- Back to Home »
- சந்தேகங்கள் »
- நான் தொடரலாமா???
Posted by : Sibhi Kumar SenthilKumar
Wednesday, February 2
இது வாசிக்கும் அனைவருக்குமான பொது கடிதம்....
02-02-2011
நெய்வேலி
இந்த ப்ளாக்'ல நாம எப்போதும் கார் மற்றும் அதற்கு சம்பந்தமான போஸ்ட் மட்டுந்தான் போடனும். ஆனா வாழ்க்கையில ஏதாவது ஒரு தருணம் ஏற்பட்டால் மட்டுமே மற்ற விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நினைத்து வந்தேன்.
ப்ளாகில் சொந்த வாழ்க்கையில் நடந்தவை மற்றும் நிதர்சன உண்மைகளையும் எழுத 'அனானி'ஆக (anonymous) இருந்தாலொழிய எழுத முடியாது என்பது என் கருத்து. அதற்கு சில உதாரணங்களாக 'இட்லி வடை' (http://idlyvadai.blogspot.com/), மற்றும் ஏகப்பட்டதை சொல்லலாம்.
அதற்காக நான் ஒரு பலப்பரிட்சை வைத்தேன். ஒரு புது கூகிள் கணக்கு உருவாக்கி ஒரு ப்ளாகை உருவாக்கினேன். இதற்கு முன்னால் நான் இரண்டு ஆங்கில வலைப்பூக்களை வைத்திருந்தேன். அதனால் என் வாழ்க்கையில் நடந்தவற்றை நான் உருவாக்கிய புதிய வலைப்பூவில் தாய்மொழி தமிழில் எழுத விழைந்தேன். அந்த ப்ளாகின் பெயர் 'தெரியாது'. (அதை நீங்கள் எங்கு தேடினாலும் உங்களுக்கு கிடைக்காது... டெலிட் செய்துவிட்டேன்!!!)
அதன் பிறகு வெறுத்துபோய் இன்னொரு ஆங்கில வலைப்பூவை உருவாக்கினேன். என்னுடைய ஆங்கில வலைப்பூக்களை யாரும் தொடர்ந்து வாசிப்பதில்லையே என்று நினைத்து அழிக்க முற்பட்டாலும் அவை வேறு எந்த தருணத்திலும் யாருக்காவது பயன்படும் என்று மனம் தடுத்தது. ஏனென்றால் அவை சமகால நிகழ்வுகளை விமர்சிப்பவை அல்ல.
ஆனால் என் தந்தை மற்றும் தாயினுடைய தமிழ் வலைப்பூக்களில் டிசைன் செய்வதும் சில சமயம் அவர்கள் எழுதியதை போஸ்ட் செய்யும்போதும் தமிழார்வம் என்னுள் வளர்ந்தது. ஒருமுறை என் தாய், "நீ ஆங்கிலத்தில் எழுதும் விஷயத்தை ஏன் தமிழில் எழுதகூடாது?" என்று கேட்டார். பின், "ஆங்கிலத்தில் கார்களைப் பற்றி எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தமிழில் யாரும் இவ்வுளவு விவரத்தோடு எழுதுவதில்லை. எனவே உனக்கு தெரிந்தவற்றை எளிய முறையில் மற்றவர்களுக்கும் தெரியவை" என்றார்.
அவர் சொல்லி விட்டு உள்ளே சென்றார். அம்மா அடுத்த ஐந்து நிமிடத்தில் வரும்போது நான் வலைப்பூவை உருவாக்கிவிட்டேன். அவர்தான் 'வட்டங்களில் சுழலுது வாழ்க்கை' என்ற தலைப்பினை பரிந்துரைத்தார். தமிழ் வலைப்பூக்களில் ஏற்கனவே பரிட்சயம் இருப்பதால் முதலிலே தமிழ் திரட்டிகளில் என்னுடைய முதல் பதிவை இணைத்தேன். முதல் பதிவே எனக்கு ஓரளவுக்கு பேர் வாங்கி தந்தது. (http://sibhikumar.blogspot.com/2010/11/blog-post.html)
என்னுடைய பதிவுகளுக்கு வரவேற்பு இருந்தாலும் அவற்றை விட மக்களுக்கு தலையாய பிரச்சனைகள் உண்டு. அதனால் சிலரைத்தவிர என்னுடைய பதிவுகளில் முழுமையாக ஒத்துபோக முடிவதில்லை என்ற உண்மை என்னை தாக்கியது.
எனவே நான் வாழ்க்கையில் நடப்பவை மற்றும் நகைச்சுவையான பதிவுகளையும், தொலைகாட்சி தொடரில் வரும் விளம்பரங்களை போல, எழுதலாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.
எனவே உங்கள் விருப்பத்தை ஓட்டளிக்கும் மூலமாக மட்டுமில்லாமல் தங்கள் பொன்னான வார்த்தைகளால் கருத்துரை இடுங்கள்.
என்றென்றும் தங்கள் அன்புள்ள,
செ.சிபிக்குமார்
தொடருங்கள். எல்லோரை போல் எழுதாமல் புதுமையாக கார்களை பற்றி எழுதுகிறீர்கள்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள். உங்களை போன்ற பதிவர்கள் தமிழ் வலை உலகத்திற்கு தேவை.
எவ்வளவோ மொக்கை எழுத்துகளை வாசித்து வருகிறோம். உங்கள் எழுத்துகளை புது அனுபவமாக வாசிக்க மாட்டோமா. :)
Go ahead... dont stop
ReplyDeleteதலைவா... நான் இதுபற்றி உங்களிடம் ஏற்கனவே கூறிவிட்டேன்... பல்சுவைப் பதிவுகள் எழுதுங்கள்...
ReplyDeleteஎதையும் எதிர்பாராமல் ஒரு சேவையாகவும் மனதிலுள்ளவற்றை பகிரவும் மட்டுமே எழுதுங்கள்...
ReplyDeleteஇப்படி பலர் எழுதுகின்றனர் . " என் பணி எழுதுவதே " என.
இத்தகைய நேர்மையான எண்ணத்தில் கிடைக்கும் மனதிருப்தியை அளவிட முடியாது.