Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts
டயர் வெடிபபு - தவிர்ப்பது, தப்பிப்பது எப்படி?
பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுவது டயர் வெடிப்புகள் தான். இன்று நாம் கார் டயர் வெடிப்புகளைப் பற்றியும் அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் குறித்தும் காண்போம்.
இந்த பதிவிற்கு முன்னோடி சுமார் இரண்டுவாரங்களுக்கு முன்பு தர்மபுரியில் நடந்த விபத்துதான். பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த நண்பர்களை ஏற்றி வந்த கார் நெடுஞ்சாலையில் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலையில் வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த ஐந்து நபர்களும் லாரியின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த ஒரு பெண்மணி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குள்ளான சுமார் 15 லட்சம் மதிப்புள்ள டாடா சஃபாரி ஸ்டார்ம் கட்டுமானத்தில் உறுதியான கார் தான். ஆனாலும் விபத்தில் எப்படி நொறுங்கியிருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.
"பாதுகாப்பாக தான் செல்கிறோம். ஆனால் அதீத வெயிலில் டயர் வெடித்தால் நாம் என்ன செய்ய முடியும்??" என்று பலர் நினைக்கிறார்கள், அதுதான் இல்லை. சூரிய வெப்பத்தை தவிர நிறைய காரணங்கள் உண்டு.
டயர் வெடிப்பதற்கான காரணங்கள்
1. டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைவிட குறைவாக இருப்பது. குறைவான காற்றழுத்தம் இருந்தால் டயரின் பக்கவாட்டு சுவர்கள் வளைந்து டயரின் அமைப்பை குலைக்கும். இதனால் வெப்பம் அதிகரித்து டயர் வெடிப்பிற்கு உள்ளாகிறது. மாதத்திற்கு ஒருமுறையோ நீண்ட பயணத்திற்கு முன்போ டயரின் காற்றழுத்தத்தை பரிசோதிப்பது நல்லது. நிறைய தூரம் காரில் பயணித்தப்பின் காற்றழுத்தத்தை பரிசோதித்தால் வெப்பத்தால் அளவில் வித்தியாசம் ஏற்படும். அதனால் பயணத்தை துவங்கிய போதோ அல்லது துவங்கிய 2-3 கி.மீட்டர்களிலோ பரிசோதிப்பது நல்லது.
2. டயரின் பக்கவாட்டில் வெட்டு/வீக்கம் ஏற்பட்டிருப்பது மற்றும் சமமில்லாது தேய்ந்துப்போன டயர்கள். அவ்வாறு சிறு சிறு சேதமிருக்கும் டயரோடு நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது சேதம் பெரிதாகும். இதனால் டயரின் அமைப்பு குலைந்து டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மாதம் இருமுறையாவது அனைத்து டயர்களையும் கவனியுங்கள். ஏதேனும் சேதமோ அல்லது சமமில்லாது தேய்ந்துப் போயிருந்தாலோ யோசிக்காமல் மாற்றிவிடுங்கள். வருமுன் காப்பது நல்லது.
3. அதிக வேகம் மற்றும் அதிக எடையை காரில் ஏற்றுவது. அனைத்து டயர்களுக்கும் அதிகபட்ச வேகம் மற்றும் எடை ஆகியவற்றை நிர்ணயித்திருப்பார்கள். அதனை தாண்டும்போது டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக கார் தயாரிப்பாளர்கள் /போக்குவரத்து துறை அனுமதித்த அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கையை கடைப்பிடிப்பது நல்லது. (எ.கா. டாடா இண்டிகா- 4+1 , டொயோட்டா இன்னோவா- 7+1). நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை டயரை பார்த்தே சொல்லிவிடலாம்.
ஒரு வேளை நீங்கள் ஓட்டும்போது திடீரென்று டயர் வெடித்தால் என்ன செய்யவேண்டுமென்று பார்ப்போம்.
முதல் முக்கியமான விஷயம். எக்காரணத்தைக் கொண்டும் ப்ரேக்'ஐ அழுத்தவேண்டாம். அச்சமயத்தில் அனைவரும் செய்யும் பெரும் தவறு இதுதான்.
முன் பக்க டயர் வெடித்தால் அதிர்வுகளோடு எந்த பக்க டயர் வெடித்ததோ அந்த பக்கத்திற்கு வண்டியை இழுக்கும். பின் பக்க டயர் வெடித்தால் பெரும் அதிர்வுகளோடு காரை திருப்பிவிடும். எனவே ஸ்டீரிங் ஐ கட்டுபடுத்துவது மிகவும் முக்கியமானது. எனவே பதட்டப்படாமல் ஆக்சிலேட்டர் லிருந்து காலை எடுத்துவிட்டு காரின் திசையை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்.
ஸ்டீரிங் உங்கள் கட்டுக்குள் வந்த பின்பு, வண்டியின் வேகம் குறைந்தப் பிறகு ப்ரேக் ஐ அழுத்தலாம்.
பி.கு. சீட்பெல்ட் போடுபவர்கள் இவ்வகையான விபத்துகளிலிருந்து 90 சதவிகிதத்திற்கும் மேலானோர் உயிர்ப் பிழைக்கிறார்கள். எனவே வாசகர்களே...
டயர் வெடிப்பதற்கான காரணங்கள்
1. டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைவிட குறைவாக இருப்பது. குறைவான காற்றழுத்தம் இருந்தால் டயரின் பக்கவாட்டு சுவர்கள் வளைந்து டயரின் அமைப்பை குலைக்கும். இதனால் வெப்பம் அதிகரித்து டயர் வெடிப்பிற்கு உள்ளாகிறது. மாதத்திற்கு ஒருமுறையோ நீண்ட பயணத்திற்கு முன்போ டயரின் காற்றழுத்தத்தை பரிசோதிப்பது நல்லது. நிறைய தூரம் காரில் பயணித்தப்பின் காற்றழுத்தத்தை பரிசோதித்தால் வெப்பத்தால் அளவில் வித்தியாசம் ஏற்படும். அதனால் பயணத்தை துவங்கிய போதோ அல்லது துவங்கிய 2-3 கி.மீட்டர்களிலோ பரிசோதிப்பது நல்லது.
3. அதிக வேகம் மற்றும் அதிக எடையை காரில் ஏற்றுவது. அனைத்து டயர்களுக்கும் அதிகபட்ச வேகம் மற்றும் எடை ஆகியவற்றை நிர்ணயித்திருப்பார்கள். அதனை தாண்டும்போது டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக கார் தயாரிப்பாளர்கள் /போக்குவரத்து துறை அனுமதித்த அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கையை கடைப்பிடிப்பது நல்லது. (எ.கா. டாடா இண்டிகா- 4+1 , டொயோட்டா இன்னோவா- 7+1). நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை டயரை பார்த்தே சொல்லிவிடலாம்.![]() |
| உங்கள் டயரின் பக்கவாட்டிலுள்ள குறியீடுகளின் விரிவாக்கம் |
![]() |
| Speed Rating க்கான வேக அளவீடு |
ஒரு வேளை நீங்கள் ஓட்டும்போது திடீரென்று டயர் வெடித்தால் என்ன செய்யவேண்டுமென்று பார்ப்போம்.
முதல் முக்கியமான விஷயம். எக்காரணத்தைக் கொண்டும் ப்ரேக்'ஐ அழுத்தவேண்டாம். அச்சமயத்தில் அனைவரும் செய்யும் பெரும் தவறு இதுதான்.
முன் பக்க டயர் வெடித்தால் அதிர்வுகளோடு எந்த பக்க டயர் வெடித்ததோ அந்த பக்கத்திற்கு வண்டியை இழுக்கும். பின் பக்க டயர் வெடித்தால் பெரும் அதிர்வுகளோடு காரை திருப்பிவிடும். எனவே ஸ்டீரிங் ஐ கட்டுபடுத்துவது மிகவும் முக்கியமானது. எனவே பதட்டப்படாமல் ஆக்சிலேட்டர் லிருந்து காலை எடுத்துவிட்டு காரின் திசையை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்.
ஸ்டீரிங் உங்கள் கட்டுக்குள் வந்த பின்பு, வண்டியின் வேகம் குறைந்தப் பிறகு ப்ரேக் ஐ அழுத்தலாம்.
பி.கு. சீட்பெல்ட் போடுபவர்கள் இவ்வகையான விபத்துகளிலிருந்து 90 சதவிகிதத்திற்கும் மேலானோர் உயிர்ப் பிழைக்கிறார்கள். எனவே வாசகர்களே...
Tuesday, April 19
Posted by Sibhi Kumar SenthilKumar
இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
"அது தாம்பரம் வண்டி..."
சாலையில் செல்லும் வண்டியை பார்த்த மாத்திரத்தில் எவராவது சொல்லும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். ஒரு வண்டியின் வாகனப் பதிவு எண்ணை வைத்து, பதிவு செய்யப்பட்ட மாநிலம், மாவட்டம் மற்றும் வழங்கப்பட்ட உரிமம் ஆகியவற்றை சுலபமாக கண்டுப்பிடிக்கலாம்.

உதாரணத்திற்கு இந்த பதிவு எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள்
TN 01 AA 3456
முதல் இரண்டு எழுத்துக்கள் (TN) பதிவு செய்யப்பட்ட மாநிலத்தைக் குறிக்கும். அடுத்த இரண்டு எண்கள் (01) பதிவு செய்யப்பட மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி நான்கு எண்கள் தான் அந்த வாகனத்தின் பிரத்யேக எண்.
அடுத்து, வழங்கப்பட்ட உரிமத்தை அடையாளம் காண்பது எப்படி என்று பார்ப்போம்.
- TN 01 AA 3456 - வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களை தாங்கியிருந்தால் அந்த வாகனத்தை உரிமையாளரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே தந்திருக்கும் உரிமம்.
- TN 01 AA 3456 - மஞ்சள் நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களை தாங்கியிருந்தால் அந்த வாகனத்தை உரிமையாளர் வணிக ரீதியாகவும் பயன்படுத்திக்கொள்ள (ஓட்டுவதற்கு வணிக ஓட்டுநர் உரிமம் அவசியம்) தந்திருக்கும் உரிமம்.
- TN 01 AA 3456 - கருப்பு நிறப் பின்னணியில் மஞ்சள் நிற எழுத்துகளை தாங்கியிருந்தால் அந்த வாகனத்தை வணிக ரீதியாக பயன்படுத்திக்கொள்ள (ஓட்டுவதற்கு வணிக ஓட்டுநர் உரிமம் அவசியமல்ல) தந்திருக்கும் உரிமம்.
- 77 CD 423 - நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிற எழுத்துகளை (CD) தாங்கியிருந்தால் அது வெளி/ஐக்கிய நாடுகளின் தூதகர்களுக்குச் (Consular Diplomats/United Nations) சொந்தமான வண்டிகளுக்கு தந்திருக்கும் உரிமம்.
- 52 CC 999 - மஞ்சள் நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களை (CC) தாங்கியிருந்தால் அது வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு (Consular Corps) சொந்தமான வண்டிகளுக்கு தந்திருக்கும் உரிமம்.
AN - அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு தனித்தனியாக பிரத்யேக எண்கள் உள்ளது. தமிழக மாவட்டங்களின் எண்களை (மேம்படுத்தப்பட்ட பட்டியல்) இங்கே பார்ப்போம். சமீபத்தில் தமிழக போக்குவரத்து துறை, அதிக வாகன பதிவெண்ணிக்கை காரணமாக பழைய மாவட்டங்களைப் பிரித்துள்ளது.
AP - ஆந்திர பிரதேசம்
AR - அருணாச்சல பிரதேசம்
AS - அஸ்ஸாம்
BR - பீகார்
CG - சட்டிஸ்கர்
CH - சண்டிகர்
DD - தாமன் தியு
DL - தில்லி
DN - தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
GA - கோவா
GJ - குஜராத்
HR - ஹரியானா
HP - இமாசலப் பிரதேசம்
JH - ஜார்க்கண்ட்
JK - ஜம்மு காஷ்மீர்
KA - கர்நாடகம்
KL - கேரளம்
LD - லட்சத்தீவுகள்
MH - மகாராஷ்டிரம்\
ML - மேகாலயா
MN - மணிப்பூர்
MP - மத்திய பிரதேசம்
MZ - மிசோரம்
NL - நாகாலாந்து
OD - ஒரிசா
PB - பஞ்சாப்
PY - புதுச்சேரி
RJ - ராஜஸ்தான்
SK - சிக்கிம்
TN - தமிழ்நாடு
TR - திரிபுரா
TS - தெலங்கானா
UK - உத்தரகாண்ட்
UP - உத்தரப் பிரதேசம்
WB - மேற்கு வங்காளம்
(எ.கா. TN-31 ல் முன்பு கடலூர் / சிதம்பரம் / நெய்வேலி / பண்ருட்டி / விருத்தாசலம் இருந்தது. தற்போது TN-31 ல் கடலூர் / பண்ருட்டி மற்றும் TN-91 ல் சிதம்பரம் / நெய்வேலி / விருத்தாச்சலம் ஆக உள்ளது)
| TN-01 | சென்னை சென்ட்ரல் (அயனாவரம்) |
| TN-02 | சென்னை - வட மேற்கு (அண்ணா நகர்) |
| TN-03 | சென்னை - வட கிழக்கு (தண்டையார்பேட்டை) |
| TN-04 | சென்னை - கிழக்கு (பேசின் பாலம்) |
| TN-05 | சென்னை - வடக்கு (கொளத்தூர்) |
| TN-06 | சென்னை - தென்கிழக்கு (மந்தவெளி) |
| TN-07 | சென்னை - தெற்கு (திருவான்மியூர்) |
| TN-09 | சென்னை - மேற்கு (கே.கே. நகர்) |
| TN-10 | சென்னை - தென்மேற்கு (விருகம்பாக்கம்) |
| TN-11 | சென்னை புறநகர் - தெற்கு (தாம்பரம்) |
| TN-12 | சென்னை புறநகர் - வட மேற்கு (பூந்தமல்லி) |
| TN-13 | சென்னை புறநகர் - வடக்கு சென்ட்ரல் (அம்பத்தூர்) |
| TN-14 | சென்னை புறநகர் - தென்கிழக்கு (சோழிங்கநல்லூர்) |
| TN-15 | உளுந்தூர்பேட்டை / கள்ளக்குறிச்சி |
| TN-16 | திண்டிவனம் / செஞ்சி |
| TN-18 | சென்னை புறநகர் - வடக்கு (செங்குன்றம் / கும்மிடிப்பூண்டி) |
| TN-19 | செங்கல்பட்டு / மதுராந்தகம் |
| TN-20 | திருவள்ளூர் / திருத்தணி |
| TN-21 | காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதூர் |
| TN-22 | சென்னை புறநகர் - தெற்கு சென்ட்ரல் (மீனம்பாக்கம்) |
| TN-23 | வேலூர் / குடியாத்தம் |
| TN-24 | கிருஷ்ணகிரி |
| TN-25 | திருவண்ணாமலை / ஆரணி / செய்யார் |
| TN-27 | சேலம் (தற்போது உபயோகத்தில் இல்லை) |
| TN-28 | நாமக்கல் வடக்கு / ராசிபுரம் |
| TN-29 | தர்மபுரி / பாலக்கோடு / ஹரூர் |
| TN-30 | சேலம் மேற்கு / ஓமலூர் |
| TN-31 | கடலூர் / பண்ருட்டி |
| TN-32 | விழுப்புரம் |
| TN-33 | ஈரோடு கிழக்கு |
| TN-34 | திருச்செங்கோடு |
| TN-36 | கோபி / பவானி / சத்தி |
| TN-37 | கோயம்புத்தூர் - தெற்கு / சூலூர் |
| TN-38 | கோயம்புத்தூர் வடக்கு |
| TN-39 | திருப்பூர் வடக்கு / அவினாசி |
| TN-40 | மேட்டுப்பாளையம் |
| TN-41 | பொள்ளாச்சி / வால்ப்பாறை |
| TN-42 | திருப்பூர் தெற்கு / காங்கேயம் |
| TN-43 | நீலகிரி |
| TN-45 | திருச்சி மேற்கு / மணப்பாறை |
| TN-46 | பெரம்பலூர் |
| TN-47 | கரூர் / அரவக்குறிச்சி / குளித்தலை / மணமங்கலம் |
| TN-48 | ஸ்ரீரங்கம் / முசிறி / துறையூர் / லால்குடி |
| TN-49 | தஞ்சாவூர் / பட்டுக்கோட்டை |
| TN-50 | திருவாரூர் / மன்னார்க்குடி / திருத்துறைப்பூண்டி |
| TN-51 | நாகப்பட்டினம் |
| TN-52 | சங்ககிரி / மேட்டூர் |
| TN-54 | சேலம் கிழக்கு |
| TN-55 | புதுக்கோட்டை / இலுப்பூர் / அறந்தாங்கி |
| TN-56 | பெருந்துறை |
| TN-57 | திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் / வேடசந்தூர் / வத்தலக்குண்டு / பழனி |
| TN-58 | மதுரை தெற்கு / திருமங்கலம் / உசிலம்பட்டி |
| TN-59 | மதுரை வடக்கு / வாடிப்பட்டி / மேலூர் |
| TN-60 | தேனி / உத்தமப்பாளையம் |
| TN-61 | அரியலூர் |
| TN-63 | சிவகங்கை / காரைக்குடி |
| TN-64 | மதுரை சென்ட்ரல் |
| TN-65 | இராமநாதபுரம் / பரமக்குடி |
| TN-66 | கோயம்புத்தூர் சென்ட்ரல் |
| TN-67 | விருதுநகர் / அருப்புக்கோட்டை |
| TN-68 | கும்பக்கோணம் |
| TN-69 | தூத்துக்குடி / கோவில்பட்டி |
| TN-70 | ஓசூர் |
| TN-72 | திருநெல்வேலி / வள்ளியூர் |
| TN-73 | ராணிப்பேட்டை / அரக்கோணம் |
| TN-74 | நாகர்கோவில் |
| TN-75 | மார்த்தாண்டம் |
| TN-76 | தென்காசி / அம்பாசமுத்திரம் |
| TN-77 | ஆத்தூர் / வாழப்பாடி |
| TN-78 | தாராசுரம் / உடுமலைப்பேட்டை |
| TN-79 | சங்கரன்கோவில் |
| TN-81 | திருச்சி கிழக்கு . திருவெறும்பூர் |
| TN-82 | மயிலாடுதுறை / சீர்காழி |
| TN-83 | வாணியம்பாடி / திருப்பத்தூர்/ ஆம்பூர் |
| TN-84 | ஸ்ரீவில்லிபுத்தூர் / சிவகாசி |
| TN-85 | சென்னை புறநகர் - தென் மேற்கு (குன்றத்தூர்) |
| TN-86 | ஈரோடு மேற்கு |
| TN-88 | நாமக்கல் தெற்கு / பரமத்தி |
| TN-90 | சேலம் தெற்கு |
| TN-91 | சிதம்பரம் / நெய்வேலி / விருத்தாச்சலம் |
| TN-92 | திருச்செந்தூர் |
| TN-99 | கோயம்புத்தூர் - மேற்கு |
| TN - ** - 'N' / 'AN' | அரசு போக்குவரத்துக் கழக வாகனங்கள் |
| TN - ** - 'G' / 'AG' / 'BG' / 'CG' | அரசு அலுவலக வாகனங்கள் |
தற்போது தூதகர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பதிவெண் குறித்து பார்ப்போம்.
77 CD 234
முதல் இரண்டு (அல்லது மூன்று) எண்கள் (77) தூதுவரின் நாட்டை குறிக்கும். பின்வரும் இரண்டு எழுத்துக்கள் (CC- Consular Corps | CD - Consular Diplomats) அவரது பதவியை குறிக்கும். கடைசி மூன்று எண்கள் அந்த வாகனத்தின் பிரத்யேக எண்.
இப்பொழுது நாடுகளின் குறியீட்டு எண்களைப் பார்ப்போம்.
| 1 | ஆஃப்கானிஸ்தான் |
| 2 | அங்கோலா |
| 5 | ஆஸ்திரேலியா |
| 17 | சீனா |
| 52 | நெதர்லாந்து |
| 68 | சுவிட்சர்லாந்து |
| 75 | ரஷ்யா |
| 77 | அமெரிக்கா |
| 109 | இஸ்ரேல் |
| 134 | போட்சுவானா |
-------------------------------------------------------------------------------------------------------------
வாசகர்களின் வசதிக்காக, வாகனப் பதிவெண் கையேடு (PDF file size: 607 KB) என்ற இந்த வலைப்பதிவின் மின்-வடிவ கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதை டவுன்லோட் செய்ய Click Here
-------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் மைலேஜ் அதிகரிக்க, ஏ.சி யை போடுங்கள் !!
ஊரில் எத்தனை அநியாயங்கள் நடந்தாலும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் நம் மக்கள், பெட்ரோல்/டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏறினால் கூட கொதித்து போவார்கள். அதிலும் கார் வைத்திருப்பவர்களின் பாடு திண்டாட்டம் தான். கடந்த முறை அதிகளவில் பெட்ரோல்/டீசல் விலை இறங்கியபோது கார் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் ஜெயிலிலிருந்து வெளிவந்த கைதிகளை போல (என்னையும் சேர்த்து!!) காரை எடுத்துக்கொண்டு சுதந்திரமாக சுற்றினர்.
அதனால் கார் வைத்திருக்கும் அனைவரும் மைலேஜ் அதிகமாக கிடைக்க பல குட்டிக்கரணங்கள் போடுவார்கள். கூகுளில் தேடி பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அதில் முக்கியமான ஒன்று, முடிந்தவரை ஏ.சி யின் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென்பதே. குளிர் காலங்களில் ஏ.சி யின் தேவையில்லாமல் பயன்படுத்தாமல் இருக்கும்போது கிடைக்கும் ஒன்றிரண்டு கூடுதல் மைலேஜில் குளிர்ந்துப்போகும் அனைவரும் வெயில் காலத்தில் பல்லை கடித்துக்கொண்டு ஏ.சி யை அணைத்துவிட்டு ஓட்டுவார்கள். இனி அது தேவையில்லை.
நெடுஞ்சாலைகளில் ஏ.சி யை போட்டுக்கொண்டு போகும்போது மைலேஜ் குறைவதில்லை என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், நெடுஞ்சாலைகளில் அனைவரும் சுமார் 80கிமீ க்கும் மேலே தான் செல்வர். பொதுவாக நெடுஞ்சாலைகளில் காற்றை தடைசெய்யுமளவுக்கு உயரமான கட்டிடங்கள் இருப்பதில்லை. அப்பொழுது நீங்கள் கண்ணாடிகளை இறக்கியிருந்தீர்கள் என்றால், உங்களது வாகனம் வேகமான காற்றை கிழித்துக்கொண்டு செல்லவேண்டுமென்பதால், இன்ஜினுக்கு வேலை பளுவு அதிகமாகும். இதனால் அதிக எரிப்பொருள் வீணாகும்.
உங்களது கார் கண்ணாடிகள் மூடியிருந்ததால், இன்ஜினுக்கு எந்த கூடுதல் பளுவும் ஏற்படாது. ஆகவே, ஏ.சி யினால் ஏற்படும் எரிப்பொருள் இழப்பை விட திறந்திருக்கும் கண்ணாடியால் ஏற்படும் இழப்பு அதிகமாக இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பு: இது நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
எனவே, வாசகர்களே எதற்கும் பயப்படாமல் ஏ.சி. யை போட்டுக்கொண்டு உங்கள் பயணத்தை தொடருங்கள் !!

என்ன கொடுமை சார் இது ??
உலகில் இன்று அனைத்து துறையிலும் கலக்கிக்கொண்டிருப்பதை பற்றி தான் சொல்லப் போகிறேன். ஃபேன், ஏ/சி, சினிமா எனத் தொடங்கி மனிதர்கள் வரை சகலத்திலும் தனது மூக்கை நுழைத்து ஆட்டிப்படைக்கிறது. அட.. அதாங்க.. 'ரேட்டிங்'
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
முன்பெல்லாம் ஒரு சினிமா எடுத்தால், ஹிட்டோ ஃப்ளாப்போ போட்ட முதலீட்டை எடுத்துவிடலாம். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. முதல் காட்சியை திரையிட்டவுடன், வலைத்தளம், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சகலத்திலும் விமர்சிக்கப்படுகிறது. கடைசியில் முக்கியமாக அவர்களது 'ரேட்டிங்'ஐ யும் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அந்த ஒரு வரியில் படத்தின் எதிர்காலம் (அதாங்க வருமானம்) தெரிந்துவிடும்.
"அடேங்கப்பா.. ஆனா இந்த 'ரேட்டிங்' மேட்டரு நம்ம வாகனத்துக்கு மட்டும் தாம்பா இல்ல" என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பா இருக்குங்க. முக்கியமாக பாதுகாப்பு அம்சங்களை சோதிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்டது தான் 'யூரோ என்காப்' (Euro NCAP), 'க்ளோபல் என்காப்' (Global NCAP). இந்த நிறுவனங்கள் கார்களை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, பிறகு அதற்கு ஒரு ரேட்டிங் கொடுப்பார்கள்.
பெரும்பாலும் கார் தயாரிப்பாளர்கள், நல்ல ரேட்டிங் வந்தால் அதை பெருமையாக பறைசாற்றுவார்கள். இல்லையென்றால் கமுக்கமாக இருந்துவிடுவார்கள்.
'க்ளோபல் என்காப்' தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஒரு காரை சோதனை செய்து தங்கள் முடிவுகளை வழங்கியதில் சர்ச்சைகள் ஆரம்பமாகியிருக்கிறது.
1986 ல் நிறுத்தப்பட்ட நிறுவனமான 'டட்சன்' பேரைக்கொண்டு பிரபலமான ஜப்பான் நிறுவனமான 'நிஸான்' கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய கார், 'டட்சன் கோ'. இதன் ஆரம்ப விலை ரூ.3.70 லட்சம் (ஆன்-ரோட், சென்னை). நீண்ட நாட்களாக மார்கெட்டில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் மாருதி ஆல்டோவிற்கு போட்டியாக களம் இறக்கப்பட்டது. 'இந்தியாவில் முதன்முறையாக அறிமுகபடுத்தியாச்சு. இந்தோனேசியா மற்றும் ஆஃப்ரிக்காவில் அறிமுகபடுத்தலாம்' என கனவு கண்டுகொண்டிருந்த நிஸான் இப்பொழுது ஸ்தம்பித்துள்ளது.

மேட்டருக்கு வருவோம். க்ளோபல் என்காப் நிறுவனம், டட்சன் கோ வை சோதித்துவிட்டு தந்த ரேட்டிங் 0/5. அதாங்க.. முட்டை. அதுமட்டுமல்லாமல் அந்த நிறுவனம் நிஸான் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் சாராம்சம் இதுதான். 'இந்தியாவில் உங்களது டட்சன் கோ வின் விற்பனையை உடனே நிறுத்துங்கள்'.
![]() |
| டட்சன் கோ |
இந்த டட்சன் கோ அதன் தாய்நாடான ஜப்பானில் விற்கப்படவில்லை என்பதை குறித்துக்கொள்ளுங்கள். எதெற்கெடுத்தாலும் சீன தயாரிப்பு பொருட்களை கூறுபவர்கள் ஒருமுறை சீனாவிற்கு சென்று பாருங்கள். அங்கே விற்கப்படும் பொருட்களின் தரம் மிகவும் உயர்வாக இருக்கும். அனால் இங்கு மிகவும் சுமாராக இருக்கும். அனைத்து நாடுகளின் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டது இந்தியா.
சரி. இவனுங்கதான் இப்படி. மற்ற கார்கள்?? டாட்டா நானோ, ஹுண்டாய் ஐ10, மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ, மாருதி ஆல்டோ 800 என்று அனைத்து கார்களும் எடுத்தது முட்டை தான். இவை அனைத்தும் 60 Kmph வேகத்தில் சோதிக்கபட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில் வாகனங்கள் விற்கப்பட கட்டுபாடுகள் மிகவும் தளர்வாக இருக்கிறது என்பதையே இவை சுட்டிக்காட்டுகிறது.
![]() |
| டாட்டா நானோ |
உலகளவில், இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதற்கு காரணங்கள்
1.குப்பையான கார்
2.தகுதியில்லாத ஓட்டுநர்கள்
3.தரமில்லாத சாலைகள்
4.விதிமுறை மீறல்கள்
அரசாங்கத்தை குறை சொல்வதற்கு பதில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், இவற்றில் மூன்று விஷயங்களை நாமே மாற்றிடலாம். நேர்மையாக ஓட்டுநர் உரிமத்தை வாங்குங்கள். கார் வாங்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் விலை, டிசைன் பார்ப்பதற்கு முன்னர் பாதுகாப்பு அம்சங்களான ஏர்பேக், ஏ.பி.ஸ், இ.பி.டி போன்றவை இருக்கிறதா என்று பாருங்கள். (பார்க்க-http://sibhikumar.blogspot.com/2011/02/blog-post_21.html). எக்காரணத்தை கொண்டும் சாலை விதிமுறைகளை மீறாதீர்கள். இவை அனைத்தையும் நாம் மாற்றிக்கொண்டால் 80% விபத்துக்களை தவிர்க்கலாம்.
'பாத்து சூதானமா நடந்துக்கோங்க சாமீ !!"
இதற்கு சம்பந்தமாக எனது முந்தைய பதிவுகள்:
http://sibhikumar.blogspot.com/2011/02/blog-post_21.html
http://sibhikumar.blogspot.com/2014/09/basic-indian-road-signs.html
http://sibhikumar.blogspot.com/2014/09/basic-indian-road-signs.html
Friday, November 7
Posted by Sibhi Kumar SenthilKumar
சாலையின் வகைகள்
நம்மில் பலருக்கு நமது சாலையில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று தெரிவதில்லை. (நமது நாட்டில் பல இடங்களில் சாலையே இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது!!!) ஏன் நமக்கு தெரியவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொன்னாலும் முக்கியமான காரணமாக நான் கருதுவது வட்டார போக்குவரத்துத் துறையின் மெத்தனம்.
வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில், லைசென்ஸ் எடுக்கவேண்டுமென்றால் சாலை விதிகள் மற்றும் சாலை குறியீடுகளை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு (எழுத்துப்பூர்வமாக) பதிலளிக்கவேண்டும். நமது நாட்டில் லைசன்ஸ் எப்படி கொடுக்கப்படுகிறது என்று நான் சொல்லத்தேவையில்லை.
அதனால், இந்த பதிவில் நான் அடிப்படையான சாலை குறியீட்டுகளை உங்களுக்காக பதிவிடுகிறேன்.
1.ஸ்டாப் லைன் (Stop Line):
பொதுவாக இரு வேறு சாலைகளின் இணைப்பிலும் சாலையின் டிராஃபிக் லைட் முன்பாகவும் இருக்கும். இந்த கோட்டிற்கு முன்பாகவே உங்கள் வாகனத்தை நிறுத்தவேண்டும். கோட்டை தாண்டி நிறுத்துவது தண்டனைக்குரிய செயலாகும்.
2.ஜீப்ரா கிராசிங் (Zebra Crossing):
ஒரு பக்கத்திலிருந்து மறுப் பக்கத்திற்கு சாலையில் கடந்து செல்லும் பாதசாரிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை. பாதசாரிகள் இவற்றை தவிர்த்து சாலையின் ஊடே கடந்தால் தண்டனைக்குரிய செயலாகும்.
3.தொடர்ச்சியில்லாத இணைவான கோடு (Parallel Broken Line):
இவற்றை Give way line என்றுக்கூட அழைப்பார்கள். ஒரு சிறிய சாலையிலிருந்து நெடுஞ்சாலையிலோ அல்லது முக்கியமான சாலையிலோ இணையும்போது இவற்றை உபயோகித்திருப்பார்கள். அதாவது உங்கள் முன்னே இருக்கும் சாலையில் செல்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
4.தடுப்புக் கோடு -இரண்டு வழிச்சாலையில் (Barrier Line):
தொடர்ச்சியான வெள்ளைக் கோடுகளானது. ஓட்டுநர் முன்னிருக்கும் வாகனத்தை முந்துவதற்காக கண்டிப்பாக இந்த கோட்டை தாண்டி செல்லக்கூடாது. எந்த பக்கத்தில் செல்கிறோமோ அதையே கடைப்பிடித்து செல்லவேண்டும்.
5.தடுப்புக் கோடு -நெடுஞ்சாலைகளில் (Barrier Line):
இந்த வகை கோட்டினை நெடுஞ்சாலையில் லேன்களை (Lane) பிரிப்பதற்கு பயன்படுத்தப் படுகிறது. ஓட்டுநர்கள் இவற்றை தாண்டலாம்.
6.தொடர்ச்சியான இணைவான கோடு (Continuous Parallel Line):
இதுவும் ஒரு வகையான தடுப்புக் கோடு தான். இந்த வகையான கோடு இருந்தால் ஓட்டுனர்கள் வாகனங்களை முந்துவதற்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.
7.மஞ்சள் கோடு (Yellow line):
இவ்வகை கோடுகளை பொதுவாக சாலையின் ஓரத்தில் போடுவார்கள். இந்த மஞ்சள் கோடு போடப்பட்டிருக்கும் இடங்களில் கண்டிப்பாக வண்டியை நிறுத்தக்கூடாது.
8.தொடர்ச்சியில்லாத கோடு மற்றும் தடுப்புக் கோடு (Broken Line to Barrier Line):
சில சாலைகளில், தொடர்ச்சியில்லாத கோடு முக்கியமான இடங்களில் (எ.கா. வளைவுகள்) தடுப்புக் கோடுகளாக மாறும். நெடுஞ்சாலையாக இருக்கும்பட்சத்தில் தொடர்ச்சியில்லாத கோடு வரை லேன்களை மாற்றி கொள்ளலாம். ஆனால் தடுப்புக் கோடு வந்த பிறகு லேன் மாறக்கூடாது.
9.சரியான லேனில் செல்லுங்கள்:
மேலுள்ள படத்தில் காட்டி இருப்பதுப்போல நமது நெடுஞ்சாலையின் உட்பகுதியை 'Inner Lane' என்பார்கள். வெளிப்பகுதியை 'Passing Lane' என்பார்கள். பொறுமையாக செல்லும் வாகனங்கள் (கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள்) இடது புறமாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும் வாகனங்கள் வலது புறமாக செல்லவேண்டும். ஆனால் காலம்காலமாக இந்த விதிமுறை மீறப்பட்டு வருகிறது. பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் வலது புறமாகவே செல்வார்கள். இது முற்றிலும் தவறு. நெடுஞ்சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு இதுவே காரணம்.
இந்த பதிவை படிக்கும் அனைவரும், இதற்கு பிறகு விதிமுறைப்படி வாகனத்தை ஓட்டுவோம் என்பதை உறுதியெடுத்துக்கொள்வோம். ஜெய்ஹிந்த் !!
வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில், லைசென்ஸ் எடுக்கவேண்டுமென்றால் சாலை விதிகள் மற்றும் சாலை குறியீடுகளை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு (எழுத்துப்பூர்வமாக) பதிலளிக்கவேண்டும். நமது நாட்டில் லைசன்ஸ் எப்படி கொடுக்கப்படுகிறது என்று நான் சொல்லத்தேவையில்லை.அதனால், இந்த பதிவில் நான் அடிப்படையான சாலை குறியீட்டுகளை உங்களுக்காக பதிவிடுகிறேன்.
1.ஸ்டாப் லைன் (Stop Line):
பொதுவாக இரு வேறு சாலைகளின் இணைப்பிலும் சாலையின் டிராஃபிக் லைட் முன்பாகவும் இருக்கும். இந்த கோட்டிற்கு முன்பாகவே உங்கள் வாகனத்தை நிறுத்தவேண்டும். கோட்டை தாண்டி நிறுத்துவது தண்டனைக்குரிய செயலாகும்.
2.ஜீப்ரா கிராசிங் (Zebra Crossing):
ஒரு பக்கத்திலிருந்து மறுப் பக்கத்திற்கு சாலையில் கடந்து செல்லும் பாதசாரிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை. பாதசாரிகள் இவற்றை தவிர்த்து சாலையின் ஊடே கடந்தால் தண்டனைக்குரிய செயலாகும்.
3.தொடர்ச்சியில்லாத இணைவான கோடு (Parallel Broken Line):
இவற்றை Give way line என்றுக்கூட அழைப்பார்கள். ஒரு சிறிய சாலையிலிருந்து நெடுஞ்சாலையிலோ அல்லது முக்கியமான சாலையிலோ இணையும்போது இவற்றை உபயோகித்திருப்பார்கள். அதாவது உங்கள் முன்னே இருக்கும் சாலையில் செல்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
4.தடுப்புக் கோடு -இரண்டு வழிச்சாலையில் (Barrier Line):
தொடர்ச்சியான வெள்ளைக் கோடுகளானது. ஓட்டுநர் முன்னிருக்கும் வாகனத்தை முந்துவதற்காக கண்டிப்பாக இந்த கோட்டை தாண்டி செல்லக்கூடாது. எந்த பக்கத்தில் செல்கிறோமோ அதையே கடைப்பிடித்து செல்லவேண்டும்.
5.தடுப்புக் கோடு -நெடுஞ்சாலைகளில் (Barrier Line):
இந்த வகை கோட்டினை நெடுஞ்சாலையில் லேன்களை (Lane) பிரிப்பதற்கு பயன்படுத்தப் படுகிறது. ஓட்டுநர்கள் இவற்றை தாண்டலாம்.
6.தொடர்ச்சியான இணைவான கோடு (Continuous Parallel Line):
இதுவும் ஒரு வகையான தடுப்புக் கோடு தான். இந்த வகையான கோடு இருந்தால் ஓட்டுனர்கள் வாகனங்களை முந்துவதற்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.
7.மஞ்சள் கோடு (Yellow line):
இவ்வகை கோடுகளை பொதுவாக சாலையின் ஓரத்தில் போடுவார்கள். இந்த மஞ்சள் கோடு போடப்பட்டிருக்கும் இடங்களில் கண்டிப்பாக வண்டியை நிறுத்தக்கூடாது.
8.தொடர்ச்சியில்லாத கோடு மற்றும் தடுப்புக் கோடு (Broken Line to Barrier Line):
சில சாலைகளில், தொடர்ச்சியில்லாத கோடு முக்கியமான இடங்களில் (எ.கா. வளைவுகள்) தடுப்புக் கோடுகளாக மாறும். நெடுஞ்சாலையாக இருக்கும்பட்சத்தில் தொடர்ச்சியில்லாத கோடு வரை லேன்களை மாற்றி கொள்ளலாம். ஆனால் தடுப்புக் கோடு வந்த பிறகு லேன் மாறக்கூடாது.
9.சரியான லேனில் செல்லுங்கள்:
மேலுள்ள படத்தில் காட்டி இருப்பதுப்போல நமது நெடுஞ்சாலையின் உட்பகுதியை 'Inner Lane' என்பார்கள். வெளிப்பகுதியை 'Passing Lane' என்பார்கள். பொறுமையாக செல்லும் வாகனங்கள் (கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள்) இடது புறமாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும் வாகனங்கள் வலது புறமாக செல்லவேண்டும். ஆனால் காலம்காலமாக இந்த விதிமுறை மீறப்பட்டு வருகிறது. பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் வலது புறமாகவே செல்வார்கள். இது முற்றிலும் தவறு. நெடுஞ்சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு இதுவே காரணம்.
இந்த பதிவை படிக்கும் அனைவரும், இதற்கு பிறகு விதிமுறைப்படி வாகனத்தை ஓட்டுவோம் என்பதை உறுதியெடுத்துக்கொள்வோம். ஜெய்ஹிந்த் !!
நமது வாகனத்தின் மைலேஜ்'ஐ அதிகப்படுத்துவது எப்படி?
வணக்கம் வாசகர்களே... கார் வாங்கும்போது, அவற்றின் டிசைன், சர்வீஸ், தரம் ஆகியவற்றை பார்ப்போம். ஆனால் மைலேஜ் என்ற ஒரு பகுதியை சிலர் கவனிக்க மாட்டார்கள். இல்லையென்றால், 'எங்கள் கார்தான் இந்தியாவிலே அதிகமாக மைலேஜ் தரும். அதற்கு அராய் (ARAI) சான்றிதழ் இருக்கிறது' என்று கார் தயாரிப்பாளர்கள் கூறுவதை நம்பி வாங்குவார்கள்.
2. ஏர் மற்றும் ஆயில் ஃபில்டர்கள்: அழுக்கான ஃபில்டர்கள் மைலேஜ் ஐ கடுமையாக குறைக்கும். அதனால் மேனுவலில் குறிப்பிட்ட காலக்கெடுவில் அவற்றை மாற்றவேண்டும்.
3.எடையை குறையுங்கள்: இடம் இருக்கிறதே என்று காரில், தேவையில்லாத பொருட்களை ஏற்றாதீர்கள்.
4.எரிப்பொருளை குறைவாக நிரப்புங்கள்: எரிப்பொருளை பாதி டாங்க் அல்லது கால் டாங்க் நிரப்பியிருந்தால் போதும். நீங்கள் நிரப்பும் எரிப்பொருள் வண்டியின் மொத்த எடையை கூட்டிவிடுவதால் ஃபுல் டாங்க் நிரப்புவதை தவிர்க்கவேண்டும்.
5.தரமான எரிப்பொருள்: சில பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்படம் செய்கிறார்கள். எனவே உங்கள் சுற்றுப்பகுதியில் உங்களுக்கு நன்கு பரிட்சயமான பங்குகளில் மட்டுமே எரிப்பொருளை நிரப்புங்கள்.
6.ஏசி யை உபயோகிக்கும் இடங்கள்: நகரத்தில் டிராஃபிக்கில் செல்லும்போது முடிந்தவரை ஏசியின் பயன்பாட்டை குறையுங்கள். இதுவே நெடுஞ்சாலைகளில் கண்டிப்பாக ஏசி உபயோகிக்கவேண்டும். ஏனென்றால், திறந்திருக்கும் ஜன்னல்களால் வேகமாக வரும் காற்று தடைப்படும். எனவே அவற்றை தாண்டி செல்ல அதிக சக்தியை உபயோகிக்கவேண்டும்.

7.மிதமான வேகத்தில் ஒட்டுங்கள்: அதிக வேகம் மைலேஜ் ஐ மட்டுமல்ல. நமது பார்வையின் தூரத்தையும் குறைக்கும்.
8.'இனிப்பான வேகத்தை' கண்டுப்பிடியுங்கள்: ஒவ்வொரு வண்டியும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்கும்போது அதிக மைலேஜ் தரும். அந்த வேகத்தை 'இனிப்பான வேகம்' என்பார்கள். உங்களது வண்டியின் இனிப்பான வேகத்தை கண்டுப்பிடித்து அந்த வேகத்தை கடைப்பிடித்தால் பெருமளவு எரிப்பொருளை சேமிக்கலாம்.
9.பாதுகாப்பான தூரத்தில் பயணியுங்கள்: முன்செல்லும் வாகனத்திற்கும் உங்களது வாகனத்திற்கும் இடைவெளி விட்டு பயணிக்கவும். இதனால் தேவையில்லாமல் அதிகமாக பிரேக் ஐ பயன்படுத்த வேண்டாம்.
10.சரியான கியரில் செல்லுங்கள்: உங்களின் வேகத்திற்கு ஏற்றார்போல் கியரை மாற்றவும். அனைத்து கார்களிலும் பொதுவாக மேனுவலில் குறிப்பிட்டிருப்பார்கள். அவற்றை கடைப்பிடித்தால் எரிப்பொருள் விரயம் கணிசமாக குறையும்.
11.பயணத்தை திட்டமிடுங்கள்: காரை எடுப்பதற்கு முன்பே உங்கள் வழித்தடத்தை திட்டமிடுங்கள். முடிந்தவரையில் பைபாஸ் அல்லது நெடுஞ்சாலையில் செல்ல முயலுங்கள். கிலோமீட்டர் அதிகமானாலும் எரிப்பொருள் விரயம் பெருமளவில் குறையும்.

12.அட்டவணை தயார்செய்யுங்கள்: நீங்கள் நிரப்பும் எரிப்பொருளையும்
செல்லும் தூரத்தையும் கொண்டு ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள். எரிப்பொருள் நிரப்பும் ஒவ்வொரு முறையும் தவறாமல் அதில் எழுதிவிடுங்கள். இதனால் உங்களது கார் எவ்வுளவு மைலேஜ் தருகிறது என்று தெரிந்துவிடும்.
இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால் உங்களது மைலேஜ் கண்டிப்பாக உயரும்.
முதலில் மைலேஜ் என்றால் என்ன?? ஒரு லிட்டர் எரிப்பொருளுக்கு (டீசல்/பெட்ரோல்) எத்தனை கிலோ மீட்டர்கள் செல்லமுடியும் என்பதை கூறுவதே மைலேஜ். அராய் (ARAI) சான்றிதழ் எப்படி தரப்படுகிறது என்று சொல்கிறேன். ஒரு வாகனத்தை குறிப்பிட்ட சில ஆராய்சிகள் மூலம் (லேப்களில் மட்டுமே) ஆராய்ந்து அவற்றின் மைலேஜ்'ஐ கணித்து சொல்வதுதான் அராய் நிறுவனத்தின் வேலை.
நமது தினசரி வாழ்க்கை முறையில் அராய் சான்றிதழின்ப்படி மைலேஜ் கிடைக்காதற்கு காரணங்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இந்த பதிவில் சொல்கிறேன். நானும் இந்த விஷயங்களை பின்பற்றியப்போது ஒரே மாதத்தில் என்னுடைய மைலேஜ் உயர்வதை கண்டேன்.
1. சரியான காற்றழுத்தம்: நான்கு டயர்களிலும் மேனுவலில் குறிப்பிட்ட அளவு காற்றழுத்தம் இருப்பதை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கான பிரத்யேக கருவிகள் சந்தையில் கிடைக்கிறது இல்லையென்றால் பெட்ரோல் பங்கிலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
1. சரியான காற்றழுத்தம்: நான்கு டயர்களிலும் மேனுவலில் குறிப்பிட்ட அளவு காற்றழுத்தம் இருப்பதை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கான பிரத்யேக கருவிகள் சந்தையில் கிடைக்கிறது இல்லையென்றால் பெட்ரோல் பங்கிலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
2. ஏர் மற்றும் ஆயில் ஃபில்டர்கள்: அழுக்கான ஃபில்டர்கள் மைலேஜ் ஐ கடுமையாக குறைக்கும். அதனால் மேனுவலில் குறிப்பிட்ட காலக்கெடுவில் அவற்றை மாற்றவேண்டும்.
3.எடையை குறையுங்கள்: இடம் இருக்கிறதே என்று காரில், தேவையில்லாத பொருட்களை ஏற்றாதீர்கள்.
4.எரிப்பொருளை குறைவாக நிரப்புங்கள்: எரிப்பொருளை பாதி டாங்க் அல்லது கால் டாங்க் நிரப்பியிருந்தால் போதும். நீங்கள் நிரப்பும் எரிப்பொருள் வண்டியின் மொத்த எடையை கூட்டிவிடுவதால் ஃபுல் டாங்க் நிரப்புவதை தவிர்க்கவேண்டும்.
5.தரமான எரிப்பொருள்: சில பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்படம் செய்கிறார்கள். எனவே உங்கள் சுற்றுப்பகுதியில் உங்களுக்கு நன்கு பரிட்சயமான பங்குகளில் மட்டுமே எரிப்பொருளை நிரப்புங்கள்.
6.ஏசி யை உபயோகிக்கும் இடங்கள்: நகரத்தில் டிராஃபிக்கில் செல்லும்போது முடிந்தவரை ஏசியின் பயன்பாட்டை குறையுங்கள். இதுவே நெடுஞ்சாலைகளில் கண்டிப்பாக ஏசி உபயோகிக்கவேண்டும். ஏனென்றால், திறந்திருக்கும் ஜன்னல்களால் வேகமாக வரும் காற்று தடைப்படும். எனவே அவற்றை தாண்டி செல்ல அதிக சக்தியை உபயோகிக்கவேண்டும்.
7.மிதமான வேகத்தில் ஒட்டுங்கள்: அதிக வேகம் மைலேஜ் ஐ மட்டுமல்ல. நமது பார்வையின் தூரத்தையும் குறைக்கும்.
8.'இனிப்பான வேகத்தை' கண்டுப்பிடியுங்கள்: ஒவ்வொரு வண்டியும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்கும்போது அதிக மைலேஜ் தரும். அந்த வேகத்தை 'இனிப்பான வேகம்' என்பார்கள். உங்களது வண்டியின் இனிப்பான வேகத்தை கண்டுப்பிடித்து அந்த வேகத்தை கடைப்பிடித்தால் பெருமளவு எரிப்பொருளை சேமிக்கலாம்.
9.பாதுகாப்பான தூரத்தில் பயணியுங்கள்: முன்செல்லும் வாகனத்திற்கும் உங்களது வாகனத்திற்கும் இடைவெளி விட்டு பயணிக்கவும். இதனால் தேவையில்லாமல் அதிகமாக பிரேக் ஐ பயன்படுத்த வேண்டாம்.
10.சரியான கியரில் செல்லுங்கள்: உங்களின் வேகத்திற்கு ஏற்றார்போல் கியரை மாற்றவும். அனைத்து கார்களிலும் பொதுவாக மேனுவலில் குறிப்பிட்டிருப்பார்கள். அவற்றை கடைப்பிடித்தால் எரிப்பொருள் விரயம் கணிசமாக குறையும்.
11.பயணத்தை திட்டமிடுங்கள்: காரை எடுப்பதற்கு முன்பே உங்கள் வழித்தடத்தை திட்டமிடுங்கள். முடிந்தவரையில் பைபாஸ் அல்லது நெடுஞ்சாலையில் செல்ல முயலுங்கள். கிலோமீட்டர் அதிகமானாலும் எரிப்பொருள் விரயம் பெருமளவில் குறையும்.
12.அட்டவணை தயார்செய்யுங்கள்: நீங்கள் நிரப்பும் எரிப்பொருளையும்
செல்லும் தூரத்தையும் கொண்டு ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள். எரிப்பொருள் நிரப்பும் ஒவ்வொரு முறையும் தவறாமல் அதில் எழுதிவிடுங்கள். இதனால் உங்களது கார் எவ்வுளவு மைலேஜ் தருகிறது என்று தெரிந்துவிடும்.
இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால் உங்களது மைலேஜ் கண்டிப்பாக உயரும்.
Tuesday, September 16
Posted by Sibhi Kumar SenthilKumar
புரியாத புதிர்கள்..
இந்த காலத்தில் கார் இல்லாத வீடே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. முன்பெல்லாம் பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள் வசமிருந்த கார்கள் தற்போது சாமானியர்களுக்கு கூட எட்டும் வண்ணமே உள்ளது.
கார் வாங்க முடிவெடுத்துவிட்டால் போதும்.. குடும்பத்தலைவருக்கு உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாது நமக்கு எப்பொழுதோ லிஃப்ட் கொடுத்தவர்கள் என அனைத்து மட்டத்திலிருந்தும் ஆலோசனைகள் குவிந்துவிடும். அதுவரை நம்மிடம் பேசாத நண்பன் கூட அறிவுரைகளை அள்ளி தெளிப்பான். அந்த ஆலோசனைகளை கேட்க கேட்க நமக்கு ஒருப்பக்கம் உற்சாகமும் ஒரு பக்கமும் பயமும் வந்து சேர்ந்துவிடும்.
சமீபத்தில், தங்கள் கனவு வாகனத்தை பல லட்சங்கள் கொடுத்து வாங்கி விட்ட பிறகு அது தரும் தொல்லைகள் தாங்காமல் அதனை பாதி விலைக்கு விற்கும் பல மனிதர்களை சந்தித்தேன். அவர்கள் செய்த முக்கியமான தவறு மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை மட்டும் கருத்தில் கொண்டு கார் வாங்கியது தான்.
நெருங்கிய நண்பனுக்கு வாய்த்த தொல்லை தராத காரை நாமும் வாங்கினால் பின்பு பிரச்னை வராது என்று நினைத்தால் அது மிகவும் தவறு. ஏனென்றால் அவருடைய தேவைகள் வேறு. உங்களின் தேவைகள் வேறு. எனவே கார் வாங்கவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆராயுங்கள். இணையதள தேடலோடு நின்று விடாமல் ஒன்றுக்கு மேற்பட்ட ஷோரூம்களை பார்வையிட மறந்துவிடாதீர்கள்.
ஷோரூமுக்கு வந்தாயிற்று. அங்கே இருக்கும் விற்பனை அதிகாரி அங்கே நிற்கும் காரை உங்களது கனவு கார் என்று விவரிப்பார். எல்லா ஷோரூம்களிலும் அவர்களது காரை நன்றாக பாலிஷ் போட்டு அலங்கார விளக்குகள் வைத்து மிகவும் அழகாக காட்டுவார்கள். அதை பார்த்து உண்மையாக மயங்கினாலும் அவர்களது முன் காட்டிக்கொள்ள வேண்டாம். முக்கியமாக 'எனக்கு எதுவும் தெரியாது' என்பது போல நிற்கவேண்டாம்.
காரை உங்களிடம் காட்டியவுடன் டிரைவர் சீட்டில் அமர்ந்து உங்களுக்கு வசதியாக இருக்கிறதா என்று பார்த்துகொள்ளுங்கள். அந்த காரை பற்றி நீங்கள் முன்பே இணையதளத்தில் பார்த்த குறைகளை விற்பனை அதிகாரியிடம் கேட்க தவறாதீர்கள். இந்த சமயத்தில் தான் பல நபர்கள் ஏமாற்ற படுகிறார்கள். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு புரியாத சொற்களை கொண்டு விளக்குவார். நன்றாக நினைவில் கொள்ளுங்கள், அந்த சொற்கள்தான் உங்களின் மகிழ்ச்சியை நிர்ணயிக்க போகிறது.
அவற்றில் சிலவற்றை உங்களுக்கு சொல்கிறேன்...
AIRBAG::
இதனை பற்றி நான் முன்பே ஒரு பதிவில் விளக்கமாக எழுதியுள்ளேன். பார்க்க-- http://sibhikumar.blogspot.in/2011/02/blog-post_21.html
என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள். வாழ்க்கை நிலையற்றது. பாதுகாப்பாக இருக்கவேண்டியது நம் கடமை. எனவே நீங்கள் வாங்கும் காரில் கட்டாயமாக காற்றுப்பைகள் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்.
ABS (Anti Locking Braking System)::
அதி வேகத்தில் கார் செல்லும்போது பிரேக்கை பிடித்தால் டயர் லாக் ஆகிவிடும். இதுவே Toppling (அதாவது அந்தர் பல்டி) ஆவதற்கு மூல காரணம். ABS என்னும் இந்த தொழில்நுட்பம் இதனை கட்டுபடுத்துகிறது. அதாவது டயர் லாக் ஆகாமல் இந்த தொழில்நுட்பம் பார்த்துக்கொள்கிறது.
EBD (Electronic Brake Force Distribution)::
இதுவும் ABS னுடைய ஒரு அங்கம். நாம் கொடுக்கும் பிரேக்கை வண்டியின் எடையை பொறுத்து சமமாக முன் வீலுக்கும் பின் வீலுக்கும் பங்களிப்பது தான் இந்த தொழில்நுட்பத்தின் வேலை.
2-DIN Music system::
இதை பற்றி தெரிந்தால் நீங்களே வாய்விட்டு சிரிப்பீர்கள். ஆடியோ சிஸ்டத்தின் அளவை குறிப்பிடும் சொற்களே 1-DIN , 2-DIN ஆகும். இதனை மிகவும் பெரிய வசதியாக விற்பனை அதிகாரி விவரிப்பார்.
Keyless Entry::
சோம்பேறித்தனத்தின் எல்லை தான் இது. சாவியை பாக்கெட்டில் வைத்திருந்தால் போதும். நாம் காரை நெருங்கும்போது தானாகவே பூட்டு திறந்து கொள்ளும். உள்ளே சென்ற பிறகு கூட சாவியை போட தேவையில்லை. வண்டிக்குள் சாவி இருந்தால் போதும். Start/Stop பட்டனை தட்டினால் தானாகவே ஸ்டார்ட் ஆகிவிடும்.
Immobilizer::
காரின் உண்மையான சாவியில் (டூப்ளிகேட்டையும் சேர்த்து) ரகசிய எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த எண்கள் காரின் ரகசிய எண்களோடு பொருந்தினால் மட்டுமே ECU (Engine Control Unit) பணிசெய்யும். அச்சு அசலாக டூப்ளிகேட் சாவி செய்தால் கூட கதவை மட்டுமே திறக்க இயலும். இது ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு அம்சம். ஜெர்மனியில் 1998 ஆம் வருடமே இது அறிமுகபடுதினாலும் இந்தியாவிற்கு வந்தது சமீபத்திலே.
Cruise Control::
ஹைவேயில் செல்லும்போது ஆக்சிலேட்டரை மிதித்து கொண்டேயிருப்பது வெறுப்பாக இருக்கும். க்ருஸ் கன்ட்ரோல் வசதி இருந்தால் நாம் சொல்லும் வேகத்தில் ஆக்சிலேட்டரை லாக் செய்ய முடியும். இதனை ஆஃப் செய்ய கிளட்ச் 'ஐ பிடித்தால் போதும்.
இன்னும் நிறைய இருக்கிறதென்றாலும் இவையே முக்கியமானது. எனவே 'சூதானமா இருங்க மக்களே..!!!'

Wednesday, December 4
Posted by Sibhi Kumar SenthilKumar
அமைச்சரின் இறப்பிற்கு காரணம் யார்?
வாசகர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிப்பெற்று, 'சுற்றுசூழல் அமைச்சராக' மே 16 'ஆம் தேதி பதவியேற்று, மே 23 'ஆம் தேதி உயிரிழந்த மரியம் பிச்சை அவர்களை 'பாவம்' என்று சொல்வதா, 'கொடுத்து வைக்காதவர்' என்று சொல்வதா?

மரியம் பிச்சையின் உயிரிழப்புக்கு பின் அதனை தொடர்ந்து நிறைய சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து சுமார் 40 கி.மீ. தள்ளி நடந்திருக்கும் இவ்விபத்திற்கு முன், அமைச்சரின் வாகனத்திற்கு பாதுகாப்பாக ஒரு எஸ்கார்டு வண்டியே அனுப்பப்பட்டுள்ளது.
இவ்விபத்தை வேறு விதமாக யோசிக்கும் போது விதி விளையாடிருப்பது நன்றாக தெரியும். திருச்சியில் விழாவை முடித்துவிட்டு வழக்கமான தனது 'ஸ்கார்பியோ' காரில்தான் சென்னைக்கு பயணத்தை தொடர்ந்தார். நடு வழியில் 'இனோவா' காருக்கு மாறிவிட்டு 'ஸ்கார்பியோ'வை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். அடுத்த பத்தாவது நிமிடம்... மணியாகிவிட்டது என்று வேகமாக சென்றுகொண்டிருந்த 'இனோவா' முன்னே சென்றுக்கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் இடித்து விபத்துக்குள்ளானது.
சற்றே விரிவாக 'இனோவா'வின் டிரைவர் ஆனந்த் சொல்லும்போது, "மணியாகிவிட்டது என்று வேகமாக செல்லும்போது முன்னே சென்று கொண்டிருந்த 'கன்டெய்னரை' முந்தும் விதமாக ஹாரனை அடித்து கொண்டே சாலையின் வலதுபுறத்தில் அதை முந்த முயன்றேன். திடீரென்று அந்த கன்டெய்னரும் வலதுபுறமாக திரும்பியதால் அமைச்சர் உட்கார்ந்திருந்த, அதாவது காரின் இடதுபுறத்தில் இடித்தது" என்கிறார்.
இந்த விபத்தை பார்த்த சாட்சி, இடித்தது 'டிப்பர்' லாரி என்று சொன்னார். எனவே சி.பி.ஐ. டோல்கேட்டுகளில் இரண்டு வகையாகவும் விசாரித்து வந்தனர். இவ்விரண்டு வகை லாரிகள் அனைத்தையும் விசாரித்த பின் அனைத்து லாரிகளையும் விசாரிக்க துவங்கினர்.
இந்நிலையில் இடித்த லாரியை மே 31 'ஆம் தேதி மேற்கு வங்காளத்திலுள்ள கடக்பூர் என்கிற இடத்தில் சுற்றி வளைத்தனர். ஆனால் இதில் தான் நிஜ குழப்பமே உள்ளது. AP 16 TB 9744 என்ற ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரை கொண்டிருந்த அந்த லாரி 'கன்டெய்னரோ', 'டிப்பரோ' கிடையாது. அது 'டாரஸ்' வகையை சேர்ந்தது!
| 'டாரஸ்' வகை லாரி |
| பிடிபட்ட லாரி! |
இந்த குழப்பங்களை தவிர்த்து, இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்த இரண்டு பேரை பற்றி உங்களுக்கு சொல்கிறேன்...
முதல் மற்றும் முக்கிய காரணம் அமைச்சர் மரியம் பிச்சைதான்! அட.. சத்தியமா அவர்தாங்க. ஏன்னா, சாதாரண குடிமகன்களே இன்று, 'காற்றுப்பைகள்' இல்லாத வாகனங்களை பயன்படுத்துவதில்லை. மரியம் பிச்சை இவ்வகை வண்டியை பயன்படுத்தியிருந்தால், இந்நேரம் அமைச்சரவையில் உட்கார்ந்துகொண்டிருப்பார்." 'காற்றுப்பை' என்றால் என்ன?" என்பவர்களுக்கு எனது முந்தைய கட்டுரையை பாருங்கள்_ காற்றிருக்கும்போதே தூற்றிக்கொள்!
அடுத்த காரணம் வேகம். சற்று பொறுமையாக போயிருந்தால், மரியம் பிச்சை படுகாயங்களோடு தப்பியிருப்பார். அவர்கள் சென்ற வேகத்தை சொல்லவேண்டுமானால் கீழுள்ள படத்தை பாருங்கள். இடித்த பின் பிரேக் அடித்த உடன் வேகமாக வந்த கார் நிற்கும்போது ஏற்பட்ட டயரின் தடங்களை பாருங்கள்.

இதன் மூலம் நான் கூறிக்கொள்வது என்னவென்றால், மிதமான வேகமோடும், பாதுகாப்பான வண்டியையோடும் நாம் பயணிக்க வேண்டும் என்பதே!
வாழ்க்கை நிலையற்றது என்பதற்கு உதாரணமாக கீழுள்ள படங்கள் இருக்கின்றன.
![]() |
| ஒரு மணிநேரத்திற்கு முன்னால்... |
![]() |
| ...பின்னர் |
Friday, June 3
Posted by Sibhi Kumar SenthilKumar