐ  பயன்படுத்தாமல்  மற்ற  வலைத்தளங்கள்  அளிக்கும்  டெம்ப்ளேட்'ஐ  பயன்படுத்தினால் தனித்துவமாக இருக்கும்.

தொழில்நுட்பம்;

உங்களுடைய வலைப்பூவில் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் 
புகுத்துங்கள். இதற்கென்று  நீங்கள்  எல்லா  வலைதளங்களுக்கு  செல்ல  தேவையில்லை. எளிய தமிழில் அனைவருக்கும்  புரியும்படி  பதிவர்  சசிக்குமார்  அவர்கள் தனது வலைப்பூவான 'வந்தேமாதரத்தில்' எழுதிகொண்டிருக்கிறார். 
அவருடைய வலைப்பூவை தவறாமல் பின்தொடர்ந்து உங்கள் வலைப்பூவை
 மிளிர வையுங்கள்.

திரட்டிகள்;

தமிழில் தற்போது திரட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இன்ட்லி, தமிழ்மணம், உலவு, தமிழ் 10 என்று சொல்லிக்கொண்டே போகலாம். எனவே உங்களது பதிவுகளை மறக்காமல் அவற்றில் இணைக்கவும். குறைந்தபட்சமாக இரண்டு திரட்டிகளிலாவது இணையுங்கள்.

இணைத்ததொடு நின்று விடாமல் அவற்றின் 'வோட்டு பட்டையை' உங்கள் வலைப்பூவில் அமைத்துவிடுங்கள். நான் இப்போது இன்ட்லி, தமிழ் 10 , உலவு ஆகிவற்றின் ஒட்டு பட்டையை எவ்வாறு இணைப்பது என்று  சொல்கிறேன்.

உங்கள் வலைப்பூவின் டேஷ்போர்டிற்கு சென்று design 'க்கு செல்லவும். மறக்காமல் Expand Widget Templates என்பதை சொடுக்குங்கள்.

பின் கீழ்கண்ட கோடிங்கை Ctrl+F கொடுத்து தேடவும்.
<data:post.body/>

பிறகு கண்டுபிடித்த கோடிங்'ஐ கீழே/பின்னே  கீழ்கண்ட கோடிங்'ஐ paste  செய்யவும்.

<div>
<script type='text/javascript'> button=&quot;veri&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script>
<script type='text/javascript'>
submit_url =&quot;<data:post.url/>&quot;
</script>
<script type='text/javascript'>
submit_url =&quot;<data:post.url/>&quot;
</script>

<script src='http://tamil10.com/submit/evb/button2.php' type='text/javascript'>
</script>

<script type='text/javascript'>submit_url = &quot;<data:post.url/>&quot;</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>
</div>

பின்னூட்டங்கள்;
அடுத்த பகுதியை காண க்ளிக் செய்யுங்கள்- http://sibhikumar.blogspot.com/2011/03/blog-post_14.html
Friday, March 11
Posted by Sibhi Kumar SenthilKumar

எழுத்தாளர் சுஜாதா விருதுகள் 2011     தமிழின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 'ம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து ஆறு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் ரூ.10 ஆயிரம் பரிசும் பாராட்டு பத்திரமும் கொண்டது. பரிசுக்குரிய தேர்வுகள் போக ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து விண்ணப்பங்கள் பாராட்டிற்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
 1. சுஜாதா சிறுகதை விருது -சிறந்த சிறுகதை தொகுப்பிற்கு  
 2. சுஜாதா நாவல் விருது -சிறந்த நாவலுக்கு
 3. சுஜாதா கவிதை விருது -சிறந்த கவிதை தொகுப்பிற்கு
 4. சுஜாதா உரைநடை விருது -சிறந்த கட்டுரை தொகுப்பிற்கு
 5. சுஜாதா இணைய விருது -சிறந்த வலைப்பூ(blog) , இணைய இதழ்
 6. சுஜாதா சிற்றிதழ் விருது -சிறந்த சிறுபத்திரிக்கைக்கு
விதிமுறைகள்;
 >> முதல் நான்கு பிரிவுகளில் 2009 டிசம்பர் முதல் 2010  டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த நூல்களில் 3 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். நூலாசிரியரைப்பற்றி தகவல்கள் மற்றும் முகவரியை தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும்.

