- Back to Home »
- தெரிந்துகொள்வோம் »
- இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது..
Posted by : Sibhi Kumar SenthilKumar
Thursday, April 14
மனிதன் தினம் தினம் புதிய சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கிறான். உலகில் அனைவரும் அவரவர் வேலைகளை எளிதாக மற்றும் வேகமாக செய்வதற்கே இவை கண்டுப்பிடிக்கபடுகின்றன.
இவற்றை கண்டுப்பிடிப்பதற்கு அவர்கள் எத்தனை நேரம் சாப்பிடாமல் யோசித்து கொண்டிருப்பர்? தங்கள் குடும்பம், குழந்தைகளை எவ்வுளவு நாள் பிரிந்து தங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பார்கள்?
சர்.ஐன்ஸ்டீன் அவர்கள், தாங்கள் செய்யும் ஆராய்ச்சியில் மூழ்கிவிடுவார். எனவே அவர் தன்னுடைய முடியை வெட்ட மறந்துவிடுவார். ஒருநாள் அவர் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் அழுக்கான சட்டையை போட்டுகொண்டு, முகம் கழுவாமல் பரட்டை தலையோடு வந்து கொண்டிருந்தான்.
இதை பார்த்த ஐன்ஸ்டீன் அவனை அழைத்து, 50 பென்ஸ்'ஐ (pence) காட்டி அவன் தலை வாரி, முகத்தை கழுவிக்கொண்டு வந்தால் அவனிடம் அதை தருவதாக சொன்னார். ஐம்பது 'பென்ஸ்' என்பது அரை பவுண்டிற்கு சமம். அவன் அவர் சொன்னபடியே செய்து முடித்தபின் அவரிடம் வந்தான். அவர் மகிழ்ச்சியுடன் 50 பென்ஸ்'ஐ அந்த சிறுவனிடம் கொடுத்தார். அவன் அதை வாங்கிக்கொண்டு திரும்பி ஐன்ஸ்டீன்'ஐ பார்த்து, "ஐயா, தாங்கள் உங்கள் முடியை வெட்டிக்கொண்டு வந்தால் இந்த பணத்தை உங்களிடமே கொடுத்து விடுகிறேன்" என்று சொன்னானே பார்ப்போம்! அப்போது தான் ஐன்ஸ்டீன்'க்கு தான் முடி வெட்டவில்லை என்று ஞாபகம் வந்தது!!
இந்த சம்பவம் சிரிப்பதற்காக சொல்லவில்லை. தங்களின் ஆராய்சியின்மேல் அவர்கள் கொண்டிருந்த சிரத்தையை இது காட்டுகிறது.
"எதுக்கு திடீரென்று இவன் இதையெல்லாம் சொல்கிறான்?" என்று நீங்கள் மனதில் நினைப்பது உங்கள் கண் மூலமாக எனக்கு தெரிகிறது!
இதையெல்லாம் சொல்ல தூண்டியது ஒரு நாய் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் தான். (இந்த வலைப்பூ பொதுவாக அனைவராலும் வாசிக்கபடுவதால் நாயோடு நிறுத்திகொள்கிறேன்)
அதன் சாராம்சம் இதுதான். ஒரு படத்தை போட்டு (பார்க்க மேரி மாதாவை போல் இருந்தது) அதன் கீழே ஒரு வாசகம். 'நீங்கள் இந்த மின்னஞ்சலை பார்த்த உடனே இருபது பேருக்கு இதை ஃபார்வர்ட் செய்யவில்லை என்றால் ஒரே மாதத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து விடுவீர்கள்'
இன்னும் கீழே, 'மைக்கேல் லாஸோ என்பவர் ஒரு பணக்காரர். இந்த மின்னஞ்சலை பார்த்து விட்டு தன் பி.ஏ. விடம் இதனை ஃபார்வர்ட் செய்யச் சொன்னார். ஆனால் அந்த பி.ஏ. அதனை மறந்து விட்டாள். எனவே அவளுக்கு வேலை போய்விட்டது. மேலும் வீட்டிற்கு வரும் வழியில் ஆக்ஸிடன்டில் இறந்து விட்டாள்.'
வேலை எதுவும் இல்லாதவர்கள் இதுபோன்ற கண்றாவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த படத்தை பார்த்தபோது, "இவர்கள் கிருஸ்துவ மதத்தை பரப்புகிறவர்களோ" என்றும் தோன்றியது. உடனே இதை யார் எனக்கு ஃபார்வர்ட் செய்தார்கள் என்ற தகவலை பார்த்தேன். மேலும் அவருக்கு ஃபார்வர்ட் செய்தவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கே இந்த மின்னஞ்சலை ஃபார்வர்ட் செய்துவிட்டு அந்த மின்னஞ்சலை உடனே அழித்து விட்டேன்.
இதுபோன்ற மின்னஞ்சல்கள் ஒரு மனிதனின் மனரீதியான பலவீனங்களை அடிப்படையாக கொண்டே எழுகின்றன. இதனை பார்க்கும்போது, "ச்சே.. 20 பேருக்கு அனுப்பி தொலைத்துவிடுவோமே" என்று பெரும்பாலானவர்களுக்கு தோன்றிவிடுகிறது. இவற்றால் சலனப்பட்டு நாம் அறிந்தவர்களுக்கு அனுப்பி அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதால், தேவையற்ற மனகசப்பே மிஞ்சும்.
மேலும், இதுபோல் தொழில்நுட்பங்களை வீணாக்குவது அந்த கண்டுபிடிப்பாளர்களின் உழைப்புக்கு நாம் செய்யும் துரோகம் என்றே கருதுகிறேன். அவரவர் வாழ்நாளில் அடுத்தவர்க்கு உபயோகமாய் இருக்க முயல்வதே உன்னதம்.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்ல கருத்து
ReplyDeleteமுன்பு தபாலில் செய்து கொண்டிருந்தார்கள்
ReplyDeleteஇப்போது மெயிலில் செய்கிறார்கள்
காலங்கள் எவ்வளவு மாறினும்
இந்த கபோதிகள் மட்டும் மாறுவதே இல்லை
ம், இதுபோல் தொழில்நுட்பங்களை வீணாக்குவது அந்த கண்டுபிடிப்பாளர்களின் உழைப்புக்கு நாம் செய்யும் துரோகம் என்றே கருதுகிறேன். அவரவர் வாழ்நாளில் அடுத்தவர்க்கு உபயோகமாய் இருக்க முயல்வதே உன்னதம்.
ReplyDeleteநல்ல கருத்து