- Back to Home »
- Airbags , கார் வாங்க ஆலோசனை , தெரிந்துகொள்வோம் »
- காற்றிருக்கும்போதே தூற்றிக்கொள்!
Posted by : Sibhi Kumar SenthilKumar
Monday, February 21
எல்லா ஜீவராசிகளையும் உயிர்த்திருக்கச் செய்வது பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றுதான் என்று நாம் அறிவோம். இன்ஜினும், எரிபொருளும் எல்லாமும் இருந்தாலும் வாகனங்களை இயங்கச் செய்வதும் அதே காற்றுதான். 'அது'வன்றி ஓர் அணுவும் அசையாது.
மேலும் பாதுகாப்பு அம்சங்களிலும் காற்றின் பங்கு உண்டு. அதுதான் 'காற்றுப்பை'. இதனை ஆங்கிலத்தில் Airbag என்று அழைப்பர். பொதுவாக ஓட்டுபவரின்(Driver) முன்பும் பக்கத்தில் உக்கர்ந்திருப்பவர்(Co-Driver) முன்பும் இருக்கும். 'காற்றுப்பை'யில் நாம் எந்த பொருளையும் வைக்க முடியாது. ஆனா நம்ம உயிரை காப்பாத்திக்க முடியும்.
'என்னடா இவன்... ஆரம்பிச்சதிலிருந்து விஜய் படம் மாதிரி பில்டப்'தான் கொடுக்கறான்'ன்னு' நினைக்காதீங்க! நாம காரில் போகும்போது, எதிர்பாராம விபத்து நடந்துச்சினா, இந்த காற்றுப்பைகள் தானாக பலூன் மாதிரி பெருசாகி நம்ம தலை எங்கேயும் அடிப்படாம வாரி அணைத்துக்கொள்ளும்!
அப்புடி என்னாதான் அதுல இருக்குன்னு பார்ப்போம். காரின் முன்பக்கம் மோதும்போது, அங்கிருக்கும் 'மோதல் உணர்வுக் கருவி' அதனை உணர்ந்து, மடக்கி வைக்கப் பட்டிருந்த காற்றுப்பையிலுள்ள வெடி மாத்திரைகளை வெடிக்கச் செய்யும். சரியாக சொல்லவேண்டுமென்றால் விபத்து நடந்த 7 மில்லி வினாடிகளில் காற்றுப்பைகள் விரியும். (குறிப்பு: மனித மூளை விபத்து நடந்ததை 300 மில்லி வினாடிகள் கழித்துதான் உணரும்!)
'ஆடி', 'பென்ஸ்', 'பி.எம்.டபிள்யூ' முதலிய சொகுசு கார்களில் முன்பக்கம் மட்டுமில்லாமல் காரை சுற்றி ஆறு முதல் எட்டு காற்று பைகள் இருக்கும். இதற்கு நேர்மாறாக சில கார்களில் சுத்தமாக ஒரு காற்றுப்பை கூட இருப்பதில்லை! 'ஹைவே'யில் 'மாருதி 800', 'நானோ' போன்ற கார்களில் பயணிப்பது எமனுக்கு 'ஹலோ' சொல்வது போன்றது!!!
எனவே, உயிரிருக்கும்வரை தான் நம் வேலைகளை செய்ய முடியும். எனவே இந்த அவசர உலகத்தில் நாமும் அவசரமாக செல்லாமலும், பாதுகாப்பான காரை வாங்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
நீங்க சொல்லும் வகையான வண்டிகளை வாங்கினால் விபத்து நேர்ந்தாலும், 'காயமே இன்னும் மெய்யடா... வெறும் காற்றடைத்த பையாலடா...' என்று தத்துவம் பேசியபடி இறங்கி வண்டியின் சேதாரங்களைப் பார்வையிடலாம் சரிதானே...
ReplyDeleteஅதுதானே நமக்கும் நல்லது!!! வருகைக்கு நன்றி.
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/02/blog-post_8099.html
நன்றி அண்ணா...
ReplyDelete