>> ஐந்தாவது பிரிவில் தமிழில் சிறந்த வலைப்பூ (அல்லது) இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த வலைப்பூவை (அல்லது) இணையதளத்தை நடத்துபவர்கள் தம்மையும் தமது பதிவுகளைப் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த ஆக்கங்களின் பத்து சுட்டிகளையும்(link) மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். முகவரி- sujathaaawards@gmail.com

>> ஆறாவது பிரிவில் தமிழில் 2010 'ம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களின் பிரதிகளை அனுப்பவேண்டும். அந்த ஆண்டு குறைந்தபட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப்பட்டிருக்கவேண்டும். அந்த ஆண்டு வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் 3 பிரதிகள் வீதம் அனுப்பவேண்டும்.

>> விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களால் தேர்வு செய்யப்படும்.

>> தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி- மார்ச் 20, 2011

>> விருதுகள் மே 3 'ம் தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி...

சுஜாதா விருதுகள், உயிர்மை,
11 /29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்,
சென்னை-600018 

மின்னஞ்சல் முகவரி- sujaathaawards@gmail.com 
தொலைபேசி- 044-24-993-448 
--------------------------------------------------------------------------------------------------------------
Monday, March 7
Posted by Sibhi Kumar SenthilKumar

TVS Apache RTR 180 ABS - ஓர் அறிமுகம்

பாதுகாப்பு அம்சங்களில் 'சீட் பெல்ட்' , 'காற்றுப்பை'  போன்ற  உபகரணங்கள்  எவ்வுளவு முக்கியமோ அவ்வுளவு முக்கியம் எ.பி.எஸ் (ABS). இந்தியாவில்  எ.பி.எஸ்  என்னும்  தொழில்நுட்பம்  கார்களில்  மட்டும்  தான்  உபயோகித்து  கொண்டிருந்தனர். வெளிநாட்டிலும் ரேஸ் பைக்குகளிலும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளிலும் தான் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் டி.வி.எஸ் புதுமையாக ஒரு சிறிய  பைக்கில் இந்த தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது.

'அப்பாச்சி' அனைவரும் விரும்பும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக். கண்ணை  கவரும்  தோற்றமும் குறைவான விலையும் இதனை வெற்றிப்பெற செய்தது. இதனால் சுமார் இரண்டரை இலட்சம் 'அப்பாச்சி'கள் இந்தியாவெங்கும் விற்பனையாகியுள்ளது.
 
எ.பி.எஸ் என்ற தொழில்நுட்பத்தின் பயன் என்ன?   
   
      எ.பி.எஸ் (Antilock Braking System) என்ற தொழில்நுட்பத்தை வண்டியின் பிரேக்குகளில் பொருத்துவார்கள். வழுக்கும் தரைகளிலோ சரிவான மலைச்சரிவுகளிலோ சாதாரண பிரேக்குகளை உபயோகித்தால், நாம் சறுக்கி விழுந்துவிடுவோம்.

சரியாக சொல்லவேண்டுமென்றால், வண்டியின் பிரேக்குகளில் ஒரு சென்சார் பொருத்தபட்டிருக்கும். நாம் பிரேக்குகளை உபயோகிக்கும்பொழுது பாதைக்கு ஏற்ற மாதிரி வண்டியை நிறுத்தும்.
      புதிய 'அப்பாச்சி' தோற்றத்தில் வித்தியாசங்கள் இருக்காது. ஒரு ஓரத்தில் ABS என்ற முத்திரை இருக்கும். வேண்டுமென்றால் நாம் எ.பி.எஸ் ஐ ஆஃப் கூட செய்துகொள்ள ஒரு பொத்தான் அளிக்கப்பட்டிருகிறது.

புதிய 'அப்பாச்சி' மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியிடும் எண்ணத்தில் டி.வி.எஸ் உள்ளது. சாதாரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கொட்டி கிடக்கும் மணல் நமக்கு எமனாகும் தருணத்தை இந்த தொழில்நுட்பம் முற்றிலும் தகர்த்தெறிகிறது. இதனுடைய விலையினை பற்றி என்னும் அறிவிக்கப்படவில்லை. வெளிவந்த பிறகு இதன் விலையுடன் நாம் கலந்தாலோசிப்போம்.

கீழ் கண்ட வீடியோவை பார்த்தால் உங்கள் சந்தேகங்கள் தீரும்...

Wednesday, March 2
Posted by Sibhi Kumar SenthilKumar

எங்க ஊர போல வருமா?

வண்டிக்கு இதவிட ஒரு நல்ல பாதுகாப்பு தேவையா என்ன???


"ஹா ஹா ஹா "


"யாருக்கு 'நானோ' கார் வேண்டும்?" (மொத்தம் எத்தனை பேர்'ன்னு எண்ணி சொல்லுங்க பார்ப்போம்!)


நாங்க எப்படியெல்லாம் பெட்ரோல' மிச்சப்படுத்துறோம்'ன்னு பாத்து கத்துகோங்க!


என்ன.. இதுக்கே இப்படி ஆச்சரியமா பாக்குறீங்களே, சொம்புக்குள்ள என்ன இருக்கு'ன்னு யார் கண்டா???


குளிக்காத பய புள்ளைங்கள இப்படிதான் குளிக்க வைப்போம்!


'கிடார்' வாங்கினாலும் 'கிங்ஃபிஷர்' பிளைட் வாங்குனாலும் பூஜை போட்டுதான் ஆரம்பிப்போம்.


"போட்டி னு வந்துச்சுனா என்ன வேணாலும் பண்ணுவோம்!!!"


"அடியில பாம்பு போனா கூட பரவாயில்லை. சீரியல் போயிரகூடாது." 


எங்க ஊரு பில்கேட்ஸ்!

வண்டி எவ்வுளவு வெயிட்'டு தாங்குதுன்னு இப்படிதான் செக் பண்ணுவோம்!


.... சஸ்பென்ஷனையும் இப்படிதான் செக் பண்ணுவோம்!
Thursday, February 24
Posted by Sibhi Kumar SenthilKumar

காற்றிருக்கும்போதே தூற்றிக்கொள்!

எல்லா ஜீவராசிகளையும் உயிர்த்திருக்கச் செய்வது பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றுதான் என்று நாம் அறிவோம். இன்ஜினும், எரிபொருளும்  எல்லாமும்  இருந்தாலும் வாகனங்களை இயங்கச் செய்வதும் அதே காற்றுதான். 'அது'வன்றி ஓர்  அணுவும் அசையாது.
மேலும் பாதுகாப்பு அம்சங்களிலும் காற்றின் பங்கு உண்டு. அதுதான்  'காற்றுப்பை'. இதனை ஆங்கிலத்தில் Airbag என்று அழைப்பர். பொதுவாக ஓட்டுபவரின்(Driver) முன்பும் பக்கத்தில் உக்கர்ந்திருப்பவர்(Co-Driver) முன்பும் இருக்கும். 'காற்றுப்பை'யில் நாம் எந்த பொருளையும் வைக்க முடியாது. ஆனா நம்ம உயிரை காப்பாத்திக்க முடியும்.
 'என்னடா இவன்... ஆரம்பிச்சதிலிருந்து விஜய் படம் மாதிரி  பில்டப்'தான்  கொடுக்கறான்'ன்னு' நினைக்காதீங்க! நாம காரில் போகும்போது, எதிர்பாராம  விபத்து நடந்துச்சினா, இந்த காற்றுப்பைகள் தானாக பலூன் மாதிரி பெருசாகி நம்ம தலை எங்கேயும் அடிப்படாம வாரி அணைத்துக்கொள்ளும்!
அப்புடி என்னாதான் அதுல இருக்குன்னு  பார்ப்போம்.  காரின்  முன்பக்கம்  மோதும்போது, அங்கிருக்கும் 'மோதல் உணர்வுக் கருவி' அதனை உணர்ந்து, மடக்கி வைக்கப் பட்டிருந்த காற்றுப்பையிலுள்ள வெடி மாத்திரைகளை  வெடிக்கச் செய்யும். சரியாக சொல்லவேண்டுமென்றால் விபத்து நடந்த 7 மில்லி வினாடிகளில் காற்றுப்பைகள் விரியும். (குறிப்பு: மனித மூளை  விபத்து  நடந்ததை 300  மில்லி வினாடிகள் கழித்துதான் உணரும்!)
'ஆடி', 'பென்ஸ்', 'பி.எம்.டபிள்யூ' முதலிய சொகுசு கார்களில் முன்பக்கம் மட்டுமில்லாமல் காரை சுற்றி ஆறு முதல் எட்டு காற்று பைகள் இருக்கும். இதற்கு நேர்மாறாக சில கார்களில் சுத்தமாக ஒரு காற்றுப்பை கூட இருப்பதில்லை! 'ஹைவே'யில் 'மாருதி 800', 'நானோ' போன்ற கார்களில் பயணிப்பது எமனுக்கு 'ஹலோ' சொல்வது போன்றது!!!


எனவே, உயிரிருக்கும்வரை தான் நம் வேலைகளை செய்ய முடியும். எனவே இந்த அவசர உலகத்தில் நாமும் அவசரமாக செல்லாமலும், பாதுகாப்பான காரை வாங்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.      

குருவுமானவர்பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவையும், பெண் பிள்ளைகளுக்கு அப்பாவையும் பிடிக்கும். அது போல நான் எங்கம்மா செல்லம். ஆனால் என் அப்பாதான் என்னுடைய குரு. மற்ற பிள்ளைகள் என்மீது பொறாமைப்படும் அளவிலே என் அப்பா என்னை வளர்க்கிறார். அவர்தான் என்னுடைய அறிவு பசியைத் தூண்டிக்கொண்டிருப்பவர்.


இப்போது கணினி இல்லாத இடமே இல்லை. ஆனால் என் அப்பா நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு கணினி வாங்கி கொடுத்தார். “உனக்கு என்ன பொம்மை வேண்டும் என்று கேட்கவேண்டிய வயதில், என் அப்பா என்னிடம் “உனக்கு என்ன மென்பொருள் வேண்டும் என்று கேட்டார்!!!

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது... நாங்கள் முதன் முறையாக கணினி வாங்கும்போது அதன் Hard Disk, 40GB திறன்கொண்டது. Ram, 216MB. அப்போது இருந்த கணினிகளில் நாங்கள் வாங்கியதுதான் அதிகபட்சமானது.

எங்கள் வீட்டில் கணினி வாங்கிய அடுத்த நான்கைந்து வருடங்களில் என் நண்பர்கள் வீட்டிலும் கணினி வாங்கத்தொடங்கினார்கள். ஆனால் அதில் முக்கால்வாசி பேருக்கு கணினி என்றால் என்னவென்று தெரியாது! பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்காமலும், பந்தாவுக்காகவும் வாங்கினார்கள்!!!

ஆனால் எங்கள் அப்பா ஏற்கனவே கணினியில் நன்கு பழகியிருந்தார். ஏனென்றால் அப்போது அவர் ஒரு அச்சகத்தில் ஒரு பங்குதாரராக இருந்தார். அங்கு ஒரு கணினி இருக்கும். அதில் யாருடைய உதவியுமில்லாமல் அவரே கற்றுகொண்டார். அப்போதெல்லாம் பள்ளி விட்டு வரும்போது அப்பா எப்போதாவது அந்த அச்சகத்தில் நின்றால், நான் உள்ளே சென்று அங்கிருக்கிற கணினியில் ‘பாம்பர் (Bomber) என்கிற ஒரு சிறிய கேமை விளையாடுவேன். கணினி மேலிருந்த என்னுடைய பிரமிப்பு சிறிது சிறிதாக ஆர்வமாக மாறிற்று.

கணினி வாங்கித்தந்த எல்லா பெற்றோரும், அதில் கேம் விளையாட கூடாதென்று ஆரம்பத்தில் கண்டிப்பார்கள். பிறகு, விளையாடுவதை தவிர வேறு உபயோகமற்று கிடக்கும் அவை. ஆனால் என் அப்பா என்னை கண்டிக்கவில்லை. மாறாக கணினி மூலம் செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான பல விஷயங்களைக் கற்று தந்தார். ‘கணினி ஒரு விளையாட்டு பொருளல்ல என்பது என் அப்பா அடிக்கடி கூறுவார்.

என் அப்பாவிடம் நான் ரொம்பகாலமாக வருத்தப்பட்ட விஷயம் ஒன்றுதான். அதுதான் ‘கார்! ஆம்.. கார்களைப் பற்றி ஆர்வமாக எழுதும் என் வீட்டில் ஒரு கார் இல்லை! ‘இந்த நெய்வேலி நகரத்தில் அநேகமாக கார் இல்லாதது நம் வீட்டில்தான் என்று என் அப்பாவிடமே சொல்வேன். ஆனால் என் அப்பா, “ கார் இல்லனா பரவாலடா... பின்னாடி காசு இல்லாததுனால ஒரு நல்ல காலேஜ்ல படிக்க முடியாமப்போச்சேன்னு நீங்க கவலைப்படக்கூடாதுடா என்பார்.

இன்றைய தினம், என் அப்பாவிற்கு ஒரு முக்கியமான நாள். இப்போது எனக்கு 14 வயது. இதுவரை என் அப்பா எனக்கு செய்த அளவுக்கு அவருக்கு நான் எதுவும் செய்யவில்லை என்பது என்னுடைய பெரும் வருத்தம். எனவே இனிவரும் காலங்களில் அவர் விருப்பபடி நான் சாதனைகள் பல செய்து அவரை மகிழ்விப்பதே என்னுடைய ஆசை.
Saturday, February 5
Posted by Sibhi Kumar SenthilKumar

நான் தொடரலாமா???இது வாசிக்கும் அனைவருக்குமான பொது கடிதம்....
02-02-2011
நெய்வேலி
இந்த ப்ளாக்'ல நாம எப்போதும் கார் மற்றும் அதற்கு சம்பந்தமான போஸ்ட் மட்டுந்தான் போடனும். ஆனா வாழ்க்கையில ஏதாவது ஒரு தருணம் ஏற்பட்டால் மட்டுமே மற்ற விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நினைத்து வந்தேன்.
ப்ளாகில் சொந்த வாழ்க்கையில் நடந்தவை மற்றும் நிதர்சன உண்மைகளையும் எழுத 'அனானி'ஆக (anonymous) இருந்தாலொழிய எழுத முடியாது என்பது என் கருத்து. அதற்கு சில உதாரணங்களாக 'இட்லி வடை' (http://idlyvadai.blogspot.com/), மற்றும் ஏகப்பட்டதை சொல்லலாம்.
அதற்காக நான் ஒரு பலப்பரிட்சை வைத்தேன். ஒரு புது  கூகிள்  கணக்கு  உருவாக்கி  ஒரு ப்ளாகை உருவாக்கினேன். இதற்கு முன்னால் நான்  இரண்டு  ஆங்கில  வலைப்பூக்களை வைத்திருந்தேன். அதனால் என் வாழ்க்கையில் நடந்தவற்றை நான் உருவாக்கிய புதிய வலைப்பூவில் தாய்மொழி தமிழில் எழுத விழைந்தேன். அந்த ப்ளாகின் பெயர் 'தெரியாது'. (அதை நீங்கள்  எங்கு  தேடினாலும்  உங்களுக்கு  கிடைக்காது... டெலிட் செய்துவிட்டேன்!!!)
அதன் பிறகு வெறுத்துபோய் இன்னொரு ஆங்கில வலைப்பூவை உருவாக்கினேன். என்னுடைய ஆங்கில வலைப்பூக்களை யாரும் தொடர்ந்து வாசிப்பதில்லையே என்று நினைத்து அழிக்க முற்பட்டாலும் அவை வேறு எந்த தருணத்திலும் யாருக்காவது பயன்படும் என்று மனம் தடுத்தது. ஏனென்றால் அவை சமகால நிகழ்வுகளை விமர்சிப்பவை அல்ல.
ஆனால் என் தந்தை மற்றும் தாயினுடைய தமிழ் வலைப்பூக்களில் டிசைன் செய்வதும் சில சமயம் அவர்கள் எழுதியதை போஸ்ட் செய்யும்போதும் தமிழார்வம் என்னுள் வளர்ந்தது. ஒருமுறை என் தாய், "நீ ஆங்கிலத்தில் எழுதும் விஷயத்தை ஏன் தமிழில் எழுதகூடாது?" என்று கேட்டார். பின், "ஆங்கிலத்தில் கார்களைப் பற்றி எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தமிழில் யாரும் இவ்வுளவு விவரத்தோடு எழுதுவதில்லை. எனவே உனக்கு தெரிந்தவற்றை எளிய முறையில் மற்றவர்களுக்கும் தெரியவை" என்றார்.
அவர் சொல்லி விட்டு உள்ளே சென்றார். அம்மா  அடுத்த  ஐந்து  நிமிடத்தில்  வரும்போது நான் வலைப்பூவை உருவாக்கிவிட்டேன். அவர்தான்  'வட்டங்களில் சுழலுது வாழ்க்கை' என்ற தலைப்பினை பரிந்துரைத்தார். தமிழ் வலைப்பூக்களில் ஏற்கனவே பரிட்சயம் இருப்பதால் முதலிலே தமிழ் திரட்டிகளில் என்னுடைய முதல் பதிவை இணைத்தேன். முதல் பதிவே எனக்கு ஓரளவுக்கு பேர் வாங்கி தந்தது. (http://sibhikumar.blogspot.com/2010/11/blog-post.html)
என்னுடைய பதிவுகளுக்கு வரவேற்பு இருந்தாலும் அவற்றை விட மக்களுக்கு தலையாய பிரச்சனைகள் உண்டு. அதனால் சிலரைத்தவிர என்னுடைய பதிவுகளில் முழுமையாக ஒத்துபோக முடிவதில்லை என்ற உண்மை என்னை தாக்கியது.
எனவே நான் வாழ்க்கையில் நடப்பவை மற்றும் நகைச்சுவையான  பதிவுகளையும், தொலைகாட்சி  தொடரில்  வரும்  விளம்பரங்களை போல, எழுதலாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.
எனவே உங்கள் விருப்பத்தை ஓட்டளிக்கும் மூலமாக மட்டுமில்லாமல் தங்கள் பொன்னான வார்த்தைகளால் கருத்துரை இடுங்கள்.
என்றென்றும் தங்கள் அன்புள்ள,
செ.சிபிக்குமார் 
Wednesday, February 2
Posted by Sibhi Kumar SenthilKumar

என்னுடைய சந்தேகம் தீர்ந்தது!

15/11/2010 அன்று நான் ஒரு போஸ்ட் போட்டேன். ஞாபகமிருக்கிறதா? (இல்லனா தொட்டு பார்). ஒரு மிகச் சிறந்த கார்,  அலுவலகத்திற்கு  தினசரி  பயன்படுத்த சொல்லியிருந்தேன். அதைப் பற்றி  எனக்கு  நிறைய பேர்  மின்னஞ்சல் (sibhikumar@tamil.com) அனுப்பினார்கள்.
அவர்களின் கேள்வி; " 'ரெவா-ஐ' எங்கே கிடைக்கும்?"
அவர்கள் மட்டுமல்ல... என்னுடைய சந்தேகமும் " 'ரெவா-ஐ' எங்கே கிடைக்கும்?" என்பதுதான்!!!
ஆனால் இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட்டார்கள் மஹிந்திரா உற்பத்தியாளர்கள். புனேவில் உள்ள நான்கு ஷோரூம்களில் 'ரெவா-ஐ' விற்கத்தொடங்கிவிட்டத. இன்னும் கொஞ்ச நாட்களில் இந்தியா முழுவதும் மஹிந்திரா ஷோரூம்களில் 'ரெவா-ஐ' விற்பனை துவங்கிவிடும்.
புதிதாக ஒரு கார் வந்தாலே முதலில் வாங்க நிறைய பேர் தயங்குவார்கள். புதிய தொழில்நுட்பத்தோடு மின்சாரத்தில் இயங்கும் இவ்வகை காரை வாங்க நிறைய பேர் தயங்குவார்கள். இதற்காகவே மஹிந்திரா ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
அதாவது முதலில் நாம் ஒரு  இலட்சத்தை  வட்டியில்லா  வைப்பு  தொகையாக கட்டிவிடவேண்டும் (காரின் விலையில் சேர்ந்தது). பிறகு ரூ.7999/மாதம் என்கிற விதத்தில் மூன்று வருடம் கட்டலாம். மூன்று வருடம் கழித்து இந்த கார் பிடிக்கவில்லை என்றால், காரை திருப்பி கொடுத்துவிட்டு ஒரு இலட்சத்தை தாரளமாக எடுத்து கொள்ளலாம்! 
சமீபத்திய சாதனை;
         மூன்று இலட்சம் மாருதி ஆல்டோ இந்தியா முழுவதும் 2010'ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனை  ஆல்டோவை  'உலகத்தில் மிகச் சிறப்பாக விற்பனையான கார்' என்கிற கௌரவத்தை அளித்துள்ளது.        
மாருதி ஆல்டோவை  இந்தியர்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்த கார் 2000'ம் வருடத்தில் வெளிவந்தது. வெளிவந்த நாளிலிருந்து இதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. மாருதி 800' க்கு ஆல்டோ ஒரு மாற்று என்பது அனைவரும் ஏற்றுகொண்ட ஒரு உண்மை.

