Posted by : Sibhi Kumar SenthilKumar Saturday, March 26





     ண்டமாற்று முறைக்கு மாற்று வழியாக வந்த பணம் இன்று உலகத்தையே ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் தமிழகத்தில் எந்த மு.க.  வெற்றிவாகை (!)  சூடினாலும்  பணம்தான்  ஆட்சி செய்யப்போகிறது என்பது   நம் அனைவருக்கும் தெரியும்.  எனவே பணத்தை  சேமிக்கவேண்டும் என்று தான் அனைவரும்   விருப்பபடுவர். 

சில பேர் சேமிக்க வேண்டிய காலத்தில் சேமிப்பின் அவசியத்தை உணராமல்  பின் வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் தாங்கள் சேமிக்கவில்லை என்று  வருத்தபடுவர்.

இன்றும் 'பட்ஜெட் பத்மநாபன்' போல் வாழும் ஒருவரைப் பற்றி என் அப்பா கூறியிருந்தார்.அவர் பெயர் (எதுக்கு இந்த வம்பு???). 'மிஸ்டர் எக்ஸ்' ன்னு  வச்சிக்குவோம்.  மிஸ்டர் எக்ஸ் எங்கள்  அப்பா  வேலைசெய்யும்  நிறுவனத்தில் வேலை  செய்கிறார்.  வீட்டிலுள்ள  நாலு  பேருக்கும் மொத்தமாக  மளிகை பொருள் மாதம் ரூ.500/- க்கு  மட்டும்  தான்  வாங்குவார்!  சந்தைக்கு  சென்றால்  காய்கறிகளை  நூறு  கிராம்'க்கு  வாங்கும்  ஒரே நபர் அவர்தான்!

இன்னொருவர் அதற்கு பத்து மடங்கு மளிகை பொருள்  வாங்குகிறார்!  தினசரி  கிலோ கணக்கில் காய்கறி தேவைப்படுகிறது.

நாம் இதுபோல கஞ்சமாகவும் இருக்கவேண்டாம் அதிக செலவாளியாகவும்  இருக்கவேண்டாம். சிக்கனம் என்பது நம்மால் முடிந்தவற்றில்  செய்யவேண்டுமே தவிர முடிந்தவரை செய்யக்கூடாது.

இன்று நம்மில் பெரும்பாலானோர் இருசக்கர வாகனம்(கள்)  வைத்திருக்கிறோம்.  தினமும் அதற்கு போடும் பெட்ரோல்'ஐ சேமித்தால் நம்  பட்ஜெட்டில்  பெரிய  தொகை சேமிக்கலாம். எனவே  அதற்குரிய  வழிகளை  தற்போது  உங்களுக்கு  சொல்கிறேன்;

>> உங்கள் வாகனத்தை முறையாக சர்விஸ் செய்யுங்கள்.

>> பெரும் நகரங்களில் வாழுபவர்கள் உங்கள் திட்டமிட்டு துவங்கினால்  சிக்னலில் மாட்டாமல்  தப்பிக்கலாம்.  அப்படி  சிக்னலில்  மாட்டிக்கொண்டால்  இன்ஜினை ஆஃப் செய்துவிடுங்கள்.

>> ஏர் பில்டரை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட இடைவேளையில் ஆயிலை மாற்றுங்கள்.

>> பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு முடிந்தவரை மிதிவண்டியில் போவதுதான்  உத்தமம்.

>> சிக்னலில் நிற்கும்போது கடுப்பாக ஆக்ஸிலேட்டரை முறுக்காதீர்கள்!

>> முடிந்தவரை 40-50 கி.மீ. வேகத்திலே செல்லுங்கள். இது உங்கள் பர்சுக்கும் உங்களுக்கும் நல்லது!

>> பெட்ரோல் போடும்போது அப்படியே அங்கேயே ஏர் செக் பண்ணிருங்க.

>> பேட்டரி மற்றும் ஸ்பார்க் ப்ளக் சரியா வேலைசெய்யுதா'ன்னு அடிக்கடி செக்  பண்ணுங்க.

>> நண்பர்களுடன் வெளியே செல்லும்போது வெவ்வேறு வண்டிகளில்  போகாமல் சேர்ந்து போங்கள்.

>> உங்கள் வண்டி மேனுவலில் குறிப்பிட்ட எடைக்கு தாண்டி வண்டியில்  ஏற்றாதீர்கள். இதனால் வண்டியும் சீக்கிரமாக தேய்ந்துவிடும்.

---------------------------------------------------------------------------------------------------------
பரிசுப் போட்டி!

"அப்பாடி... இப்ப நான் ஃப்ரீயா  இருக்கேன்!".

 என்ன  காரணமென்று  எனக்கு   சரியாக மின்னஞ்சல்  (mynameissibhi@yahoo.com)  அனுப்புபவருக்கு இலவசமாக சுஜாதாவின்  'கற்றதும்  பெற்றதும்'   அளிக்கப்படும்! முந்துங்கள்! இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!

---------------------------------------------------------------------------------------------------------

என் நண்பர் ஒருவர் வலைப்பூ ஆரம்பிக்க ஆலோசனை கேட்டார்.  அப்போதுதான் 
பிரபல பதிவராவது எப்படி? -நிறைவுப் பகுதி  என்ற பதிவை இடுகையிட்டேன். எனவே அவருக்கு சில உதவிகளை செய்யமுடிந்தது. அவரது இரண்டாவது  பதிவிலே   பிரபலமாகிவிட்டார்! அவரை என் அடுத்த பதிவில் உங்களுக்கு  அறிமுகபடுத்த விழைகிறேன். இருந்தாலும் அவருடைய  வலைப்பூவை நீங்கள்  வாசிக்குமாறு  தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
அவருடைய வலைப்பூவின் முகவரி- http://1hourcom.blogspot.com/

---------------------------------------------------------------------------------------------------------

{ 4 comments... அவற்றை கீழே படியுங்கள். நீங்களும் சொல்லலாமே }

  1. அடுத்த இலக்குக்கு முந்தைய இளைப்பாறலாய் இருக்கட்டுமே இப்போதைய ஓய்வு...

    //சிக்கனம் என்பது நம்மால் முடிந்தவற்றில் செய்யவேண்டுமே தவிர முடிந்தவரை செய்யக்கூடாது.// நல்ல புரிதல்...!

    ReplyDelete
  2. நண்பர்களுடன் வெளியே செல்லும்போது வெவ்வேறு வண்டிகளில் போகாமல் சேர்ந்து போங்கள்.நான் ரெடி.. ஆனா கூட்டிக்கிட்டு போக அவங்கதான் ரெடி இல்ல.. !அவசியமான அறிவுரைகள்..

    ReplyDelete
  3. தலைப்புக்காக வந்தேன்...தங்களின் பதிவும் நன்றாக இருந்தது !

    ReplyDelete
  4. @ நிலாமகள் & ஆகாயமனிதன்...
    நன்றி நண்பர்களே. தொடர்ந்து வாசியுங்கள்.

    @ரிஷபன்...
    உங்கள் ஊருக்கு நான் வந்தால் கண்டிப்பாக உங்களை நான் கூட்டிட்டு போறேன்..

    ReplyDelete

Leave your Comments

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -