- Back to Home »
- கார் வாங்க ஆலோசனை , டிப்ஸ் »
- தகிக்கும் வெயிலும் வெளியூர் பயணமும்
Posted by : Sibhi Kumar SenthilKumar
Wednesday, May 11
அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகமாகிக்கொண்டிருப்பதை போலவே வெயிலின் தாக்கமும் தினம் தினம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த வெயிலினால் விரைவில் நாம் சோர்ந்துபோகிறோம். அதிலும் வெளியூர் பயணங்கள் நம்மை மிகவும் வாட்டுகிறது.
பேருந்துகளில் செல்லும்போதுதான் அவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒருசில சொகுசு பேருந்துகளை தவிர அனைத்து பேருந்துகளிலும் 'ரெக்சின்' இருக்கைகள் தான் உள்ளது. இவை மேலும் எரிச்சலாக இருக்கும்.
எனவே வெளியூர் பயணங்களுக்கு பேருந்துகளில் செல்வதை முடிந்த வரை தவிர்த்து கார் பயணங்களையே அனைவரும் விரும்புவீர்கள். இனிமேல் உங்களுக்கு சில டிப்ஸ்.
சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு...
வாடகை காரை பயன்படுத்துபவர்களுக்கு...
புதிதாக கார் வாங்குபவர்களுக்கு...
புதிதாக கார் வாங்குபவர்கள் அடர் நிறங்களான கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு ஆகிய நிறங்களை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் இந்த நிறங்கள் சூட்டை இழுத்துக்கொள்ளும். அதற்கு பதிலாக கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் நிறங்களான வெள்ளை, சில்வர், மெல்லிய நீல நிறம் ஆகியவை சிறந்தது.
எனவே வெளியூர் பயணங்களுக்கு பேருந்துகளில் செல்வதை முடிந்த வரை தவிர்த்து கார் பயணங்களையே அனைவரும் விரும்புவீர்கள். இனிமேல் உங்களுக்கு சில டிப்ஸ்.
சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு...
- உங்களின் பயணத்திற்கான வழித்தடங்களை முழுவதுமாக முன்கூட்டியே முடிவு செய்துவிடுங்கள்.
- நீங்கள் இரவு நேரத்தில் ஓட்டிய அனுபவம் இருந்தாலொழிய நீங்கள் இரவு நேரத்தில் ஓட்டாதீர்கள். வாடகை ஓட்டுநர்கள் அமர்த்தி நீங்கள் சுகமாக செல்லுங்கள்.
- வெயில் காரில் ஏ.சி. உபயோகிக்கும்போது மினிமம் ஸ்பீடிலேயே உபயோகிங்கள்.
- வெயிலில் காரை பார்க் செய்துவிட்டு நீண்ட நேரம் கழித்து வந்தீர்களானால், காரின் ஜன்னல்களை திறந்துவிட்டு ஏ.சி. யை கொஞ்ச நேரத்திற்கு ஆன் செய்யுங்கள். இதனால் அதிகரித்த காரின் தட்பவெட்பம் சமமாகும். பிறகு ஜன்னல்களை மூடிவிட்டு ஏ.சி. யை ஆன் செய்துவிட்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்.
- முடிந்தவரை அடிக்கடி வழியில் தென்படும் இயற்கை பழச்சாறுகளை பருகுங்கள்.
- ஏ.சி. பயன்படுத்தினால் மைலேஜ் கணிசமாக குறையுமென்பதால், இரவில் செல்லும்போது ஏ.சி. யை பயன்படுத்தாமல் ஜன்னல்களை திறந்துவிட்டு ஃபேன்களை பயன்படுத்துங்கள்.
வாடகை காரை பயன்படுத்துபவர்களுக்கு...
- முடிந்தவரை 'டிராவல் ஏஜென்சி'களிடமிருந்தே வண்டியை எடுங்கள். சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேர்வதோடு மட்டுமில்லாமல் தங்களால் வரமுடியாத சூழ்நிலைகளில் வேறு வண்டியை ஏற்பாடு செய்துவிடுவர்.
- உங்கள் குடும்பம் ஐந்து உறுப்பினர்களை கொண்டதாக வைத்துக்கொள்வோம். ஐந்து நபர்களுக்கு சரியாக இருக்கும் வண்டிகளை (அதாவது... இண்டிகா, அம்பாசிட்டர்...) எடுக்காமல் சற்று பெரிய காராக (அதாவது... சுமோ, இன்னோவா, டவேரா...) எடுங்கள்.
- வண்டியை புக் செய்யும்போதே ஏ.சி. வேண்டுமென்று சொல்லிவிடுங்கள். ஏ.சி. க்கு எவ்வுளவு பணம் அதிகமாக கொடுக்கவேண்டுமென்பதையும் முன்பே பேசிவிடுங்கள்.
புதிதாக கார் வாங்குபவர்களுக்கு...
புதிதாக கார் வாங்குபவர்கள் அடர் நிறங்களான கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு ஆகிய நிறங்களை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் இந்த நிறங்கள் சூட்டை இழுத்துக்கொள்ளும். அதற்கு பதிலாக கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் நிறங்களான வெள்ளை, சில்வர், மெல்லிய நீல நிறம் ஆகியவை சிறந்தது.
ஐந்து பேருக்கு அதிக இருக்கை கொண்ட வாகனமெடுக்க அவசியமென்ன என்பதை சொல்ல விட்டு விட்டீர்களே சார்... எனினும் சகல விதமானவர்களுக்கும் (சொந்த வண்டி, வாடகை வண்டி, புது வண்டி) உபயோகமாய் ஒரு புத்திசாலிப் பதிவுக்கு வாழ்த்த வேண்டியது அவசியம்.
ReplyDelete