- Back to Home »
- விருதுகள் »
- நானும் இந்த ஆட்டத்துக்கு ரெடி!
Posted by : Sibhi Kumar SenthilKumar
Thursday, December 16
ஒரே நாள்ல என் கார்ல ஏறி இன்ப அதிர்ச்சி கொடுத்த ரவி அண்ணே, கீதா அக்கா, தமிழ் Blogs, மிதுன், மணிவண்ணன் யாதவராம் ஆகிய அனைவருக்கும் என் நன்றி.
முன்னரே என் கார்ல ஏறி குந்துன நிலாமகள், தாமஸ் ரூபன், உலவு காம், ரிஷபன், பிலாசபி பிரபாகரன் ஆகியோருக்கும் மிக்க நன்றி.
நன்றி படலத்தை முடிச்சாச்சி. அப்படியே நம்ம மேட்டருக்கு வருவோம். 2010' நல்ல மழை மற்றும் பனியோடு முடியப்போகுது. சரியான நேரத்துல விருது கொடுப்பதைப்பற்றி பேசுவோம்.
'ஆஸ்கார்','கோல்டன் க்ளோப்', 'பாரத ரத்னா', 'ஃபிலிம்பேர்', 'கிராமி', 'கலைமாமணி' போன்ற விருதுகள் நன்கு பரிட்சயம். ஆனால் பலப் பேருக்கு 'கார் ஆஃப் த இயர்' (Car of the Year) விருதுகள் பற்றி தெரியாது.
இந்த விருதை பல நிறுவனங்கள் அளித்தாலும் அனைவராலும் சில நல்ல பேர் மற்றும் மீடியா வசமுள்ள நிறுவனங்களின் கணிப்பை தான் உண்மையான விருதாக ஏற்கிறார்கள். (Overdrive-CNBC TV 18, Car & Bike Show-NDTV). இதைத் தவிர உலக அளவில் விருது கொடுப்பவர் உண்டு. (http://www.caroftheyear.org/)
கேள்வி; "அதெல்லாம் சரி, இந்த விருதயெல்லாம் காருக்கு கொடுத்து இன்னா பிரயோஜனம்?"
பதில்; நம்ம வாங்கருத்துக்கு தானுங்க...
நாம் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் விருது கிடைத்த காருக்கு(!!!)
>அங்கீகாரம் கிடைக்கும்
>எல்லோரிடமும் போய்ச் சேரும்.
அதுமட்டுமல்ல, சில பேர் கடந்த வருடத்திற்கு கொடுப்பார்கள். சில பேர் புது வருடத்திற்கான விருதாக கொடுப்பார்கள்.
கேள்வி; "சரி, இதெல்லாம் எதுக்கு இவன் சொல்லறான்???"
பதில்; "நானும் கொடுக்கருத்துக்குதேன்!!!"
ஆமாங்க, சரியா சனவரி 1, மார்கழி 17, முஹர்ரம் 25, சனிக்கிழமை, ஆங்கில வருடப்பிறப்பு (காலண்டர் வந்துரிச்சி!! ) அன்னிக்கி கரிக்டா உங்களுக்கு அலசி... ச்சும்மா அலசி, ஆராஞ்சி விருத கொடுக்கறேங்க! (ரஜினி ஸ்லாங்கு'ல பேசிப் பாருங்க! கி கி கி கி!)
இன்றைய படம்;
விருது கொடுக்க எனக்காக கார் தேட போகுது பாத்தீங்களா! நண்பேன்டா! |
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//