Posted by : Sibhi Kumar SenthilKumar Monday, April 4

அனைத்து வாசகர்களுக்கும் எனது உகாதி நல்வாழ்த்துக்கள். இன்று ஒரு பல்சுவை பதிவு.

எனக்கு எப்போதும் பழைய வார இதழ்களை படிக்க மிகவும் விருப்பமாக இருக்கும். அதுபோல நேற்று போன வருடத்து 'ஆனந்த விகடனை' படிக்கும்போது ஒரு சுவாரசியமான நபரைப் பற்றி படித்தேன். அவர் ஒரு பாடகர். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டில் பிறந்த அவர் 'தான் அனைத்து நாட்டு மக்களுக்கும் சொந்தமானவர்' என்றுதான் அடையாளப்படுத்தி கொள்கிறார். ஆமாம்... உண்மையிலே இவர் ஒரு உலகம் சுற்றும் வாலிபர்!

இவர் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு மேடைகளில் பாடுபவர் அல்ல. மதுரைக்காரரான இவர் ஆங்கிலத்தில் தான் பாடுவார்! அவரது ஆங்கிலம் எளிதாக இருக்கும். பார்க்கும் நமக்கு ஆங்கில அறிவு தேவையில்லை. பாடலிலுள்ள துள்ளல் இசையும் இவரது ஆட்டமும் மிகவும் நன்றாக இருக்கும். youtube'இல் இவர் எந்த வீடியோவை ஏற்றினாலும் கண்டிப்பாக ஒரு இலட்சம்பேர் கண்டு ரசிப்பர்.

"எங்கள் ஊருக்கு வந்தீர்களாமே... ஏன் எங்களிடம் இவ்விஷயத்தை முன்னரே தெரிவிக்கவில்லை?" என்று கோபமாக சொல்லும் ரசிகர்கள் இவருக்கு உண்டு! சில சினிமா நடிகர்கள் கூட இவரின் ரசிகர்கள்.

இவருக்கு பாடல்கள் பாடுவது மட்டும் வேலையில்லை. பிறருக்கு தெரியாத விஷயங்களை சொல்லிக் கொடுப்பதும் இவர் செய்யும் வேலை. இவர் தனி மரமல்ல. தோப்பு! ஆமாங்க.. இவர் தனி ஆளாக செயல்படுவதில்லை. இவருக்கென்று தனியாக ஒரு நிறுவனம் உண்டு. அதுதான் WWW.

என்னடா இவன்.. ரொம்ப நேரமா பெயரையே சொல்லலியே என்று பார்க்கிறீர்களா... ஸ்... சாரி... அவர்தாங்க "வில்பர் சற்குணராஜ்".


இப்ப கேளுங்க, "அது என்ன WWW?"... WWW- Wilbur World Wide! அவருடைய வலைதளத்தின் முகவரி- http://www.wilbur.asia/  வெளிநாட்டவர்கள் இந்தியாவில் பழக வேண்டிய விஷயங்கள், இந்தியர்கள் வெளிநாட்டில் பழக வேண்டிய விஷயங்களையும் இவர் செயல்முறை விளக்கங்கள் கொடுக்கிறார்.

செயல்முறை விளக்கங்கள் கொடுப்பதில் இவரை மிஞ்ச ஆளில்லை. ஆனால் சில நேரம் மனிதர் கொஞ்சம் ஓவராக போய்விடுவார். எ.கா. பாம்பே டாய்லெட்-உபயோகப் படுத்துவது எப்படி? , வெஸ்டர்ன் டாய்லெட்-உபயோகப் படுத்துவது எப்படி?



மிர்ச்சி சிவாவுடன் வில்பர்

அவரது சில காணொளிகளை இங்கே பதிவேற்றியுள்ளேன் பாருங்கள்.

                       Love Marriage  மிகவும் பிரபலமான இவரது பாடல் இது. 


Blog Song   வலைப்பூவைப் பற்றிய இவரது பாடல்.



மாட்டுவண்டியை ஓட்டுவது எப்படி?  நான் மிகவும் சிரித்த ஒரு காணொளி.


மேலும் இவரது காணொளிகளை காண... http://www.youtube.com/user/wilbursargunaraj

Leave a Reply

Leave your Comments

Subscribe to Posts | Subscribe to Comments

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -