- Back to Home »
- விருதுகள் »
- எழுத்தாளர் சுஜாதா விருதுகள் 2011
Posted by : Sibhi Kumar SenthilKumar
Monday, March 7
தமிழின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 'ம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து ஆறு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் ரூ.10 ஆயிரம் பரிசும் பாராட்டு பத்திரமும் கொண்டது. பரிசுக்குரிய தேர்வுகள் போக ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து விண்ணப்பங்கள் பாராட்டிற்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
- சுஜாதா சிறுகதை விருது -சிறந்த சிறுகதை தொகுப்பிற்கு
- சுஜாதா நாவல் விருது -சிறந்த நாவலுக்கு
- சுஜாதா கவிதை விருது -சிறந்த கவிதை தொகுப்பிற்கு
- சுஜாதா உரைநடை விருது -சிறந்த கட்டுரை தொகுப்பிற்கு
- சுஜாதா இணைய விருது -சிறந்த வலைப்பூ(blog) , இணைய இதழ்
- சுஜாதா சிற்றிதழ் விருது -சிறந்த சிறுபத்திரிக்கைக்கு
>> முதல் நான்கு பிரிவுகளில் 2009 டிசம்பர் முதல் 2010 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த நூல்களில் 3 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். நூலாசிரியரைப்பற்றி தகவல்கள் மற்றும் முகவரியை தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும்.
>> ஐந்தாவது பிரிவில் தமிழில் சிறந்த வலைப்பூ (அல்லது) இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த வலைப்பூவை (அல்லது) இணையதளத்தை நடத்துபவர்கள் தம்மையும் தமது பதிவுகளைப் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த ஆக்கங்களின் பத்து சுட்டிகளையும்(link) மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். முகவரி- sujathaaawards@gmail.com
>> ஆறாவது பிரிவில் தமிழில் 2010 'ம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களின் பிரதிகளை அனுப்பவேண்டும். அந்த ஆண்டு குறைந்தபட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப்பட்டிருக்கவேண்டும். அந்த ஆண்டு வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் 3 பிரதிகள் வீதம் அனுப்பவேண்டும்.
>> விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களால் தேர்வு செய்யப்படும்.
>> தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி- மார்ச் 20, 2011
>> விருதுகள் மே 3 'ம் தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி...
சுஜாதா விருதுகள், உயிர்மை,
11 /29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்,
சென்னை-600018
தொலைபேசி- 044-24-993-448
--------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------