Showing posts with label சூப்பரான கார். Show all posts
என்னுடைய சந்தேகம் தீர்ந்தது!
15/11/2010 அன்று நான் ஒரு போஸ்ட் போட்டேன். ஞாபகமிருக்கிறதா? (இல்லனா தொட்டு பார்). ஒரு மிகச் சிறந்த கார், அலுவலகத்திற்கு தினசரி பயன்படுத்த சொல்லியிருந்தேன். அதைப் பற்றி எனக்கு நிறைய பேர் மின்னஞ்சல் (sibhikumar@tamil.com) அனுப்பினார்கள்.
அவர்களின் கேள்வி; " 'ரெவா-ஐ' எங்கே கிடைக்கும்?"
அவர்கள் மட்டுமல்ல... என்னுடைய சந்தேகமும் " 'ரெவா-ஐ' எங்கே கிடைக்கும்?" என்பதுதான்!!!
ஆனால் இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட்டார்கள் மஹிந்திரா உற்பத்தியாளர்கள். புனேவில் உள்ள நான்கு ஷோரூம்களில் 'ரெவா-ஐ' விற்கத்தொடங்கிவிட்டத. இன்னும் கொஞ்ச நாட்களில் இந்தியா முழுவதும் மஹிந்திரா ஷோரூம்களில் 'ரெவா-ஐ' விற்பனை துவங்கிவிடும்.
புதிதாக ஒரு கார் வந்தாலே முதலில் வாங்க நிறைய பேர் தயங்குவார்கள். புதிய தொழில்நுட்பத்தோடு மின்சாரத்தில் இயங்கும் இவ்வகை காரை வாங்க நிறைய பேர் தயங்குவார்கள். இதற்காகவே மஹிந்திரா ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
அதாவது முதலில் நாம் ஒரு இலட்சத்தை வட்டியில்லா வைப்பு தொகையாக கட்டிவிடவேண்டும் (காரின் விலையில் சேர்ந்தது). பிறகு ரூ.7999/மாதம் என்கிற விதத்தில் மூன்று வருடம் கட்டலாம். மூன்று வருடம் கழித்து இந்த கார் பிடிக்கவில்லை என்றால், காரை திருப்பி கொடுத்துவிட்டு ஒரு இலட்சத்தை தாரளமாக எடுத்து கொள்ளலாம்!
சமீபத்திய சாதனை;
மூன்று இலட்சம் மாருதி ஆல்டோ இந்தியா முழுவதும் 2010'ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனை ஆல்டோவை 'உலகத்தில் மிகச் சிறப்பாக விற்பனையான கார்' என்கிற கௌரவத்தை அளித்துள்ளது.
மாருதி ஆல்டோவை இந்தியர்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்த கார் 2000'ம் வருடத்தில் வெளிவந்தது. வெளிவந்த நாளிலிருந்து இதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. மாருதி 800' க்கு ஆல்டோ ஒரு மாற்று என்பது அனைவரும் ஏற்றுகொண்ட ஒரு உண்மை.
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Sunday, January 30
Posted by Sibhi Kumar SenthilKumar
பழையவை-புதியவை
-உங்களுக்கு எழுந்த இதே சந்தேகம்தான் இதைப் பார்க்கும்போது எனக்கும் எழுந்தது.
இது 'ஃபியட்' (Fiat) கம்பெனியுடைய கார். இதைப் பார்க்கும்போது பலருக்கும் பழையக் காலத்து நினைவுகள் ஊசலாடும்.
கேள்வி; இந்த காலத்தில் இப்படி ஒரு கார் இருக்கிறதா?
பதில் ; இருக்கிறது!!!
அதுதான் 'ஃபியட் 500'
பலரும், "இந்த கார் யூத்ஃபுல்லா இல்ல" என்பார்கள். ஆனால் இந்த காரை பெரிதும் விரும்புவர்கள் இளைஞர்கள் தான்!!! 'சாட்டர்டே நைட் பார்டிக்கு' செல்பவர்களே... இதை கண்டிப்பாக வாங்குங்கள். பல கார்களின் முன்னிலையில் உங்கள் கார் 'பளிச்சென' தெரியவேண்டுமா? வாங்குங்கோ...
இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். நிறைய பளிச் கலர்கள் இருக்கின்றன. இந்த காரைப் பற்றி விரிவாக எழுத நினைத்தேன். ஆனால், "ஒரு சின்ன இடைஞ்சலை பொறுத்துக்கொண்டு இந்த காரை வாங்குவேன்" என்கிறவர்கள் மட்டும் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். முழு விவரத்தையும் அனுப்பி வைக்கிறேன்.
என்னுடைய மின்னஞ்சல் முகவரி- mailto:mynameissibhi@yahoo.com
ஸ்... இடைஞ்சலை சொல்ல மறந்துட்டனே... கார மாதிரி விலையும் சிறுசில்லை... சும்மா ஒரு பதினாறு லட்சத்தை கொடுத்துட்டு வண்டிய உங்க வீட்டுக்கு தாராளமா எடுத்துட்டு போங்க.
இன்றைய படம்;
| இந்த கார வாங்க உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் |
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Toyota Etios- ஒரு கண்ணோட்டம்
இப்போது வெளியிட்டிருக்கும் 'எடியோஸ்' Sedan வகையைச் சார்ந்தது. விரைவில் Etios Hatchback ஒன்றை வெளியிடுவோம் என்று Toyota நிறுவனத்தினர் சொல்கிறார்கள். 'பாரிஸ் மோட்டார் ஷோ'வில் நான் பார்த்த Etios Hatch திருப்தி அளிக்கும் விதமாகவே உள்ளது. Hatchback வேண்டும் என்போர் சற்று பொறுத்திருக்கவும்.
இதற்கு முன்னர் மகேந்திரா-ரெனால்ட் 'லோகன்' விலை குறைவாகவும், வசதியாகவும் இருந்தது. இப்போது 'எடியோஸ்' அதன் இடத்தை பிடித்துள்ளது.
'எடியோஸ்'ன் முன்பக்கம் சற்று 'இன்னோவா' போல் இருந்தாலும் மிகவும் அழகாகவே உள்ளது. இதன் Styling இந்த கார் கூட்டத்தில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும். இதன் முக்கிய அம்சமே இதன் உட்புற இட வசதி (Interior space) தான். ஐந்து பேர்கள் வசதியாக செல்லலாம். பின்பக்க Boot (டிக்கி!!) பெரிதாக உள்ளதால் நிறைய லக்கேஜ் எடுத்து செல்லலாம். டிராவல்ஸ் நடத்தும் அன்பர்கள் இதை வாங்கினால் மிகவும் பயனடைவார்கள்.
இதனுடைய Glove Box (Co-Driver'ன் எதிரில் உள்ளது) மிக பெரியதாகவும் 'கூலர்' (Cooler) வசதி உடையது. AC, DVD/Audio Player'களை அளிக்கிறார்கள்.
முடிவாக இதன் விலை (சென்னை- Ex Showroom விலை)
Toyota Etios J - ரூ.4,83,868
Toyota Etios G -ரூ.5,33,294
Toyota Etios G-OPT -ரூ.5,83,794
Toyota Etios V -ரூ.6,28,872
Toyota Etios VX -ரூ.6,74,372
இன்றைய படம்;
| 2020'ல கார் இப்படிதான் இருக்கும் சார்! |
Saturday, December 4
Posted by Sibhi Kumar SenthilKumar
வருக.. வருக.. Toyoto Etios
டிசம்பர் -1
கார் ஆர்வலர்கள் ஆவலோடு (நானும்தான்...) எதிர்ப்பார்துக்கொண்டிருந்த 'எடியோஸ்' இன்று வெளியிடுகிறார்கள். இதைப் புரிந்துக்கொண்ட Toyota நிறுவனத்தினர், "டிசம்பர் 1 புக்கிங் ஆரம்பித்து டிசம்பர் 2 'ம் தேதியிலிருந்து டெலிவரி செய்ய துவங்கிவிடுவோம்" என்று அறிவித்துள்ளனர்.
இதன் சிறப்பு, 'எடியோஸ்' இந்தியாவிற்காக செய்யப்பட்ட கார். இதன் லோகோவை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். ETIOS என்பதில் I'க்கு பதிலாக குங்குமத் திலகத்தை வைத்து டிசைன் செய்துள்ளனர்.
இன்னொரு சிறப்பு, இதன் Brand Ambassador வேறு யாருமல்ல. நமது 'ஆஸ்கார் தமிழன்' ஏ.ஆர்.ரஹ்மான்.
இதன் விலை அனைவரும் வாங்கும்படியே உள்ளது. (4 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை என்று கேள்விப்பட்டேன். இருப்பினும் இதன் உறுதியான விலையை அறிந்தவுடன் சொல்கிறேன்)
ஆனால் இந்த காரின் உட்புறம், வெளிப்புறம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது இதன் விலை மிகவும் குறைவு என்பது என் கருத்து. இதனுடைய தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளை விலாவாரியாக பிறகு பார்ப்போம்.
இன்றைய படம்;
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
கார் ஆர்வலர்கள் ஆவலோடு (நானும்தான்...) எதிர்ப்பார்துக்கொண்டிருந்த 'எடியோஸ்' இன்று வெளியிடுகிறார்கள். இதைப் புரிந்துக்கொண்ட Toyota நிறுவனத்தினர், "டிசம்பர் 1 புக்கிங் ஆரம்பித்து டிசம்பர் 2 'ம் தேதியிலிருந்து டெலிவரி செய்ய துவங்கிவிடுவோம்" என்று அறிவித்துள்ளனர்.
இதன் சிறப்பு, 'எடியோஸ்' இந்தியாவிற்காக செய்யப்பட்ட கார். இதன் லோகோவை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். ETIOS என்பதில் I'க்கு பதிலாக குங்குமத் திலகத்தை வைத்து டிசைன் செய்துள்ளனர்.
இன்னொரு சிறப்பு, இதன் Brand Ambassador வேறு யாருமல்ல. நமது 'ஆஸ்கார் தமிழன்' ஏ.ஆர்.ரஹ்மான்.
இதன் விலை அனைவரும் வாங்கும்படியே உள்ளது. (4 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை என்று கேள்விப்பட்டேன். இருப்பினும் இதன் உறுதியான விலையை அறிந்தவுடன் சொல்கிறேன்)
ஆனால் இந்த காரின் உட்புறம், வெளிப்புறம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது இதன் விலை மிகவும் குறைவு என்பது என் கருத்து. இதனுடைய தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளை விலாவாரியாக பிறகு பார்ப்போம்.
இன்றைய படம்;
| "என்னடா இது.. நசுங்கிப்போன கார்ல போறாங்களே" ன்னு பாக்குறீங்க. இதுக்கு பெயர் Flat Car |
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Wednesday, December 1
Posted by Sibhi Kumar SenthilKumar
REVAi- ஓர் அறிமுகம்
இன்று அனைவருக்கும் போக்குவரத்து வாகனங்கள் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு விஷயமாக இருக்கிறது. அலுவலகத்திற்கு செல்ல, வார விடுமுறையை கொண்டாட என்று பலவகையான தேவைகள் இருக்கிறது.
நீங்கள் நகரத்தில் உங்கள் அலுவலகத்திற்கு டிராஃபிக் ஜாம்' ல் தவழ்பவரா? உங்களுக்கான பதிவிது.
நம் அனைவருக்கும் E-Bike பரிட்சியமானது. இ-கார்களை கேள்விப்பட்டிருக்கிறோம். அவை பெரும்பாலும் வெளிநாட்டில் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிலும் ஒரு கார் இருக்கிறது. அதுதான் Maini REVAi.
இது ஒரு இரண்டு பேர் அமர்ந்து செல்லும் கார். இதனுடைய battery, 48V, 200A lead acid வகையை சார்ந்தது. எட்டு மணிநேரம் சார்ஜ் போட்டால் முழு பாட்டரியும் சார்ஜ் ஆகிவிடும். இதனுடைய டாப் ஸ்பீட் 80kmph.
இதனுடைய இன்னொரு சிறப்பு- பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. அதுமட்டுமில்லாமல் லக்கேஜ் 'க்கும் நிறைய இடம் இருக்கிறது. தேவையென்றால் ஒரு சீட்டை மடக்கி கொள்ளலாம். இப்போது சில வசதிகளைப் பார்ப்போம்;
- Gear கிடையாது; Clutch கிடையாது. Fully ஆட்டோமேடிக்.
- Tubeless Tyres
- Leather seats, luxury carpets, floor mat
- AC உண்டு
- ஸ்டீரியோ சிஸ்டம்/ FM சிஸ்டம்
- ஆறு கலர்களில் உண்டு- கருப்பு, வெள்ளை, சிவப்பு, சில்வர், நீலம், மஞ்சள்.
இன்றைய படம்;
![]() |
| பளபளக்கும் இந்த காரினுடைய விலை ரூ.64,40,000. முழுவதும் வைரம் மற்றும் வெள்ளை தங்கத்தால் ஆனது (இஞ்சின் உட்பட!!!) |
Monday, November 15
Posted by Sibhi Kumar SenthilKumar