- Back to Home »
- கார் வாங்க ஆலோசனை , தெரிந்துகொள்வோம் , வருங்காலம் »
- அமைச்சரின் இறப்பிற்கு காரணம் யார்?
Posted by : Sibhi Kumar SenthilKumar
Friday, June 3
வாசகர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிப்பெற்று, 'சுற்றுசூழல் அமைச்சராக' மே 16 'ஆம் தேதி பதவியேற்று, மே 23 'ஆம் தேதி உயிரிழந்த மரியம் பிச்சை அவர்களை 'பாவம்' என்று சொல்வதா, 'கொடுத்து வைக்காதவர்' என்று சொல்வதா?
மரியம் பிச்சையின் உயிரிழப்புக்கு பின் அதனை தொடர்ந்து நிறைய சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து சுமார் 40 கி.மீ. தள்ளி நடந்திருக்கும் இவ்விபத்திற்கு முன், அமைச்சரின் வாகனத்திற்கு பாதுகாப்பாக ஒரு எஸ்கார்டு வண்டியே அனுப்பப்பட்டுள்ளது.
இவ்விபத்தை வேறு விதமாக யோசிக்கும் போது விதி விளையாடிருப்பது நன்றாக தெரியும். திருச்சியில் விழாவை முடித்துவிட்டு வழக்கமான தனது 'ஸ்கார்பியோ' காரில்தான் சென்னைக்கு பயணத்தை தொடர்ந்தார். நடு வழியில் 'இனோவா' காருக்கு மாறிவிட்டு 'ஸ்கார்பியோ'வை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். அடுத்த பத்தாவது நிமிடம்... மணியாகிவிட்டது என்று வேகமாக சென்றுகொண்டிருந்த 'இனோவா' முன்னே சென்றுக்கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் இடித்து விபத்துக்குள்ளானது.
சற்றே விரிவாக 'இனோவா'வின் டிரைவர் ஆனந்த் சொல்லும்போது, "மணியாகிவிட்டது என்று வேகமாக செல்லும்போது முன்னே சென்று கொண்டிருந்த 'கன்டெய்னரை' முந்தும் விதமாக ஹாரனை அடித்து கொண்டே சாலையின் வலதுபுறத்தில் அதை முந்த முயன்றேன். திடீரென்று அந்த கன்டெய்னரும் வலதுபுறமாக திரும்பியதால் அமைச்சர் உட்கார்ந்திருந்த, அதாவது காரின் இடதுபுறத்தில் இடித்தது" என்கிறார்.
இந்த விபத்தை பார்த்த சாட்சி, இடித்தது 'டிப்பர்' லாரி என்று சொன்னார். எனவே சி.பி.ஐ. டோல்கேட்டுகளில் இரண்டு வகையாகவும் விசாரித்து வந்தனர். இவ்விரண்டு வகை லாரிகள் அனைத்தையும் விசாரித்த பின் அனைத்து லாரிகளையும் விசாரிக்க துவங்கினர்.
இந்நிலையில் இடித்த லாரியை மே 31 'ஆம் தேதி மேற்கு வங்காளத்திலுள்ள கடக்பூர் என்கிற இடத்தில் சுற்றி வளைத்தனர். ஆனால் இதில் தான் நிஜ குழப்பமே உள்ளது. AP 16 TB 9744 என்ற ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரை கொண்டிருந்த அந்த லாரி 'கன்டெய்னரோ', 'டிப்பரோ' கிடையாது. அது 'டாரஸ்' வகையை சேர்ந்தது!
'டாரஸ்' வகை லாரி |
பிடிபட்ட லாரி! |
இந்த குழப்பங்களை தவிர்த்து, இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்த இரண்டு பேரை பற்றி உங்களுக்கு சொல்கிறேன்...
முதல் மற்றும் முக்கிய காரணம் அமைச்சர் மரியம் பிச்சைதான்! அட.. சத்தியமா அவர்தாங்க. ஏன்னா, சாதாரண குடிமகன்களே இன்று, 'காற்றுப்பைகள்' இல்லாத வாகனங்களை பயன்படுத்துவதில்லை. மரியம் பிச்சை இவ்வகை வண்டியை பயன்படுத்தியிருந்தால், இந்நேரம் அமைச்சரவையில் உட்கார்ந்துகொண்டிருப்பார்." 'காற்றுப்பை' என்றால் என்ன?" என்பவர்களுக்கு எனது முந்தைய கட்டுரையை பாருங்கள்_ காற்றிருக்கும்போதே தூற்றிக்கொள்!
அடுத்த காரணம் வேகம். சற்று பொறுமையாக போயிருந்தால், மரியம் பிச்சை படுகாயங்களோடு தப்பியிருப்பார். அவர்கள் சென்ற வேகத்தை சொல்லவேண்டுமானால் கீழுள்ள படத்தை பாருங்கள். இடித்த பின் பிரேக் அடித்த உடன் வேகமாக வந்த கார் நிற்கும்போது ஏற்பட்ட டயரின் தடங்களை பாருங்கள்.
இதன் மூலம் நான் கூறிக்கொள்வது என்னவென்றால், மிதமான வேகமோடும், பாதுகாப்பான வண்டியையோடும் நாம் பயணிக்க வேண்டும் என்பதே!
வாழ்க்கை நிலையற்றது என்பதற்கு உதாரணமாக கீழுள்ள படங்கள் இருக்கின்றன.
ஒரு மணிநேரத்திற்கு முன்னால்... |
...பின்னர் |
மிதமான வேகமோடும், பாதுகாப்பான வண்டியையோடும் நாம் பயணிக்க வேண்டும் ....
ReplyDeleteபிரச்னைகளை அவரவர் கோணத்தில் அணுகுவதால் பலதரப்பட்ட தெளிவுகளும் புரிதல்களும் கிடைக்கின்றன. தங்களது அலசலும் கவனிக்கத் தக்கதே.
ReplyDelete