Showing posts with label Mahindra. Show all posts

என்னுடைய சந்தேகம் தீர்ந்தது!

15/11/2010 அன்று நான் ஒரு போஸ்ட் போட்டேன். ஞாபகமிருக்கிறதா? (இல்லனா தொட்டு பார்). ஒரு மிகச் சிறந்த கார்,  அலுவலகத்திற்கு  தினசரி  பயன்படுத்த சொல்லியிருந்தேன். அதைப் பற்றி  எனக்கு  நிறைய பேர்  மின்னஞ்சல் (sibhikumar@tamil.com) அனுப்பினார்கள்.
அவர்களின் கேள்வி; " 'ரெவா-ஐ' எங்கே கிடைக்கும்?"
அவர்கள் மட்டுமல்ல... என்னுடைய சந்தேகமும் " 'ரெவா-ஐ' எங்கே கிடைக்கும்?" என்பதுதான்!!!
ஆனால் இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட்டார்கள் மஹிந்திரா உற்பத்தியாளர்கள். புனேவில் உள்ள நான்கு ஷோரூம்களில் 'ரெவா-ஐ' விற்கத்தொடங்கிவிட்டத. இன்னும் கொஞ்ச நாட்களில் இந்தியா முழுவதும் மஹிந்திரா ஷோரூம்களில் 'ரெவா-ஐ' விற்பனை துவங்கிவிடும்.
புதிதாக ஒரு கார் வந்தாலே முதலில் வாங்க நிறைய பேர் தயங்குவார்கள். புதிய தொழில்நுட்பத்தோடு மின்சாரத்தில் இயங்கும் இவ்வகை காரை வாங்க நிறைய பேர் தயங்குவார்கள். இதற்காகவே மஹிந்திரா ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
அதாவது முதலில் நாம் ஒரு  இலட்சத்தை  வட்டியில்லா  வைப்பு  தொகையாக கட்டிவிடவேண்டும் (காரின் விலையில் சேர்ந்தது). பிறகு ரூ.7999/மாதம் என்கிற விதத்தில் மூன்று வருடம் கட்டலாம். மூன்று வருடம் கழித்து இந்த கார் பிடிக்கவில்லை என்றால், காரை திருப்பி கொடுத்துவிட்டு ஒரு இலட்சத்தை தாரளமாக எடுத்து கொள்ளலாம்! 
சமீபத்திய சாதனை;
         மூன்று இலட்சம் மாருதி ஆல்டோ இந்தியா முழுவதும் 2010'ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனை  ஆல்டோவை  'உலகத்தில் மிகச் சிறப்பாக விற்பனையான கார்' என்கிற கௌரவத்தை அளித்துள்ளது.        
மாருதி ஆல்டோவை  இந்தியர்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்த கார் 2000'ம் வருடத்தில் வெளிவந்தது. வெளிவந்த நாளிலிருந்து இதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. மாருதி 800' க்கு ஆல்டோ ஒரு மாற்று என்பது அனைவரும் ஏற்றுகொண்ட ஒரு உண்மை.

//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Sunday, January 30
Posted by Sibhi Kumar SenthilKumar

Mahindra Great Escape- ஓர் அறிமுகம்


கார் வாங்குபவர்களெல்லாம் ஒரே பயன்பாட்டிற்காக வாங்குவது அல்ல. சிலர் ஓட்டுகிற அனுபவத்திற்காக வாங்குவர்; சிலர் பிறர் மதிப்பதற்காக வாங்குவர். ஆனால் எல்லோரும் own driving செய்வதில்லை.
அப்படி own driving செய்பவர்களில் சில பேருக்கு 'ரேஸில்' கலந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கும். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் சாத்தியப்படும்படியான விஷயம் அல்ல.
உங்கள் ஏக்கத்தை தீர்த்து வைக்க வருகிறார்கள் மகேந்திரா மோட்டர்ஸ். "உங்கள்ட்ட மகேந்திரா கார் இருக்கிறதா? இருந்தா சொல்ற இடத்துக்கு வாங்க. ஸ்டிக்கர் ஒட்டி சும்மா பூந்து விளையாடலாம்" என்று உற்சாகத்தோடு சொல்கிறார்கள். 'ஸ்கார்ப்பியோ', 'போலீரோ' மற்றும் ஜீப்புகள் வைத்திருப்பவர்கள் அவர்கள் மாநிலத்திலே கலந்துக்கொள்ளலாம்!!! ஆம், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் 1996'ம் வருடத்திலிருந்து நடத்திகொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து அவர்களிடம் 'எதற்காக நடத்துகிறீர்கள்?' என்று கேட்டால், "இதன் மூலம் எங்கள் தயாரிப்பு கார்களின் உறுதியும், தரத்தையும் உரிமையாளர்கள் அறிந்துகொள்வார்கள்" என்கிறார்கள். மேலும், "இது ஒரு போட்டியல்ல. சும்மா த்ரில்லுக்குதான்" என்று சொல்கிறார்கள். இதற்கு சில விதிமுறைகள் சொல்கிறார்கள். அவை
  • அதிகபட்சம் 4 பேர்தான் ஒரு காரில் அனுமதிக்கபடுவர். நம் பாதுகாப்பிற்காக அழைத்துக்கொள்ளலாம்.
  • கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும்.
  • கண்டிப்பாக முதலுதவிப் பெட்டி வைத்திருக்கவேண்டும்.
கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் ரூ.3000 டி.டி எடுத்து அனுப்பவேண்டும். பெட்ரோல் அல்லது டீசல் செலவு கட்டணத்தில் அடங்காது.

முகவரி;
Mahindra & Mahindra Ltd.,
Automotive Sector, Mahindra Towers- 3rd Floor,
Akurli Road,
Kandivali (East),
Mumbai – 400101
Tel : 28468525
Fax : 28468523
E-mail :greatescape@mahindra.com

ரிஜிஸ்டர் செய்ய இங்கு செல்லுங்கள்.
ஆன்லைனில் பணம் கட்ட இங்கு செல்லுங்கள்.

இன்றைய படம்;
சும்மா பதிவுக்கு சம்பந்தமா ஒரு சவாலான படம்.
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Wednesday, November 17
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -