- Back to Home »
- கார் வாங்க ஆலோசனை , தெரிந்துகொள்வோம் »
- தெரிந்துகொள்வோம்- Body Types
Posted by : Sibhi Kumar SenthilKumar
Sunday, November 14

முதலில் வருவது Hatch Back...
கார் வாங்கவேண்டும் என்று தோன்றியவுடன் நம் நினைவுக்கு வருவது இவ்வகை கார்களே. எல்லா நாடுகளிலும் இவ்வகை கார்கள் தவழும். இவையனைத்தும் 4-5 பேர் பயணிக்கும் கார்கள்.


ஆனால் சிலசமயம் இரண்டு பேர் (ஓட்டுபவர் உட்பட) பயணிக்கும் கார்களும் இவற்றில் அடங்கும். முதன்முதலில் காரை ஓட்டுபவருக்கும் மிகவும் எளிதாக அமைவது இவ்வகை கார்களின் சிறப்பு. ஆனால் ஊருக்கு குடும்பத்துடன் போகும்போது, அங்கே இருப்பவர் "நானும் உங்களுடன் வருகிறேன்" என்றால் 'சட்னிதான்'. நகரத்தில் வாழ்பவர்களுக்கு ஏற்றமானதாக இருக்கும்.
காரின் பின்புறம் அமுங்கி இருப்பதால் இதற்கு Hatch Back என்று பெயரிட்டனர்.
அடுத்தது Sedan..
Sedan' க்கும் Hatch Back' க்கும் சிறிய வித்தியாசம் தான். Hatch Back' இன் பின்புறத்தை கொஞ்சம் 'இழுத்த' மாதிரி இருக்கும். மத்த எல்லா வசதியும் Hatch Back போலதான். Sedan' இல் உள்ள ஒரு வசதி- பின்புற ஸ்டோரேஜ் இடம் பெரிதாக இருக்கும்.


எ.கா. Tata Motors 'இண்டிகா' மற்றும் 'இண்டிகோ' வையும் இதுமாதிரி வெளியிட்டு பெரும் வெற்றியடைந்தார்கள். தற்போது வெளியிடப்பட்ட 'இண்டிகா விஸ்டா' மற்றும் 'இண்டிகோ மான்சா' வையும் இதுப்போல வெளியிட்டுள்ளார்கள்.
அடுத்து வருவது SUV...
"இந்தியா ஒரு SUV மற்றும் MUV தேசம்" - இது கார் விமர்சகர்களின் ஸ்டேட்மென்ட். அந்த அளவிற்கு இந்திய மக்கள் விரும்புவது இவ்வகை கார்களே. SUV என்றால் 'Sport Utility Vehilcle'.


பார்ப்பதற்கு பெரியதாக இருக்கும் இவ்வகை கார்கள், 2 row மட்டுமே இருக்கும். பின்னால் நிறைய இடம் வெற்றிடமாக இருக்கும். இவை பெரும்பாலும் Buisness, Finance ஆகிய துறைகளில் இருப்பவர்கள் வைத்திருப்பார்கள்.
அது என்ன MUV?
MUV என்றால் 'Multi Utility Vehicle'. அதாவது 'எப்படி வேணாலும் பயன்படுத்தலாம்' வகை கார்கள். நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு MUV, Omni. இந்த காரை பின் சீட்டில் லக்கேஜ் 'ம் வைத்து ஓட்டலாம்.


3 row இருக்கும். பெரும்பாலும் 7-8 பேர் தாரளமாக அமரலாம்.
மேற்சொன்ன நான்கு வகைகள் தான் அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படும் வகைகள். இதை தவிர Convertibles, Roadster, Coupe, MPV, Wagons, Pick ups ஆகிய வகைகள் உண்டு. MPV 'ம் MUV'ம் ஒன்றுதான்.
இன்றைய படம்;
![]() |
Bugatti Veyron- உலகில் விலை அதிகமான கார்- 23 கோடி ரூபாய் |
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
கார் பற்றியதான உங்களது விரல் நுனித் தகவல்கள் வியப்பளிக்கின்றன. படிப்பிலும் இப்படியே சிறப்படைய வாழ்த்துகள்!
ReplyDeleteஒரே குழப்பமா இருக்கும்.இப்பதாங்க புரிஞ்சது.நன்றிங்க.தொடர்ந்து எழுதுங்க... :)
ReplyDelete