Showing posts with label டிப்ஸ். Show all posts
டயர் வெடிபபு - தவிர்ப்பது, தப்பிப்பது எப்படி?
பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுவது டயர் வெடிப்புகள் தான். இன்று நாம் கார் டயர் வெடிப்புகளைப் பற்றியும் அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் குறித்தும் காண்போம்.
இந்த பதிவிற்கு முன்னோடி சுமார் இரண்டுவாரங்களுக்கு முன்பு தர்மபுரியில் நடந்த விபத்துதான். பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த நண்பர்களை ஏற்றி வந்த கார் நெடுஞ்சாலையில் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலையில் வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த ஐந்து நபர்களும் லாரியின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த ஒரு பெண்மணி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குள்ளான சுமார் 15 லட்சம் மதிப்புள்ள டாடா சஃபாரி ஸ்டார்ம் கட்டுமானத்தில் உறுதியான கார் தான். ஆனாலும் விபத்தில் எப்படி நொறுங்கியிருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.
"பாதுகாப்பாக தான் செல்கிறோம். ஆனால் அதீத வெயிலில் டயர் வெடித்தால் நாம் என்ன செய்ய முடியும்??" என்று பலர் நினைக்கிறார்கள், அதுதான் இல்லை. சூரிய வெப்பத்தை தவிர நிறைய காரணங்கள் உண்டு.
டயர் வெடிப்பதற்கான காரணங்கள்
1. டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைவிட குறைவாக இருப்பது. குறைவான காற்றழுத்தம் இருந்தால் டயரின் பக்கவாட்டு சுவர்கள் வளைந்து டயரின் அமைப்பை குலைக்கும். இதனால் வெப்பம் அதிகரித்து டயர் வெடிப்பிற்கு உள்ளாகிறது. மாதத்திற்கு ஒருமுறையோ நீண்ட பயணத்திற்கு முன்போ டயரின் காற்றழுத்தத்தை பரிசோதிப்பது நல்லது. நிறைய தூரம் காரில் பயணித்தப்பின் காற்றழுத்தத்தை பரிசோதித்தால் வெப்பத்தால் அளவில் வித்தியாசம் ஏற்படும். அதனால் பயணத்தை துவங்கிய போதோ அல்லது துவங்கிய 2-3 கி.மீட்டர்களிலோ பரிசோதிப்பது நல்லது.
2. டயரின் பக்கவாட்டில் வெட்டு/வீக்கம் ஏற்பட்டிருப்பது மற்றும் சமமில்லாது தேய்ந்துப்போன டயர்கள். அவ்வாறு சிறு சிறு சேதமிருக்கும் டயரோடு நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது சேதம் பெரிதாகும். இதனால் டயரின் அமைப்பு குலைந்து டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மாதம் இருமுறையாவது அனைத்து டயர்களையும் கவனியுங்கள். ஏதேனும் சேதமோ அல்லது சமமில்லாது தேய்ந்துப் போயிருந்தாலோ யோசிக்காமல் மாற்றிவிடுங்கள். வருமுன் காப்பது நல்லது.
3. அதிக வேகம் மற்றும் அதிக எடையை காரில் ஏற்றுவது. அனைத்து டயர்களுக்கும் அதிகபட்ச வேகம் மற்றும் எடை ஆகியவற்றை நிர்ணயித்திருப்பார்கள். அதனை தாண்டும்போது டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக கார் தயாரிப்பாளர்கள் /போக்குவரத்து துறை அனுமதித்த அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கையை கடைப்பிடிப்பது நல்லது. (எ.கா. டாடா இண்டிகா- 4+1 , டொயோட்டா இன்னோவா- 7+1). நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை டயரை பார்த்தே சொல்லிவிடலாம்.
ஒரு வேளை நீங்கள் ஓட்டும்போது திடீரென்று டயர் வெடித்தால் என்ன செய்யவேண்டுமென்று பார்ப்போம்.
முதல் முக்கியமான விஷயம். எக்காரணத்தைக் கொண்டும் ப்ரேக்'ஐ அழுத்தவேண்டாம். அச்சமயத்தில் அனைவரும் செய்யும் பெரும் தவறு இதுதான்.
முன் பக்க டயர் வெடித்தால் அதிர்வுகளோடு எந்த பக்க டயர் வெடித்ததோ அந்த பக்கத்திற்கு வண்டியை இழுக்கும். பின் பக்க டயர் வெடித்தால் பெரும் அதிர்வுகளோடு காரை திருப்பிவிடும். எனவே ஸ்டீரிங் ஐ கட்டுபடுத்துவது மிகவும் முக்கியமானது. எனவே பதட்டப்படாமல் ஆக்சிலேட்டர் லிருந்து காலை எடுத்துவிட்டு காரின் திசையை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்.
ஸ்டீரிங் உங்கள் கட்டுக்குள் வந்த பின்பு, வண்டியின் வேகம் குறைந்தப் பிறகு ப்ரேக் ஐ அழுத்தலாம்.
பி.கு. சீட்பெல்ட் போடுபவர்கள் இவ்வகையான விபத்துகளிலிருந்து 90 சதவிகிதத்திற்கும் மேலானோர் உயிர்ப் பிழைக்கிறார்கள். எனவே வாசகர்களே...
டயர் வெடிப்பதற்கான காரணங்கள்
1. டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைவிட குறைவாக இருப்பது. குறைவான காற்றழுத்தம் இருந்தால் டயரின் பக்கவாட்டு சுவர்கள் வளைந்து டயரின் அமைப்பை குலைக்கும். இதனால் வெப்பம் அதிகரித்து டயர் வெடிப்பிற்கு உள்ளாகிறது. மாதத்திற்கு ஒருமுறையோ நீண்ட பயணத்திற்கு முன்போ டயரின் காற்றழுத்தத்தை பரிசோதிப்பது நல்லது. நிறைய தூரம் காரில் பயணித்தப்பின் காற்றழுத்தத்தை பரிசோதித்தால் வெப்பத்தால் அளவில் வித்தியாசம் ஏற்படும். அதனால் பயணத்தை துவங்கிய போதோ அல்லது துவங்கிய 2-3 கி.மீட்டர்களிலோ பரிசோதிப்பது நல்லது.
3. அதிக வேகம் மற்றும் அதிக எடையை காரில் ஏற்றுவது. அனைத்து டயர்களுக்கும் அதிகபட்ச வேகம் மற்றும் எடை ஆகியவற்றை நிர்ணயித்திருப்பார்கள். அதனை தாண்டும்போது டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக கார் தயாரிப்பாளர்கள் /போக்குவரத்து துறை அனுமதித்த அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கையை கடைப்பிடிப்பது நல்லது. (எ.கா. டாடா இண்டிகா- 4+1 , டொயோட்டா இன்னோவா- 7+1). நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை டயரை பார்த்தே சொல்லிவிடலாம்.![]() |
| உங்கள் டயரின் பக்கவாட்டிலுள்ள குறியீடுகளின் விரிவாக்கம் |
![]() |
| Speed Rating க்கான வேக அளவீடு |
ஒரு வேளை நீங்கள் ஓட்டும்போது திடீரென்று டயர் வெடித்தால் என்ன செய்யவேண்டுமென்று பார்ப்போம்.
முதல் முக்கியமான விஷயம். எக்காரணத்தைக் கொண்டும் ப்ரேக்'ஐ அழுத்தவேண்டாம். அச்சமயத்தில் அனைவரும் செய்யும் பெரும் தவறு இதுதான்.
முன் பக்க டயர் வெடித்தால் அதிர்வுகளோடு எந்த பக்க டயர் வெடித்ததோ அந்த பக்கத்திற்கு வண்டியை இழுக்கும். பின் பக்க டயர் வெடித்தால் பெரும் அதிர்வுகளோடு காரை திருப்பிவிடும். எனவே ஸ்டீரிங் ஐ கட்டுபடுத்துவது மிகவும் முக்கியமானது. எனவே பதட்டப்படாமல் ஆக்சிலேட்டர் லிருந்து காலை எடுத்துவிட்டு காரின் திசையை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்.
ஸ்டீரிங் உங்கள் கட்டுக்குள் வந்த பின்பு, வண்டியின் வேகம் குறைந்தப் பிறகு ப்ரேக் ஐ அழுத்தலாம்.
பி.கு. சீட்பெல்ட் போடுபவர்கள் இவ்வகையான விபத்துகளிலிருந்து 90 சதவிகிதத்திற்கும் மேலானோர் உயிர்ப் பிழைக்கிறார்கள். எனவே வாசகர்களே...
Tuesday, April 19
Posted by Sibhi Kumar SenthilKumar
உங்கள் மைலேஜ் அதிகரிக்க, ஏ.சி யை போடுங்கள் !!
ஊரில் எத்தனை அநியாயங்கள் நடந்தாலும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் நம் மக்கள், பெட்ரோல்/டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏறினால் கூட கொதித்து போவார்கள். அதிலும் கார் வைத்திருப்பவர்களின் பாடு திண்டாட்டம் தான். கடந்த முறை அதிகளவில் பெட்ரோல்/டீசல் விலை இறங்கியபோது கார் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் ஜெயிலிலிருந்து வெளிவந்த கைதிகளை போல (என்னையும் சேர்த்து!!) காரை எடுத்துக்கொண்டு சுதந்திரமாக சுற்றினர்.
அதனால் கார் வைத்திருக்கும் அனைவரும் மைலேஜ் அதிகமாக கிடைக்க பல குட்டிக்கரணங்கள் போடுவார்கள். கூகுளில் தேடி பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அதில் முக்கியமான ஒன்று, முடிந்தவரை ஏ.சி யின் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென்பதே. குளிர் காலங்களில் ஏ.சி யின் தேவையில்லாமல் பயன்படுத்தாமல் இருக்கும்போது கிடைக்கும் ஒன்றிரண்டு கூடுதல் மைலேஜில் குளிர்ந்துப்போகும் அனைவரும் வெயில் காலத்தில் பல்லை கடித்துக்கொண்டு ஏ.சி யை அணைத்துவிட்டு ஓட்டுவார்கள். இனி அது தேவையில்லை.
நெடுஞ்சாலைகளில் ஏ.சி யை போட்டுக்கொண்டு போகும்போது மைலேஜ் குறைவதில்லை என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், நெடுஞ்சாலைகளில் அனைவரும் சுமார் 80கிமீ க்கும் மேலே தான் செல்வர். பொதுவாக நெடுஞ்சாலைகளில் காற்றை தடைசெய்யுமளவுக்கு உயரமான கட்டிடங்கள் இருப்பதில்லை. அப்பொழுது நீங்கள் கண்ணாடிகளை இறக்கியிருந்தீர்கள் என்றால், உங்களது வாகனம் வேகமான காற்றை கிழித்துக்கொண்டு செல்லவேண்டுமென்பதால், இன்ஜினுக்கு வேலை பளுவு அதிகமாகும். இதனால் அதிக எரிப்பொருள் வீணாகும்.
உங்களது கார் கண்ணாடிகள் மூடியிருந்ததால், இன்ஜினுக்கு எந்த கூடுதல் பளுவும் ஏற்படாது. ஆகவே, ஏ.சி யினால் ஏற்படும் எரிப்பொருள் இழப்பை விட திறந்திருக்கும் கண்ணாடியால் ஏற்படும் இழப்பு அதிகமாக இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பு: இது நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
எனவே, வாசகர்களே எதற்கும் பயப்படாமல் ஏ.சி. யை போட்டுக்கொண்டு உங்கள் பயணத்தை தொடருங்கள் !!

தகிக்கும் வெயிலும் வெளியூர் பயணமும்
அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகமாகிக்கொண்டிருப்பதை போலவே வெயிலின் தாக்கமும் தினம் தினம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த வெயிலினால் விரைவில் நாம் சோர்ந்துபோகிறோம். அதிலும் வெளியூர் பயணங்கள் நம்மை மிகவும் வாட்டுகிறது.
பேருந்துகளில் செல்லும்போதுதான் அவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒருசில சொகுசு பேருந்துகளை தவிர அனைத்து பேருந்துகளிலும் 'ரெக்சின்' இருக்கைகள் தான் உள்ளது. இவை மேலும் எரிச்சலாக இருக்கும்.
எனவே வெளியூர் பயணங்களுக்கு பேருந்துகளில் செல்வதை முடிந்த வரை தவிர்த்து கார் பயணங்களையே அனைவரும் விரும்புவீர்கள். இனிமேல் உங்களுக்கு சில டிப்ஸ்.
சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு...
வாடகை காரை பயன்படுத்துபவர்களுக்கு...
புதிதாக கார் வாங்குபவர்களுக்கு...
புதிதாக கார் வாங்குபவர்கள் அடர் நிறங்களான கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு ஆகிய நிறங்களை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் இந்த நிறங்கள் சூட்டை இழுத்துக்கொள்ளும். அதற்கு பதிலாக கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் நிறங்களான வெள்ளை, சில்வர், மெல்லிய நீல நிறம் ஆகியவை சிறந்தது.
எனவே வெளியூர் பயணங்களுக்கு பேருந்துகளில் செல்வதை முடிந்த வரை தவிர்த்து கார் பயணங்களையே அனைவரும் விரும்புவீர்கள். இனிமேல் உங்களுக்கு சில டிப்ஸ்.
சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு...
- உங்களின் பயணத்திற்கான வழித்தடங்களை முழுவதுமாக முன்கூட்டியே முடிவு செய்துவிடுங்கள்.
- நீங்கள் இரவு நேரத்தில் ஓட்டிய அனுபவம் இருந்தாலொழிய நீங்கள் இரவு நேரத்தில் ஓட்டாதீர்கள். வாடகை ஓட்டுநர்கள் அமர்த்தி நீங்கள் சுகமாக செல்லுங்கள்.
- வெயில் காரில் ஏ.சி. உபயோகிக்கும்போது மினிமம் ஸ்பீடிலேயே உபயோகிங்கள்.
- வெயிலில் காரை பார்க் செய்துவிட்டு நீண்ட நேரம் கழித்து வந்தீர்களானால், காரின் ஜன்னல்களை திறந்துவிட்டு ஏ.சி. யை கொஞ்ச நேரத்திற்கு ஆன் செய்யுங்கள். இதனால் அதிகரித்த காரின் தட்பவெட்பம் சமமாகும். பிறகு ஜன்னல்களை மூடிவிட்டு ஏ.சி. யை ஆன் செய்துவிட்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்.
- முடிந்தவரை அடிக்கடி வழியில் தென்படும் இயற்கை பழச்சாறுகளை பருகுங்கள்.
- ஏ.சி. பயன்படுத்தினால் மைலேஜ் கணிசமாக குறையுமென்பதால், இரவில் செல்லும்போது ஏ.சி. யை பயன்படுத்தாமல் ஜன்னல்களை திறந்துவிட்டு ஃபேன்களை பயன்படுத்துங்கள்.
வாடகை காரை பயன்படுத்துபவர்களுக்கு...
- முடிந்தவரை 'டிராவல் ஏஜென்சி'களிடமிருந்தே வண்டியை எடுங்கள். சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேர்வதோடு மட்டுமில்லாமல் தங்களால் வரமுடியாத சூழ்நிலைகளில் வேறு வண்டியை ஏற்பாடு செய்துவிடுவர்.
- உங்கள் குடும்பம் ஐந்து உறுப்பினர்களை கொண்டதாக வைத்துக்கொள்வோம். ஐந்து நபர்களுக்கு சரியாக இருக்கும் வண்டிகளை (அதாவது... இண்டிகா, அம்பாசிட்டர்...) எடுக்காமல் சற்று பெரிய காராக (அதாவது... சுமோ, இன்னோவா, டவேரா...) எடுங்கள்.
- வண்டியை புக் செய்யும்போதே ஏ.சி. வேண்டுமென்று சொல்லிவிடுங்கள். ஏ.சி. க்கு எவ்வுளவு பணம் அதிகமாக கொடுக்கவேண்டுமென்பதையும் முன்பே பேசிவிடுங்கள்.