- Back to Home »
- பாடல்கள் பலவிதம் »
- பாடல்கள் பலவிதம்_ என்னை வசீகரித்தவை...
Posted by : Sibhi Kumar SenthilKumar
Wednesday, May 18
வாசகர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். 'எப்பவும் கார், இல்லை ஏதாவது பொதுவான விஷயத்தை பற்றி சொல்லும் இவன் இப்போது திடீரென்று பாடல்கள் பக்கம் வருவது ஏன்?' என்று நினைப்பது உங்கள் கண் மூலமாக எனக்கு தெள்ள தெளிவாக தெரிகிறது.
எல்லோருக்கும் பொதுவாக சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைத்து காலக்கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பிடிக்கும். சில பாடல்களை கேட்டால் அவர்களுக்கே உரிய பழைய ஞாபகங்கள் தலைதூக்கும். சிலருக்கு இளையராஜா அவர்கள் இசையமைத்த பாடல்களை கேட்கும்போது அவர்களின் இளமை காலம் ஞாபகத்திற்கு வந்து செல்லும். சிலருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களை கேட்டால் மெய்மறந்து போய்விடுவார்கள்.
சிலர் தனக்கு குறிப்பிட்ட இசையமைப்பாளரை தான் பிடிக்கும். எனவே அவர் இசையமைத்த பாடல்களை மட்டும்தான் கேட்பர்.
என்னுடைய பாலிசி என்னவென்றால் ஒரு பாடலில் இசை, வரிகள், படியவருடைய குரல் ஆகியவை நன்றாக இருக்குமேயானால் நான் அந்த பாடலுக்கு அடிமை. ஆனால் இந்த முடிவு எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு மாதத்தில் மாறிவிடும்! அப்போது புதிதாக வெளிவந்த பாடல்களின் வரிகளை என் வாய் முனுமுனுக்கும்.
சில பாடல்கள் என்னை மெய்மறக்க செய்துவிடும். குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் என்னை கவரத் தவறுவதில்லை. எனவே எனக்கு பிடித்த பாடல்களை அவற்றின் வரிகளையும், அதில் எனக்கு பிடித்த வரிகளையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
சமீபத்தில் வெளிவந்த படமான 'எங்கேயும் காதல்' என்ற திரைப்படத்தில் வரும் தீம் பாடலான 'எங்கேயும் காதல்' என்கிற பாடலை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.(எனக்கு பிடித்த வரிகளை ஹைலைட் செய்திருக்கிறேன்)
இசையமைப்பாளர்; ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்; ஆலாப் ராஜு, ராணினா ரெட்டி
பாடல் வரிகள்; கவிஞர் தாமரை
"எங்கேயும் காதல்
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல்
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே
கடற்கரையில் அதன் மணல் வெளியில்அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும்
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே
கண்கள்தான் பின்பு தூங்காதே
எங்கேயும் காதல்
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல்
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்த்திடுமே
முகங்களையோ உடல் நிறங்களையோ
இது பார்க்காதே .. பார்க்காதே
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூச்செண்டால் பூமி திண்டாடும்
எங்கேயும் காதல்
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல்
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே"
//கடற்கரையில் அதன் மணல் வெளியில்
ReplyDeleteஅக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்//
//யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூச்செண்டால் பூமி திண்டாடும்// varigalil suzhaluthu manasu.... good choice!