//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Sunday, January 30
Posted by Sibhi Kumar SenthilKumar

எதிர்பார்ப்பு- Colourful Dreams

எதிர்பார்ப்பு என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று.

 "பின்னால் நாம் என்ன வேலையில் இருப்போம்" என்று மாணவர்களும், "எப்போது நாம் சொந்த வீடு வாங்குவோம்" என்று சராசரி மனிதனும் நினைப்பது போல் கார் ஆர்வலர்கான என்னைப் போன்றோருக்கு "அடுத்து என்ன கார் வரும்" என்று ஆவலாக காத்திருப்போம்.

இன்று நாம் இந்த 2011 மற்றும் 2012 ஆம் வருஷத்தில் என்னென்ன கார்கள் வரும் என்று பார்ப்போம்.
Maruti Suzuki SX4 Diesel (எஸ்.எக்ஸ்.ஃபோர்)
Buy New Maruti Suzuki SX4 Diesel Cars in India

Maruti Suzuki RIII (ஆர்.த்ரீ)
Buy New Maruti Suzuki RIII Cars in India


 Hyundai Avante (அவன்தே)
Buy New Hyundai Avante Cars in India

Hyundai Elantra Sedan (எலன்ட்ரா)
Buy New Hyundai Elantra Sedan Cars in India

Hyundai Genesis (ஜெனிசிஸ்)
Buy New Hyundai Genesis Cars in India

Hyundai Verna RB (வெர்னா ஆர்.பி)
Buy New Hyundai Verna RB Cars in India

Hyundai Ha (ஹ)
Buy New Hyundai Ha Cars in India

New Hyundai ix35 (நயன் திர்டி ஃபைவ்)
Buy New Hyundai ix35 Cars in India

New Volkswagen Jetta sedan  (புதிய ஜெட்டா)
Buy New Volkswagen Jetta sedan Cars in India

Volkswagen Scirocco (சிரோக்கோ)
Buy New Volkswagen Scirocco Cars in India

Volkswagen UP (யு.பி)
Buy New Volkswagen UP Cars in India

Volkswagen Tiguan (டிகுவான்)
Buy New Volkswagen Tiguan Cars in India

இன்னும்...

என்ன மூச்சு முட்டுதா?
இன்னும் 30-40 கார் இருக்கு.

பாக்குற உங்களுக்கே எவ்வுளவு மூச்சு முட்டுதுனா, தேடி கண்டுப்பிடிக்கிற எனக்கு எவ்வுளவு மூச்சு முட்டும்!

அதனால உங்க வோட்டுகள குத்துங்க... பின்னூட்டம் சொல்லுங்க...

(குறிப்பு- அண்ணன் பிலாசபி பிரபாகரனின் வேண்டுகோளுக்கிணங்கி (!) 'வழமையான பிளாக்கர் கமென்ட்' வழிமுறையை பின்பற்றியுள்ளேன்)

அதனால திருப்பி சொல்றேன்;
"உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்"
Sunday, January 23
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

Get Notified !!! Give us your Email Address

Blog Archive

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -