Posted by : Sibhi Kumar SenthilKumar Tuesday, September 30

இந்த வருடத்துடன் ஸ்கார்ப்பியோவின் வயது 12. 1990களில் ரவுடிகள் என்றாலும் அரசியல்வாதிகள் என்றாலும், அவர்களிடம் இருந்தது டாட்டா சுமோக்கள் தான். அதன் பிறகு 1998ல் வந்த டாட்டா சஃபாரி அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தாதாக்கள் வீட்டில் கம்பீரமாக நின்றது. அதன் பிறகு 2002ல் வந்தது மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ.

     ஆரம்பத்தில் ஸ்கார்ப்பியோவின் விற்பனை விகிதம் குறைவாக தான் இருந்தது. உறுதியான கட்டமைப்பு, பிரம்மாண்ட தோற்றம், அதிகமான பவர் என்று அதன் அனைத்து பலங்களும் தெரிந்த பின்னர் 2003 ஆம் ஆண்டு முதல் விற்பனை அதிகமானது. முக்கால்வாசி டாட்டா சஃபாரிகளை அடித்து விரட்டியது. மஹிந்த்ராவின் நிறைவான சர்வீஸ் அனைவரையும் கவர்ந்தது. சரியாக சொல்லவேண்டுமென்றால் மஹிந்த்ரா மீது பெரும் நம்பிக்கையை ஸ்கார்ப்பியோ தான் ஈட்டி தந்தது.

     நாளாக நாளாக ஸ்கார்ப்பியோவிற்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே போனது. காலத்திற்கேற்ப சிறு மாறுதல்கள் தேவைப்பட்டது. ஸ்கார்ப்பியோவின் இரண்டாவது தலைமுறை வந்தது. இந்த முறையும் விற்பனையில் மாறுதல் இல்லை. சக்கைப்போடு போட்டது !!

     கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி, ஸ்கார்ப்பியோவின் மூன்றாவது தலைமுறையை வெளியிட்டது. இந்த புதிய ஸ்கார்ப்பியோவை கொஞ்சம் அலசுவோம்.



     முதலில் நான்கு மீட்டர் நீளம். இந்திய அரசாங்கம், ஒரு வாகனத்தின் நீளம் நான்கு மீட்டர்களுக்குள் இருந்தால் வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்தது. அதன் பிறகு வந்த கார்களான மாருதி ஸ்விஃப்ட் டிசையர், மாருதி எர்டிகா போன்ற கார்கள் மட்டுமல்லாது டாட்டா ஏஸ்(அதாங்க, 'சின்ன யானை'!!) அனைத்தும் ஹிட்டோ ஹிட்டு. இதுவரை வந்த ஸ்கார்ப்பியோக்கள் நான்கரை மீட்டரில் இருந்தபோது புது ஸ்கார்ப்பியோ நான்கு மீட்டருக்கு வந்திருக்கிறது. இதற்கு பிறகு மஹிந்த்ராவின் அனைத்து கார்களும் நான்கு மீட்டர்களுக்கு மாற்றப்படும் என்று அந்நிறுவனம் சொல்லியிருக்கிறது. இதனால் காரின் விலை பெருமளவில் குறையும்.



     இதுவரை இரண்டு தலைமுறைகளாக வந்த ஸ்கார்ப்பியோக்கள் தோற்றத்தில் பெரியளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. எனவே இந்த முறை எம்&எம் நிறுவனம் வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றங்களை மாற்றியிருக்கிறது.



     காரின் முன் புறத்தை இதுவரை ஆக்கிரமித்த சாதாரண ஹெட்லைட் ஐ மாற்றி தற்போது எல்.இ.டி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. புதிய க்ரில்லை பார்க்கும்போது டொயோட்டா லான்ட்க்ரூசர் ப்ராடோ ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.



     பின்புறத்தை பெருமளவில் மாற்றினாலும் ரசிகர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளகூடிய வடிவமைப்பு அல்ல. பலருக்கும் பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது. பின்புற கதவின் கைப்பிடியை மாற்றியுள்ளனர். ஸ்டாப்லைட்டும் எல்.இ.டி யால் செய்யப்பட்டிருக்கிறது.




     என்னை மிகவும் கவர்ந்தது உட்புற மாற்றங்கள்தான். எத்தனை வருடங்கள் கடந்தாலும் உட்புற அலங்காரத்தில் கவனம் செலுத்தாத எம்&எம் நிறுவனம் இப்பொழுது மிகவும் அருமையாக வடிவமைத்திருக்கிறது. எம்&எம் நிறுவனத்தின் கடந்த தயாரிப்பான XUV5OO வின் உட்புற அலங்காரம் போல் தெரிந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. ஸ்டீயரிங் வீல் XUV5OO விலிருந்து அப்படியே எடுத்திருகிறார்கள். 6 இன்ச் டச் ஸ்க்ரீன் மியுசிக் ப்ளேயர் மற்றும் நேவிகேஷன் சிஸ்டமும் அனைவரையும் கண்டிப்பாக கவர்ந்திழுக்கும்.



     காலம்காலமாக மஹிந்த்ரா வண்டிகளில் அனைவரும் குறை சொல்வது 'பாடி ரோல்' தான். வேகமாக செல்லும்போது திரும்பினால் அதன் அதிர்வு உள்ளே உக்கார்ந்திருக்கும் அனைவரும் உணர்வார்கள். இந்த முறை எம்&எம் நிறுவனம் தனது புதிய தொழில்நுட்பத்தால் பாடி ரோல் ஐ மிகவும் குறைத்திருக்கிறது.



     இஞ்சினில் மாற்றம் இல்லாதபோதும் இந்த முறை நன்றாக டியூன் (லிங்குசாமி டியூனிங் அல்ல !!) செய்யபட்டிருக்கிறதால் பெர்ஃபார்மன்ஸ் உயர்ந்திருக்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. புதிய கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 4X4 வசதியும் ஏபிஸ் ஏர்பேக் வசதியும் ஆப்ஷனளாக தந்துள்ளது.

   
இந்தியாவின் வாகன விற்பனை வரலாற்றின் முதல் முறையாக, புதிய ஸ்கார்ப்பியோவை நீங்கள் Snapdeal.com இல் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் !! கட்டணம் ரூ.20,000/-  முன்பதிவு செய்ய--> க்ளிக்


     நடிகர்களை போல, அனைத்து வாகனங்களுக்கும் தீவிர ரசிகர்கள் இருப்பது அல்ல. யமஹா RX100, அம்பாசடர், மாருதி 800, புல்லட் என சில வாகனங்களுக்கே அந்த கௌரவம் கிடைக்கும். அந்த வாகனங்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டாலும் அவற்றின் பெயர் நிலைத்து நிற்கும். அவற்றில் ஸ்கார்ப்பியோவும் ஒன்று. அம்பாசடர், மாருதி 800 போல் ஸ்கார்ப்பியோவின் தயாரிப்பு நிறுத்தக்கூடாது என்பதே ரசிகர்களின் ஆசை.

{ 1 comments... கீழே உள்ளது. நீங்களும் சொல்லலாமே }

  1. எடுப்பிலேயே நல்ல துடிப்பு!
    எழுத்தின் வீச்சில் நல்ல முன்னேற்றம்.
    வாகனப் பற்றையும் வளமான தமிழில் சரியாக வெளிப்படுத்திடும் திறன்...
    நீ அடிச்சு ஆடு ராசா...!!


    ReplyDelete

Leave your Comments

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -