Posted by : Sibhi Kumar SenthilKumar Tuesday, September 23

     நம்மில் பலருக்கு நமது சாலையில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று தெரிவதில்லை. (நமது நாட்டில் பல இடங்களில் சாலையே இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது!!!) ஏன் நமக்கு தெரியவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொன்னாலும் முக்கியமான காரணமாக நான் கருதுவது வட்டார போக்குவரத்துத் துறையின் மெத்தனம்.

   
வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில், லைசென்ஸ் எடுக்கவேண்டுமென்றால் சாலை விதிகள் மற்றும் சாலை குறியீடுகளை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு (எழுத்துப்பூர்வமாக) பதிலளிக்கவேண்டும். நமது நாட்டில் லைசன்ஸ் எப்படி கொடுக்கப்படுகிறது என்று நான் சொல்லத்தேவையில்லை.

     அதனால், இந்த பதிவில் நான் அடிப்படையான சாலை குறியீட்டுகளை உங்களுக்காக பதிவிடுகிறேன்.

1.ஸ்டாப் லைன் (Stop Line):

பொதுவாக இரு வேறு சாலைகளின் இணைப்பிலும் சாலையின் டிராஃபிக் லைட் முன்பாகவும் இருக்கும். இந்த கோட்டிற்கு முன்பாகவே உங்கள் வாகனத்தை நிறுத்தவேண்டும். கோட்டை தாண்டி நிறுத்துவது தண்டனைக்குரிய செயலாகும்.



2.ஜீப்ரா கிராசிங் (Zebra Crossing):

ஒரு பக்கத்திலிருந்து மறுப் பக்கத்திற்கு சாலையில் கடந்து செல்லும் பாதசாரிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை. பாதசாரிகள் இவற்றை தவிர்த்து சாலையின் ஊடே கடந்தால் தண்டனைக்குரிய செயலாகும்.




3.தொடர்ச்சியில்லாத இணைவான கோடு (Parallel Broken Line):

இவற்றை Give way line என்றுக்கூட அழைப்பார்கள். ஒரு சிறிய சாலையிலிருந்து நெடுஞ்சாலையிலோ அல்லது முக்கியமான சாலையிலோ இணையும்போது இவற்றை உபயோகித்திருப்பார்கள். அதாவது உங்கள் முன்னே இருக்கும் சாலையில் செல்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.



4.தடுப்புக் கோடு -இரண்டு வழிச்சாலையில் (Barrier Line):

தொடர்ச்சியான வெள்ளைக் கோடுகளானது. ஓட்டுநர் முன்னிருக்கும் வாகனத்தை முந்துவதற்காக கண்டிப்பாக இந்த கோட்டை தாண்டி செல்லக்கூடாது. எந்த பக்கத்தில் செல்கிறோமோ அதையே கடைப்பிடித்து செல்லவேண்டும்.


5.தடுப்புக் கோடு -நெடுஞ்சாலைகளில் (Barrier Line):

இந்த வகை கோட்டினை நெடுஞ்சாலையில் லேன்களை (Lane) பிரிப்பதற்கு பயன்படுத்தப் படுகிறது. ஓட்டுநர்கள் இவற்றை தாண்டலாம்.





6.தொடர்ச்சியான இணைவான கோடு (Continuous Parallel Line):

இதுவும் ஒரு வகையான தடுப்புக் கோடு தான். இந்த வகையான கோடு இருந்தால் ஓட்டுனர்கள் வாகனங்களை முந்துவதற்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.





7.மஞ்சள் கோடு (Yellow line):

இவ்வகை கோடுகளை பொதுவாக சாலையின் ஓரத்தில் போடுவார்கள். இந்த மஞ்சள் கோடு போடப்பட்டிருக்கும் இடங்களில் கண்டிப்பாக வண்டியை நிறுத்தக்கூடாது.





8.தொடர்ச்சியில்லாத கோடு மற்றும் தடுப்புக் கோடு (Broken Line to Barrier Line):
சில சாலைகளில், தொடர்ச்சியில்லாத கோடு முக்கியமான இடங்களில் (எ.கா. வளைவுகள்) தடுப்புக் கோடுகளாக மாறும். நெடுஞ்சாலையாக இருக்கும்பட்சத்தில் தொடர்ச்சியில்லாத கோடு வரை லேன்களை மாற்றி கொள்ளலாம். ஆனால் தடுப்புக் கோடு வந்த பிறகு லேன் மாறக்கூடாது.

9.சரியான லேனில் செல்லுங்கள்:

மேலுள்ள படத்தில் காட்டி இருப்பதுப்போல நமது நெடுஞ்சாலையின் உட்பகுதியை 'Inner Lane' என்பார்கள். வெளிப்பகுதியை 'Passing Lane' என்பார்கள். பொறுமையாக செல்லும் வாகனங்கள் (கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள்) இடது புறமாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும் வாகனங்கள் வலது புறமாக செல்லவேண்டும். ஆனால் காலம்காலமாக இந்த விதிமுறை மீறப்பட்டு வருகிறது. பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் வலது புறமாகவே செல்வார்கள். இது முற்றிலும் தவறு. நெடுஞ்சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு இதுவே காரணம்.

இந்த பதிவை படிக்கும் அனைவரும், இதற்கு பிறகு விதிமுறைப்படி வாகனத்தை ஓட்டுவோம் என்பதை உறுதியெடுத்துக்கொள்வோம். ஜெய்ஹிந்த் !!

{ 6 comments... அவற்றை கீழே படியுங்கள். நீங்களும் சொல்லலாமே }

  1. வட்டார போக்குவரத்துத் துறையின் மெத்தனம்.//

    நமது நாட்டில் லைசன்ஸ் எப்படி கொடுக்கப்படுகிறது என்று நான் சொல்லத்தேவையில்லை.//

    ஆனால் காலம்காலமாக இந்த விதிமுறை மீறப்பட்டு வருகிறது. //

    நேரடித் தாக்குதல் :))

    விதிமுறைகளைக் கடைபிடித்தல் நல்ல பண்பு.

    ReplyDelete
  2. ஆஹா!என்ன ஒரு பயனுள்ள பதிவு!
    நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு இவற்றில் இரண்டு விதியேனும் தெரியுமா?எனத் தெரியவில்லை!
    தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான தொழில்முறை ஓட்டுநர்களே இந்த அடிப்படை விதிமுறைகளை கற்றுக்கொள்வதில்லை/கடைப்பிடிப்பதில்லை. வருகைக்கு நன்றி !!

      Delete
    2. முழுவதும் படிக்க முடியவில்லை ஏன்?

      Delete
    3. Read More பட்டனை அழுத்தினால் முழு பதிவும் வரும் நண்பரே. இல்லையென்றால் கீழ்கண்ட லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

      http://sibhikumar.blogspot.com/2014/09/basic-indian-road-signs.html

      Delete

Leave your Comments

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -