Archive for November 2014

வாகனத்துடன் கட்டாயம் இருக்கவேண்டியவை

     வணக்கம் வாசகர்களே.. இந்த பதிவில் நமது வாகனத்தில் எப்பொழுதும் கட்டாயமாக இருக்கவேண்டிய பொருட்களை சொல்லபோகிறேன். உங்களிடம் கார் இருந்தால், நான் கீழே சொல்லப்போகும் பொருட்களில் கொஞ்சம் முன்னரே இருக்கும். இல்லாவற்றை கண்டிப்பாக வாங்கிவிடுங்கள். கார் வாங்கப்போகிறீர்கள் என்றால், இந்த பொருட்களையும் காருடன் சேர்த்து வாங்கிவிடுங்கள். ஏனென்றால், மொத்தமாக வாங்கும்போது இவற்றின் விலை குறையும்.


1.ஜம்பர் கேபிள் (Jumper Cables):

கார் வைத்திருக்கும் அனைவரும் ஏதேனும் ஒரு சமயம் எதிர்ப்பாரா விதத்தில் பேட்டரி தீர்ந்துப் போய் நிற்பார்கள். இவற்றை உங்களுக்கு உபயோகப் படுத்த தெரியாவிட்டாலும் இவை இருந்தால் எவரேனும் தெரிந்தவர்கள் இதை உபயோகித்து ஸ்டார்ட் செய்ய முடியும். இதன் ஆரம்ப விலை ரூ.600.




2.பிரஷர் பார்க்கும் கருவி (Pressure Gauge):

அனைத்து டயரிலும் சரியான காற்றழுத்தம் இல்லையென்றால் மைலேஜ் ஐ கடுமையாக பாதிக்கும். விபத்து நடப்பதற்கும் கணிசமான அளவு வாய்ப்புள்ளதால் இந்த கருவியை கண்டிப்பாக உங்களுடன் வைத்துக்கொள்ளவும். இதன் ஆரம்ப விலை ரூ.300.


3.டக்ட் டேப் (Duct Tape):

நிறைய படங்களில் யாரையாவது கடத்தும்போது வாயில் ஒட்டியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இந்த டேப் மிகவும் உறுதியானது மற்றும் எளிதில் கிழியாது. எதிர்ப்பாரா விதத்தில் காரின் ஏதேனும் ஒரு பகுதி உடைந்துவிட்டால் ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.300.




4.முதலுதவிப் பெட்டி (First Aid Box):

அனைத்து வாகனத்திலும் கட்டாயமாக இருக்கவேண்டிய வஸ்து இது. சரியான மருந்துகள் மற்றும் பொருட்களை தனியே வாங்கி நீங்களே ஒரு முதலுதவிப் பெட்டி உருவாக்கலாம். இல்லையென்றால் கடைகளில் ஒருசேர கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.595



5.டார்ச் லைட் (Flash Light):

எந்தவொரு நெருக்கடியான கட்டத்திலும் அதிகமாக தேவைப்படுவது டார்ச் லைட் தான். ஒரு மீடியம் சைஸ் டார்ச் லைட் (பேட்டரிகள் நீக்கப்பட்டு) எப்பொழுதும் உங்கள் வாகனத்தில் இருக்கவேண்டும்.






6.ஆல் இன் ஆல் கருவி (Multi Tool):


ஆல் இன் ஆல் கருவிகள் பல இருந்தாலும், அவற்றில் 'ஸ்விஸ் ஆர்மி கத்தி' எனப்படும் கருவி பிரபலமானது. இதன் ஆரம்ப விலை ரூ.175.






7.தீப்பெட்டி (Match Box)

லைட்டராக இருந்தாலும் பரவாயில்லை.



8.தண்ணீர் பாட்டில்கள் (Empty Water Bottles):


வாகனத்தில் கண்டிப்பாக இரண்டு தண்ணீர் பாட்டில்கலாவது இருக்கவேண்டும். மினரல் பாட்டில்களோ கூல்டிரிங்ஸ் பாட்டில்களோ கண்டிப்பாக இருக்கக்கூடாது. 'தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக்'ஆல் செய்யப்படும் பாட்டில்களே நல்லது.



9.பாதுகாப்பு சுத்தி (Safety Hammer):

பெரும்பாலும் நாம் அனைவரும் ஜன்னல்களை மூடியப்படியே ஏ.சி போட்டுக்கொண்டு தான் பயணம் செய்கிறோம். பல கார்களில் பவர் விண்டோஸ் தான் இருக்கிறது. எதேனும் விபத்து நடக்குமாயின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பிக்க கட்டாயமாக இந்த சிறிய சுத்தி தேவைப்படும். இதனுடைய பின்பக்கத்தின் மூலம் சீட்பெல்ட் ஐ வெட்ட முடியும். இதன் ஆரம்ப விலை ரூ.300.




10.பளபளக்கும் முக்கோணம் (Reflective Triangle):

இரவில் வெளிச்சமில்லாத சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகளில் நமது வாகனம் நின்று விட்டால், பின்னாடி வரும் வாகனங்களுக்கு நமது வாகனம் தெரியாமல் இடித்துவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி, இரவு நிற்கும் வாகனங்கள் கண்டிப்பாக ஒரு மீட்டருக்கு முன்பு இந்த முக்கோணத்தை வைக்க வேண்டும். ஒருவேளை எவரேனும் இடித்துவிட்டால். காப்பீட்டை கோர முடியாது. எனது நண்பருக்கு இந்த சம்பவம் நடந்து பிறகு அதை சரிசெய்ய ரூ.20000 செலவிட்டார். இதன் ஆரம்ப விலை ரூ.450.



11.காலி கேன் (Empty can):

எப்பொழுதும் உங்கள் வாகனத்தில் ஒரு காலி கேன் இருக்க வேண்டும் (குறைந்தபட்சம் 5லி அளவிலானது). கண்டிப்பாக இதில் உங்கள் எரிப்பொருளை தவிர வேறு எதையும் நிரப்பக்கூடாது. அவ்வபோது இவற்றில் ஓட்டை இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ளுங்கள்.


12.பெரிய குடை (Umbrella):


அந்த காலத்து பெரிய குடை அளவு இருக்கவேண்டும். இல்லையென்றால் சிறியவை இரண்டு.






13.போர்வைகள் (Blankets)


14.கைத்துண்டு (Towel)








15.பணம் (Emergency Change):

சில்லறைகள் கொஞ்சம் கட்டாயமாக வாகனத்தில் இருக்கவேண்டும். அவற்றை எக்காரணத்தை கொண்டும் அவசரமில்லாத நேரத்தில் எடுக்காதீர்கள்.





16.பேப்பர் & பேனா (Paper & Pen)










17.கார் சார்ஜர் (Car USB charger):

நீண்ட தூர பயணத்தின்போது நமது கைப்பேசி திடீரென்று சார்ஜ் தீர்ந்து நின்று அணைந்துவிடும். ஆல் பின் சார்ஜர்களும் கிடைக்கின்றது. இவற்றின் ஆரம்ப விலை ரூ.130







18.டிஷ்யூ பேப்பர்கள் (Tissue Papers):

இவற்றின் ஆரம்ப விலை ரூ.60.






 
     நான் மேலே குறிப்பிட்டிருக்கும் பொருட்கள் வாகனத்தில் இருந்தால் பல நேரங்களில் கண்டிப்பாக உங்கள் நேர விரயத்தையும் பண விரயத்தையும் தவிர்க்கலாம். சென்னைவாசிகள் G.P ரோட்டிற்கு சென்றால் நிமிடத்தில் இவற்றை வாங்கிவிடலாம். மற்றவர்கள், இவற்றில் சில பொருட்கள் உங்கள் பகுதியில் கிடைக்கவில்லை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக்கொல்லாம்.

இந்த பொருட்களை ஆன்லைனில் வாங்க சில இணையதள முகவரிகள்:
http://www.ebay.in/
http://www.amazon.in/
http://www.snapdeal.com/





என்ன கொடுமை சார் இது ??

உலகில் இன்று அனைத்து துறையிலும் கலக்கிக்கொண்டிருப்பதை பற்றி தான் சொல்லப் போகிறேன். ஃபேன், ஏ/சி, சினிமா எனத் தொடங்கி மனிதர்கள் வரை சகலத்திலும் தனது மூக்கை நுழைத்து ஆட்டிப்படைக்கிறது. அட.. அதாங்க.. 'ரேட்டிங்'

     முன்பெல்லாம் ஒரு சினிமா எடுத்தால், ஹிட்டோ ஃப்ளாப்போ போட்ட முதலீட்டை எடுத்துவிடலாம். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. முதல் காட்சியை திரையிட்டவுடன், வலைத்தளம், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சகலத்திலும் விமர்சிக்கப்படுகிறது. கடைசியில் முக்கியமாக அவர்களது 'ரேட்டிங்'ஐ யும் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அந்த ஒரு வரியில் படத்தின் எதிர்காலம் (அதாங்க வருமானம்) தெரிந்துவிடும். 

     "அடேங்கப்பா.. ஆனா இந்த 'ரேட்டிங்' மேட்டரு நம்ம வாகனத்துக்கு மட்டும் தாம்பா இல்ல" என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பா இருக்குங்க.   முக்கியமாக பாதுகாப்பு அம்சங்களை சோதிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்டது தான் 'யூரோ என்காப்' (Euro NCAP), 'க்ளோபல் என்காப்' (Global NCAP). இந்த நிறுவனங்கள் கார்களை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, பிறகு அதற்கு ஒரு ரேட்டிங் கொடுப்பார்கள்.



     பெரும்பாலும் கார் தயாரிப்பாளர்கள், நல்ல ரேட்டிங் வந்தால் அதை பெருமையாக பறைசாற்றுவார்கள். இல்லையென்றால் கமுக்கமாக இருந்துவிடுவார்கள்.

     'க்ளோபல் என்காப்' தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஒரு காரை சோதனை செய்து தங்கள் முடிவுகளை வழங்கியதில் சர்ச்சைகள் ஆரம்பமாகியிருக்கிறது.

     1986 ல் நிறுத்தப்பட்ட நிறுவனமான 'டட்சன்' பேரைக்கொண்டு பிரபலமான ஜப்பான் நிறுவனமான 'நிஸான்' கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய கார், 'டட்சன் கோ'. இதன் ஆரம்ப விலை ரூ.3.70 லட்சம் (ஆன்-ரோட், சென்னை). நீண்ட நாட்களாக மார்கெட்டில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் மாருதி ஆல்டோவிற்கு போட்டியாக களம் இறக்கப்பட்டது. 'இந்தியாவில் முதன்முறையாக அறிமுகபடுத்தியாச்சு. இந்தோனேசியா மற்றும் ஆஃப்ரிக்காவில் அறிமுகபடுத்தலாம்' என கனவு கண்டுகொண்டிருந்த நிஸான் இப்பொழுது ஸ்தம்பித்துள்ளது.

     மேட்டருக்கு வருவோம். க்ளோபல் என்காப் நிறுவனம், டட்சன் கோ வை சோதித்துவிட்டு தந்த ரேட்டிங் 0/5. அதாங்க.. முட்டை. அதுமட்டுமல்லாமல் அந்த நிறுவனம் நிஸான் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் சாராம்சம் இதுதான். 'இந்தியாவில் உங்களது டட்சன் கோ வின் விற்பனையை உடனே நிறுத்துங்கள்'.

டட்சன் கோ

     இந்த டட்சன் கோ அதன் தாய்நாடான ஜப்பானில் விற்கப்படவில்லை என்பதை குறித்துக்கொள்ளுங்கள். எதெற்கெடுத்தாலும் சீன தயாரிப்பு பொருட்களை கூறுபவர்கள் ஒருமுறை சீனாவிற்கு சென்று பாருங்கள். அங்கே விற்கப்படும் பொருட்களின் தரம் மிகவும் உயர்வாக இருக்கும். அனால் இங்கு மிகவும் சுமாராக இருக்கும். அனைத்து நாடுகளின் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டது இந்தியா. 

     சரி. இவனுங்கதான் இப்படி. மற்ற கார்கள்?? டாட்டா நானோ, ஹுண்டாய் ஐ10, மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ, மாருதி ஆல்டோ 800 என்று அனைத்து கார்களும் எடுத்தது முட்டை தான். இவை அனைத்தும் 60 Kmph வேகத்தில் சோதிக்கபட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில் வாகனங்கள் விற்கப்பட கட்டுபாடுகள் மிகவும் தளர்வாக இருக்கிறது என்பதையே இவை சுட்டிக்காட்டுகிறது.

டாட்டா நானோ

ஹுண்டாய் ஐ10

மாருதி ஸ்விஃப்ட் 

ஃபோர்டு ஃபிகோ

மாருதி ஆல்டோ 800


     உலகளவில், இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதற்கு காரணங்கள் 
 1.குப்பையான கார் 
 2.தகுதியில்லாத ஓட்டுநர்கள் 
 3.தரமில்லாத சாலைகள் 
 4.விதிமுறை மீறல்கள் 

     அரசாங்கத்தை குறை சொல்வதற்கு பதில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், இவற்றில் மூன்று விஷயங்களை நாமே மாற்றிடலாம். நேர்மையாக ஓட்டுநர் உரிமத்தை வாங்குங்கள். கார் வாங்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் விலை, டிசைன் பார்ப்பதற்கு முன்னர் பாதுகாப்பு அம்சங்களான ஏர்பேக், ஏ.பி.ஸ், இ.பி.டி போன்றவை இருக்கிறதா என்று பாருங்கள். (பார்க்க-http://sibhikumar.blogspot.com/2011/02/blog-post_21.html). எக்காரணத்தை கொண்டும் சாலை விதிமுறைகளை மீறாதீர்கள். இவை அனைத்தையும் நாம் மாற்றிக்கொண்டால் 80% விபத்துக்களை தவிர்க்கலாம். 

  'பாத்து சூதானமா நடந்துக்கோங்க சாமீ !!"  

இதற்கு சம்பந்தமாக எனது முந்தைய பதிவுகள்:

//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
     

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -