- Back to Home »
- Apache , TVS , தெரிந்துகொள்வோம் »
- TVS Apache RTR 180 ABS - ஓர் அறிமுகம்
Posted by : Sibhi Kumar SenthilKumar
Wednesday, March 2
பாதுகாப்பு அம்சங்களில் 'சீட் பெல்ட்' , 'காற்றுப்பை' போன்ற உபகரணங்கள் எவ்வுளவு முக்கியமோ அவ்வுளவு முக்கியம் எ.பி.எஸ் (ABS). இந்தியாவில் எ.பி.எஸ் என்னும் தொழில்நுட்பம் கார்களில் மட்டும் தான் உபயோகித்து கொண்டிருந்தனர். வெளிநாட்டிலும் ரேஸ் பைக்குகளிலும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளிலும் தான் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் டி.வி.எஸ் புதுமையாக ஒரு சிறிய பைக்கில் இந்த தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது.
'அப்பாச்சி' அனைவரும் விரும்பும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக். கண்ணை கவரும் தோற்றமும் குறைவான விலையும் இதனை வெற்றிப்பெற செய்தது. இதனால் சுமார் இரண்டரை இலட்சம் 'அப்பாச்சி'கள் இந்தியாவெங்கும் விற்பனையாகியுள்ளது.
எ.பி.எஸ் என்ற தொழில்நுட்பத்தின் பயன் என்ன?
எ.பி.எஸ் (Antilock Braking System) என்ற தொழில்நுட்பத்தை வண்டியின் பிரேக்குகளில் பொருத்துவார்கள். வழுக்கும் தரைகளிலோ சரிவான மலைச்சரிவுகளிலோ சாதாரண பிரேக்குகளை உபயோகித்தால், நாம் சறுக்கி விழுந்துவிடுவோம்.
சரியாக சொல்லவேண்டுமென்றால், வண்டியின் பிரேக்குகளில் ஒரு சென்சார் பொருத்தபட்டிருக்கும். நாம் பிரேக்குகளை உபயோகிக்கும்பொழுது பாதைக்கு ஏற்ற மாதிரி வண்டியை நிறுத்தும்.
புதிய 'அப்பாச்சி' தோற்றத்தில் வித்தியாசங்கள் இருக்காது. ஒரு ஓரத்தில் ABS என்ற முத்திரை இருக்கும். வேண்டுமென்றால் நாம் எ.பி.எஸ் ஐ ஆஃப் கூட செய்துகொள்ள ஒரு பொத்தான் அளிக்கப்பட்டிருகிறது.
புதிய 'அப்பாச்சி' மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியிடும் எண்ணத்தில் டி.வி.எஸ் உள்ளது. சாதாரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கொட்டி கிடக்கும் மணல் நமக்கு எமனாகும் தருணத்தை இந்த தொழில்நுட்பம் முற்றிலும் தகர்த்தெறிகிறது. இதனுடைய விலையினை பற்றி என்னும் அறிவிக்கப்படவில்லை. வெளிவந்த பிறகு இதன் விலையுடன் நாம் கலந்தாலோசிப்போம்.
கீழ் கண்ட வீடியோவை பார்த்தால் உங்கள் சந்தேகங்கள் தீரும்...
ஒரு கார் ஷோரூம் வைத்திருப்பவருக்கு கூட இவ்வளவு தகவல் தெரிந்திருக்குமா...???!!!
ReplyDelete