- Back to Home »
- Mahindra , தெரிந்துகொள்வோம் , ஜாலி »
- Mahindra Great Escape- ஓர் அறிமுகம்
Posted by : Sibhi Kumar SenthilKumar
Wednesday, November 17
கார் வாங்குபவர்களெல்லாம் ஒரே பயன்பாட்டிற்காக வாங்குவது அல்ல. சிலர் ஓட்டுகிற அனுபவத்திற்காக வாங்குவர்; சிலர் பிறர் மதிப்பதற்காக வாங்குவர். ஆனால் எல்லோரும் own driving செய்வதில்லை.
அப்படி own driving செய்பவர்களில் சில பேருக்கு 'ரேஸில்' கலந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கும். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் சாத்தியப்படும்படியான விஷயம் அல்ல.
உங்கள் ஏக்கத்தை தீர்த்து வைக்க வருகிறார்கள் மகேந்திரா மோட்டர்ஸ். "உங்கள்ட்ட மகேந்திரா கார் இருக்கிறதா? இருந்தா சொல்ற இடத்துக்கு வாங்க. ஸ்டிக்கர் ஒட்டி சும்மா பூந்து விளையாடலாம்" என்று உற்சாகத்தோடு சொல்கிறார்கள். 'ஸ்கார்ப்பியோ', 'போலீரோ' மற்றும் ஜீப்புகள் வைத்திருப்பவர்கள் அவர்கள் மாநிலத்திலே கலந்துக்கொள்ளலாம்!!! ஆம், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் 1996'ம் வருடத்திலிருந்து நடத்திகொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து அவர்களிடம் 'எதற்காக நடத்துகிறீர்கள்?' என்று கேட்டால், "இதன் மூலம் எங்கள் தயாரிப்பு கார்களின் உறுதியும், தரத்தையும் உரிமையாளர்கள் அறிந்துகொள்வார்கள்" என்கிறார்கள். மேலும், "இது ஒரு போட்டியல்ல. சும்மா த்ரில்லுக்குதான்" என்று சொல்கிறார்கள். இதற்கு சில விதிமுறைகள் சொல்கிறார்கள். அவை
- அதிகபட்சம் 4 பேர்தான் ஒரு காரில் அனுமதிக்கபடுவர். நம் பாதுகாப்பிற்காக அழைத்துக்கொள்ளலாம்.
- கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும்.
- கண்டிப்பாக முதலுதவிப் பெட்டி வைத்திருக்கவேண்டும்.
முகவரி;
Mahindra & Mahindra Ltd.,
Automotive Sector, Mahindra Towers- 3rd Floor,
Akurli Road,
Kandivali (East),
Mumbai – 400101
Tel : 28468525
Fax : 28468523
E-mail :greatescape@mahindra.com
ரிஜிஸ்டர் செய்ய இங்கு செல்லுங்கள்.
ஆன்லைனில் பணம் கட்ட இங்கு செல்லுங்கள்.
இன்றைய படம்;
சும்மா பதிவுக்கு சம்பந்தமா ஒரு சவாலான படம். |