Posted by : Sibhi Kumar SenthilKumar Friday, November 7

உலகில் இன்று அனைத்து துறையிலும் கலக்கிக்கொண்டிருப்பதை பற்றி தான் சொல்லப் போகிறேன். ஃபேன், ஏ/சி, சினிமா எனத் தொடங்கி மனிதர்கள் வரை சகலத்திலும் தனது மூக்கை நுழைத்து ஆட்டிப்படைக்கிறது. அட.. அதாங்க.. 'ரேட்டிங்'

     முன்பெல்லாம் ஒரு சினிமா எடுத்தால், ஹிட்டோ ஃப்ளாப்போ போட்ட முதலீட்டை எடுத்துவிடலாம். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. முதல் காட்சியை திரையிட்டவுடன், வலைத்தளம், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சகலத்திலும் விமர்சிக்கப்படுகிறது. கடைசியில் முக்கியமாக அவர்களது 'ரேட்டிங்'ஐ யும் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அந்த ஒரு வரியில் படத்தின் எதிர்காலம் (அதாங்க வருமானம்) தெரிந்துவிடும். 

     "அடேங்கப்பா.. ஆனா இந்த 'ரேட்டிங்' மேட்டரு நம்ம வாகனத்துக்கு மட்டும் தாம்பா இல்ல" என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பா இருக்குங்க.   முக்கியமாக பாதுகாப்பு அம்சங்களை சோதிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்டது தான் 'யூரோ என்காப்' (Euro NCAP), 'க்ளோபல் என்காப்' (Global NCAP). இந்த நிறுவனங்கள் கார்களை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, பிறகு அதற்கு ஒரு ரேட்டிங் கொடுப்பார்கள்.



     பெரும்பாலும் கார் தயாரிப்பாளர்கள், நல்ல ரேட்டிங் வந்தால் அதை பெருமையாக பறைசாற்றுவார்கள். இல்லையென்றால் கமுக்கமாக இருந்துவிடுவார்கள்.

     'க்ளோபல் என்காப்' தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஒரு காரை சோதனை செய்து தங்கள் முடிவுகளை வழங்கியதில் சர்ச்சைகள் ஆரம்பமாகியிருக்கிறது.

     1986 ல் நிறுத்தப்பட்ட நிறுவனமான 'டட்சன்' பேரைக்கொண்டு பிரபலமான ஜப்பான் நிறுவனமான 'நிஸான்' கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய கார், 'டட்சன் கோ'. இதன் ஆரம்ப விலை ரூ.3.70 லட்சம் (ஆன்-ரோட், சென்னை). நீண்ட நாட்களாக மார்கெட்டில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் மாருதி ஆல்டோவிற்கு போட்டியாக களம் இறக்கப்பட்டது. 'இந்தியாவில் முதன்முறையாக அறிமுகபடுத்தியாச்சு. இந்தோனேசியா மற்றும் ஆஃப்ரிக்காவில் அறிமுகபடுத்தலாம்' என கனவு கண்டுகொண்டிருந்த நிஸான் இப்பொழுது ஸ்தம்பித்துள்ளது.

     மேட்டருக்கு வருவோம். க்ளோபல் என்காப் நிறுவனம், டட்சன் கோ வை சோதித்துவிட்டு தந்த ரேட்டிங் 0/5. அதாங்க.. முட்டை. அதுமட்டுமல்லாமல் அந்த நிறுவனம் நிஸான் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் சாராம்சம் இதுதான். 'இந்தியாவில் உங்களது டட்சன் கோ வின் விற்பனையை உடனே நிறுத்துங்கள்'.

டட்சன் கோ

     இந்த டட்சன் கோ அதன் தாய்நாடான ஜப்பானில் விற்கப்படவில்லை என்பதை குறித்துக்கொள்ளுங்கள். எதெற்கெடுத்தாலும் சீன தயாரிப்பு பொருட்களை கூறுபவர்கள் ஒருமுறை சீனாவிற்கு சென்று பாருங்கள். அங்கே விற்கப்படும் பொருட்களின் தரம் மிகவும் உயர்வாக இருக்கும். அனால் இங்கு மிகவும் சுமாராக இருக்கும். அனைத்து நாடுகளின் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டது இந்தியா. 

     சரி. இவனுங்கதான் இப்படி. மற்ற கார்கள்?? டாட்டா நானோ, ஹுண்டாய் ஐ10, மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ, மாருதி ஆல்டோ 800 என்று அனைத்து கார்களும் எடுத்தது முட்டை தான். இவை அனைத்தும் 60 Kmph வேகத்தில் சோதிக்கபட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில் வாகனங்கள் விற்கப்பட கட்டுபாடுகள் மிகவும் தளர்வாக இருக்கிறது என்பதையே இவை சுட்டிக்காட்டுகிறது.

டாட்டா நானோ

ஹுண்டாய் ஐ10

மாருதி ஸ்விஃப்ட் 

ஃபோர்டு ஃபிகோ

மாருதி ஆல்டோ 800


     உலகளவில், இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதற்கு காரணங்கள் 
 1.குப்பையான கார் 
 2.தகுதியில்லாத ஓட்டுநர்கள் 
 3.தரமில்லாத சாலைகள் 
 4.விதிமுறை மீறல்கள் 

     அரசாங்கத்தை குறை சொல்வதற்கு பதில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், இவற்றில் மூன்று விஷயங்களை நாமே மாற்றிடலாம். நேர்மையாக ஓட்டுநர் உரிமத்தை வாங்குங்கள். கார் வாங்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் விலை, டிசைன் பார்ப்பதற்கு முன்னர் பாதுகாப்பு அம்சங்களான ஏர்பேக், ஏ.பி.ஸ், இ.பி.டி போன்றவை இருக்கிறதா என்று பாருங்கள். (பார்க்க-http://sibhikumar.blogspot.com/2011/02/blog-post_21.html). எக்காரணத்தை கொண்டும் சாலை விதிமுறைகளை மீறாதீர்கள். இவை அனைத்தையும் நாம் மாற்றிக்கொண்டால் 80% விபத்துக்களை தவிர்க்கலாம். 

  'பாத்து சூதானமா நடந்துக்கோங்க சாமீ !!"  

இதற்கு சம்பந்தமாக எனது முந்தைய பதிவுகள்:

//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
     

Leave a Reply

Leave your Comments

Subscribe to Posts | Subscribe to Comments

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -