Posted by : Sibhi Kumar SenthilKumar Monday, November 15

இன்று அனைவருக்கும் போக்குவரத்து வாகனங்கள் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு விஷயமாக இருக்கிறது. அலுவலகத்திற்கு செல்ல, வார விடுமுறையை கொண்டாட என்று பலவகையான தேவைகள் இருக்கிறது.

நீங்கள் நகரத்தில் உங்கள் அலுவலகத்திற்கு டிராஃபிக் ஜாம்' ல் தவழ்பவரா? உங்களுக்கான பதிவிது.

நம் அனைவருக்கும் E-Bike பரிட்சியமானது. இ-கார்களை கேள்விப்பட்டிருக்கிறோம். அவை பெரும்பாலும் வெளிநாட்டில் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிலும் ஒரு கார் இருக்கிறது. அதுதான் Maini REVAi.



இது ஒரு இரண்டு பேர் அமர்ந்து செல்லும் கார். இதனுடைய battery, 48V, 200A lead acid வகையை சார்ந்தது. எட்டு மணிநேரம் சார்ஜ் போட்டால் முழு பாட்டரியும் சார்ஜ் ஆகிவிடும். இதனுடைய டாப் ஸ்பீட் 80kmph.
இதனுடைய இன்னொரு சிறப்பு- பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. அதுமட்டுமில்லாமல் லக்கேஜ் 'க்கும் நிறைய இடம் இருக்கிறது. தேவையென்றால் ஒரு சீட்டை மடக்கி கொள்ளலாம். இப்போது சில வசதிகளைப் பார்ப்போம்;
  • Gear கிடையாது; Clutch கிடையாது. Fully ஆட்டோமேடிக்.
  • Tubeless Tyres
  • Leather seats, luxury carpets, floor mat
  • AC உண்டு
  • ஸ்டீரியோ சிஸ்டம்/ FM சிஸ்டம்
  • ஆறு கலர்களில் உண்டு- கருப்பு, வெள்ளை, சிவப்பு, சில்வர், நீலம், மஞ்சள்.
இதனுடைய விலை ரூ.3,40,000 - ரூ.4,16,000 வரை உள்ளது. பெண்கள் எளிதாக பயன்படுத்தலாம். பார்க்கிங் செய்வது மிகவும் எளிதானது.

இன்றைய படம்;

பளபளக்கும் இந்த காரினுடைய விலை ரூ.64,40,000. முழுவதும் வைரம் மற்றும் வெள்ளை தங்கத்தால் ஆனது (இஞ்சின் உட்பட!!!)
 //உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//

{ 2 comments... அவற்றை கீழே படியுங்கள். நீங்களும் சொல்லலாமே }

  1. nice look of above given pictures of cars
    Today, transport vehicles are an essential part of life. There are a variety of requirements to celebrate the weekend to go to the office.
    http://www.gari.pk/used-vehicles/

    ReplyDelete

Leave your Comments

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -