Posted by : Sibhi Kumar SenthilKumar Tuesday, September 16

     வணக்கம் வாசகர்களே... கார் வாங்கும்போது, அவற்றின் டிசைன், சர்வீஸ், தரம் ஆகியவற்றை பார்ப்போம். ஆனால் மைலேஜ் என்ற ஒரு பகுதியை சிலர் கவனிக்க மாட்டார்கள். இல்லையென்றால், 'எங்கள் கார்தான் இந்தியாவிலே அதிகமாக மைலேஜ் தரும். அதற்கு அராய் (ARAI) சான்றிதழ் இருக்கிறது' என்று கார் தயாரிப்பாளர்கள் கூறுவதை நம்பி வாங்குவார்கள்.



     முதலில் மைலேஜ் என்றால் என்ன?? ஒரு லிட்டர் எரிப்பொருளுக்கு (டீசல்/பெட்ரோல்) எத்தனை கிலோ மீட்டர்கள் செல்லமுடியும் என்பதை கூறுவதே மைலேஜ். அராய் (ARAI) சான்றிதழ் எப்படி தரப்படுகிறது என்று சொல்கிறேன். ஒரு வாகனத்தை குறிப்பிட்ட சில ஆராய்சிகள் மூலம் (லேப்களில் மட்டுமே) ஆராய்ந்து அவற்றின் மைலேஜ்'ஐ கணித்து சொல்வதுதான் அராய் நிறுவனத்தின் வேலை. 

     நமது தினசரி வாழ்க்கை முறையில் அராய் சான்றிதழின்ப்படி மைலேஜ் கிடைக்காதற்கு காரணங்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இந்த பதிவில் சொல்கிறேன். நானும் இந்த விஷயங்களை பின்பற்றியப்போது ஒரே மாதத்தில் என்னுடைய மைலேஜ் உயர்வதை கண்டேன்.

1. சரியான காற்றழுத்தம்: நான்கு டயர்களிலும் மேனுவலில் குறிப்பிட்ட அளவு காற்றழுத்தம் இருப்பதை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கான பிரத்யேக கருவிகள் சந்தையில் கிடைக்கிறது இல்லையென்றால் பெட்ரோல் பங்கிலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.



2. ஏர் மற்றும் ஆயில் ஃபில்டர்கள்:  அழுக்கான ஃபில்டர்கள் மைலேஜ் ஐ கடுமையாக குறைக்கும். அதனால் மேனுவலில் குறிப்பிட்ட காலக்கெடுவில் அவற்றை மாற்றவேண்டும்.






3.எடையை குறையுங்கள்: இடம் இருக்கிறதே என்று காரில், தேவையில்லாத பொருட்களை ஏற்றாதீர்கள்.








4.எரிப்பொருளை குறைவாக நிரப்புங்கள்: எரிப்பொருளை பாதி டாங்க் அல்லது கால் டாங்க் நிரப்பியிருந்தால் போதும். நீங்கள் நிரப்பும் எரிப்பொருள் வண்டியின் மொத்த எடையை கூட்டிவிடுவதால் ஃபுல் டாங்க் நிரப்புவதை தவிர்க்கவேண்டும்.










5.தரமான எரிப்பொருள்: சில பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்படம் செய்கிறார்கள். எனவே உங்கள் சுற்றுப்பகுதியில் உங்களுக்கு நன்கு பரிட்சயமான பங்குகளில் மட்டுமே எரிப்பொருளை நிரப்புங்கள்.





6.ஏசி யை உபயோகிக்கும் இடங்கள்: நகரத்தில் டிராஃபிக்கில் செல்லும்போது  முடிந்தவரை ஏசியின் பயன்பாட்டை குறையுங்கள். இதுவே நெடுஞ்சாலைகளில் கண்டிப்பாக ஏசி உபயோகிக்கவேண்டும். ஏனென்றால், திறந்திருக்கும் ஜன்னல்களால் வேகமாக வரும் காற்று தடைப்படும். எனவே அவற்றை தாண்டி செல்ல அதிக சக்தியை உபயோகிக்கவேண்டும்.



7.மிதமான வேகத்தில் ஒட்டுங்கள்: அதிக வேகம் மைலேஜ் ஐ மட்டுமல்ல. நமது பார்வையின் தூரத்தையும் குறைக்கும்.





8.'இனிப்பான வேகத்தை' கண்டுப்பிடியுங்கள்: ஒவ்வொரு வண்டியும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்கும்போது அதிக மைலேஜ் தரும். அந்த வேகத்தை 'இனிப்பான வேகம்' என்பார்கள். உங்களது வண்டியின் இனிப்பான வேகத்தை கண்டுப்பிடித்து அந்த வேகத்தை கடைப்பிடித்தால் பெருமளவு எரிப்பொருளை சேமிக்கலாம்.



9.பாதுகாப்பான தூரத்தில் பயணியுங்கள்: முன்செல்லும் வாகனத்திற்கும் உங்களது வாகனத்திற்கும் இடைவெளி விட்டு பயணிக்கவும். இதனால் தேவையில்லாமல் அதிகமாக பிரேக் ஐ பயன்படுத்த வேண்டாம்.



10.சரியான கியரில் செல்லுங்கள்: உங்களின் வேகத்திற்கு ஏற்றார்போல் கியரை மாற்றவும். அனைத்து கார்களிலும் பொதுவாக மேனுவலில் குறிப்பிட்டிருப்பார்கள். அவற்றை கடைப்பிடித்தால் எரிப்பொருள் விரயம் கணிசமாக குறையும்.





11.பயணத்தை திட்டமிடுங்கள்: காரை எடுப்பதற்கு முன்பே உங்கள் வழித்தடத்தை திட்டமிடுங்கள். முடிந்தவரையில் பைபாஸ் அல்லது நெடுஞ்சாலையில் செல்ல முயலுங்கள். கிலோமீட்டர் அதிகமானாலும் எரிப்பொருள் விரயம் பெருமளவில் குறையும்.



12.அட்டவணை தயார்செய்யுங்கள்: நீங்கள் நிரப்பும் எரிப்பொருளையும்
செல்லும் தூரத்தையும் கொண்டு ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள். எரிப்பொருள் நிரப்பும் ஒவ்வொரு முறையும் தவறாமல் அதில் எழுதிவிடுங்கள். இதனால் உங்களது கார் எவ்வுளவு மைலேஜ் தருகிறது என்று தெரிந்துவிடும்.



    இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால் உங்களது மைலேஜ் கண்டிப்பாக உயரும்.

{ 2 comments... அவற்றை கீழே படியுங்கள். நீங்களும் சொல்லலாமே }

  1. தேர்ந்த ஆசிரியரின் தெளிவு ! தேடல் மிகு இளைஞரின் சுறுசுறுப்பு! வாகனங்களின் மீதான பிரேமை! தாமறிந்ததை நாடியவர்கள் அறியச் செய்யும் அக்கறை! வலைப்பூவை மணக்கச் செய்யும் திறன் மகிழ்வூட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. பெரும் கலைகள் மற்றும் வித்தைகளை அனைவருக்கும் கற்பிக்க முடியாது. ஆனால் எனக்கு தெரிந்திருக்கும் இந்த விஷயங்கள் மிகவும் சிறியவை மற்றும் எளியவை. இவை அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய அத்தியாவசியமான தகவல்களே. நான் செய்யும் சிறு சிறு விஷயங்களையும் பாராட்ட நீங்களும் அப்பாவும் இருக்கும்போது எனக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியே.. (அக்காவை குறிப்பிடவில்லை - மன்னிக்கவும் !!!)

      Delete

Leave your Comments

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -