- Back to Home »
- வருங்காலம் »
- வித்தியாசமாக இருக்கவேண்டுமா?
Posted by : Sibhi Kumar SenthilKumar
Sunday, October 26
வாரத்திற்கு ஒரு பதிவு என ஒரு முடிவோடு இறங்கிய நான், தேர்வு குறுக்கே வந்ததால் எழுதுவதை சற்று தள்ளிவைத்திருந்தேன். என்னுடைய கல்லூரியில் ஏதேனுமொரு சங்கத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டும். அவர்கள் அளித்த நூற்றுக்குமேற்பட்ட சங்கங்களின் பெயர்களில் என்னை மிகவும் கவர்ந்தது Event Managers Club எனப்படும் விழா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தில் இணைந்தேன். தேர்வு முடிந்த பிறகு எனது கல்லூரியில் நடக்கவிருக்கும் ஒரு பயிற்சி பட்டறையை நடத்தி தருமாறு என்னுடைய பேராசிரியர் கேட்டார். எனவே என்னுடைய நண்பர்கள் மூவருடன் சென்றேன்.
வெளியே வந்த பையனின் கைகளில் ஒரு ஆங்கில நாவல். வெளியுலகத்தை ஒரு கணமும் பாராமல் தீவிரமாக படித்துக்கொண்டிருந்தான். நான்காவது படிக்கும் அந்த சிறுவனின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை கண்டு நான் மிகவும் வியந்தேன். கொஞ்ச நேரம் கழித்து, அவனிடம் பெயரை கேட்டோம். புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமல் கூறினான். "ஹர்ஷித்".
பொதுவாக பயிற்சி பட்டறை என்றால் மாணவர்களே வருவார்கள். ஆனால் இந்த பட்டறைக்கு பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்தான் வந்திருந்தனர். முதலில் அவர்களுக்கு பயிற்சியின் அடிப்படைகளை அறிமுகம் செய்துவிட்டு முதன்மை பயிற்சியாளரிடம் மேடையை ஒப்படைத்தோம். பிறகு அவர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகளில் இறங்கினோம்.
கல்லூரியின் பெரும்பாலான அறைகள் குளிரூட்டப்பட்டிருந்தாலும் அன்று நிறைய பட்டறைகள் நடந்ததால் எங்களுக்கு கிடைத்ததோ சாதாரண அறை. நாங்கள் வெளியே ஏற்பாட்டுகள் அனைத்தையும் முடித்து விட்டு ஆசுவாசமாக உட்கார்ந்திருந்தோம். அறையிலிருந்து வெளியே வந்த ஒரு பெண் பேராசிரியர் (எங்கள் கல்லூரியல்ல) தமது பையனை எங்களிடம் விட்டு சென்றார். உள்ளே காற்றோட்டம் சரியாக இல்லை என்று காரணம் சொல்லி அந்த பையனை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்றார்.
வெளியே வந்த பையனின் கைகளில் ஒரு ஆங்கில நாவல். வெளியுலகத்தை ஒரு கணமும் பாராமல் தீவிரமாக படித்துக்கொண்டிருந்தான். நான்காவது படிக்கும் அந்த சிறுவனின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை கண்டு நான் மிகவும் வியந்தேன். கொஞ்ச நேரம் கழித்து, அவனிடம் பெயரை கேட்டோம். புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமல் கூறினான். "ஹர்ஷித்".
பிறகு என்னுடைய பேராசிரியர் வந்து எங்களை இன்னொரு அறைக்கு சான்றிதழ்கள் எழுதுவதற்காக அழைத்து சென்றார். நாங்கள் சென்றால் அந்த சிறுவன் தனியாக இருப்பானே என்று அவனையும் அழைத்தார். இப்பொழுது புத்தகத்திலிருந்து கண்களை எடுத்து அவரை பார்த்து, "ஏ.சி இருக்குதா ?" என்று கேட்டான். அவர் சிரித்துக்கொண்டே, "இந்த ரூம்ஸ்ல இன்னும் ஏ.சி வைக்கல.. பட் ஃபேன் இருக்கிறது வா" என்றார். உள்ளே வந்து எங்கள் பேராசிரியரின் பக்கத்தில் உட்கார்ந்தான். பிறகு பேராசிரியரை பார்த்து, "எங்க ஸ்கூல்ல ஃபுல்லா ஏ.சி இருக்கும். பேசாம உங்க காலேஜ மூடியிருங்க" என்றான்.
நாங்கள் சற்றும் எதிர்ப்பார்க்காத பதில் !! பிறகு எங்கள் பேராசிரியர் மின்சார சேமிப்பு, சிக்கனம் குறித்து ஒரு மினி பாடம் எடுத்தார். பிறகு நடந்தவை உங்கள் பார்வையில்..
பேரா: "கிளாஸ் ல என்ன ரேங்க் ?"
ஹர்ஷித்: "நான்தான் ஃபர்ஸ்ட்"
பேரா: "அப்ப நீதான் உங்க கிளாஸ் லீடரா ?"
ஹர்ஷித்: "கிளாஸ் ரெப்ரசண்டேடிவ் !"
பேரா: "சரி.. இப்போ உங்க கிளாஸ்ல பசங்க பேசாம பார்த்துக்க உன்னைய உங்க டீச்சர் சொல்றாங்க. உன் ஃபிரண்ட்ஸ் பேசிட்டே இருக்காங்க. அப்ப நீ என்ன செய்வ ?"
ஹர்ஷித்: "மிஸ் கிட்ட கம்ப்ளைன் பண்ணுவேன்"
பேரா: "அவங்க உன் ஃபிரண்ட்ஸ் தானே"
ஹர்ஷித்: "இஃப் தே டிட் நாட் ஒபே மை வேர்ட்ஸ் தே ஆர் இடியட்ஸ். சோ நோ ப்ராப்ளம்"
(நான் சொல்லவதை கிழ்படிந்து அவர்கள் கேட்கவில்லை என்றால் அவர்கள் முட்டாள்கள். அதனால் சொல்வது தப்பில்லை)
அவர் எதோ ஒரு அவசர பணியாக வெளியே சென்றுவிட்டார். இப்பொழுது எங்கள் முறை. எங்களுக்குள் நடந்த உரையாடலை அப்படியே உங்களுக்கு தருகிறேன்.
சஞ்சய்: "ஏம்ப்பா தம்பி.. தமிழ் புக்ஸ்லாம் படிக்கமாட்டியா ?"
ஹர்ஷித்: "நோ !"
சுப்பு: "ஏண்டா ?"
ஹர்ஷித்: "பிகாஸ் ஐ டோன்ட் நோ டேமிள் ஸ்க்ரிப்ட். சோ ஐ கான்ட் ரீட் ஆர் ரைட் இன் டேமிள்"
(எனக்கு தமிழ் எழுத்துக்கள் தெரியாது. அதனால் எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது)
நான்: "தென் வாட்ஸ் யுவர் மதர் டங் ?"
(அப்படியென்றால் உன்னுடைய தாய்மொழி என்ன ?)
ஹர்ஷித்: "ஆங்... டேமிள்"
கவின்: "நீ எந்த ஸ்டேட் ல இருக்கிற டா ? தமிழ்நாட்டுல தான ?"
ஹர்ஷித்: "இல்ல.. சென்னைல"
சஞ்சய்: "சென்னை மட்டும் என்ன மலேசியாலயா இருக்கு? "
கவின்: "ஏண்டா இந்த ஊர்லே இருந்துக்கிட்டு தமிழ் தெரியாதுனு சொல்றியே"
ஹர்ஷித்: "ஐ ஹேவ் மோர் இனஃப் சப்ஜெக்ட்ஸ் டூ லேர்ன் தேன் டேமிள்"
(எனக்கு தமிழை விட கற்றுக்கொள்வதற்கு நிறைய பாடங்கள் இருக்கிறது)
இப்போதைய தலைமுறை பிள்ளைகளை பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் நேரில் பார்த்தபோது வியப்பாக இருந்தது. எப்பொழுது ஒருவன் ஒரு மொழியை எழுத, படிக்க, பேச கற்றுக்கொள்கிறானோ அப்பொழுதே அவன் அந்த மொழியை கற்றுகொண்டான் என்று சொல்லமுடியும். கொஞ்சம் கூட தடையில்லாமல் அவன் ஆங்கிலம் பேசியதை பார்த்து அதையாவது ஒழுங்காக எழுதுகிறானா என்று பார்க்க விரும்பினேன். அவன் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி பார்த்தேன். முதல் பக்கத்தில் அவனுடைய பெயரை தப்பு தப்பாக எழுதியிருந்தான். பிறகு தான் தெரிந்தது அது நியூமராலஜி என்று !!!
என் பெற்றோர்கள் எனக்கு சொல்லிகொடுத்தது. வாழ்க்கை என்பது 'வாழ்வதற்கு. வாழ்வதற்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும்.' இன்றைய பெற்றோர்கள் அதை மாற்றி 'வாழ்க்கை என்பது பணம் சம்பாதிப்பதற்காகவே' என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைவிட வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் ஆசை. தமது பிள்ளைகள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்க கூடாது. எந்த தப்பையும் செய்துவிடக் கூடாது.
அந்த காலத்தைவிட இந்த காலத்தில் பிள்ளைகளுக்கு நிறைய விஷயங்ககளை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தையும் எப்படி/எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதில்லை. டெல்லி மிருகக்காட்சி சம்பவமே ஒரு சரியான உதாரணம்.
தங்கள் பிள்ளைகள் சிறுவயதிலே வானத்தில் உயர்ந்து பறக்கவேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்களால் பிள்ளைகள் ஒன்றுமறியாத வயதுகளிலே பறக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சிலர் வெற்றிகரமாக பறந்தாலும் பலர் பாரம் தாங்காமல் விழுந்துவிடுகிறார்கள் என்பதே நிதர்சனம். இந்த தருணத்தில், என்னுடைய பெற்றோர்கள் எனது சுக துக்கங்ள் அனைத்தையும் நான் சுயமாக கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தை எண்ணி மிகவும் மகிழ்கிறேன்.
பட்டறை முடிந்தப்பின் இவை அனைத்தையும் என் நண்பர்களுடன் ஆலோசித்து கொண்டிருந்தேன். ஒருவன் கூறினான், "தமிழ் எதுக்கு டா.. பசங்களுக்கு ஹிந்தி இங்க்லீஷ் தான் கற்றுக்கொடுக்க வேண்டும்". தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அறிஞர் அண்ணா, "நமது கழகத்தை அழிக்க எந்த கட்சியாலும் முடியாது. நாமாக அழித்துக்கொண்டால் தான் உண்டு" என்றாராம். அதைப்போல, தமிழை அழிக்க ஹிந்திகாரனோ தெலுங்கனோ மலையாளியோ தேவையில்லை !!
இந்த பதிவிற்கு சம்பந்தமாக சில படங்கள்...
இந்த பதிவிற்கு சம்பந்தமாக சில படங்கள்...
"எவ்வுளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல. எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்" |
"வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டும் உங்களை பயன்படுத்த முடியாது" |
தலைமுறை இடைவெளி என்பது எவ்வளவு சுருங்கி இருக்கிறது! கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் உங்களுக்கும் ஒரு நான்காம் வகுப்பு படிக்கும் பையனுக்கும் இடையிலேயே எத்தனை மாறுதல்கள்!!
ReplyDeleteபதிவின் முடிப்பு சாட்டை சொடுக்கல்.
உனது புரிதலும் தெளிதலும் பெருமிதம் தருகிறது சிபி.
வருகைக்கு நன்றி !!
Deleteஎவ்வுளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல. எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்"
ReplyDeleteசரியாகப் பயன்படுத்த கற்பிக்கவேண்டுமே..!
கற்பித்தல் தொழிலானதாலும் படிப்பது மதிப்பெண்கள் பெறுவதற்காகவே என்ற எண்ணம் ஏற்பட்டதலான விளைவுகள். டெல்லியில் வனவிலங்கு சரணாலயத்தில் இறந்த இளைஞனை பற்றி படிக்கும் போது தோன்றியது.. 'விலங்குகளிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு பத்து மார்க் கேள்வி இருந்திருந்தால் அவன் பிழைத்திருப்பானோ?'
Delete