Archive for December 2010

நானும் இந்த ஆட்டத்துக்கு ரெடி!



ஒரே நாள்ல என் கார்ல ஏறி இன்ப அதிர்ச்சி கொடுத்த ரவி அண்ணே, கீதா அக்கா, தமிழ் Blogs, மிதுன், மணிவண்ணன் யாதவராம்  ஆகிய அனைவருக்கும் என் நன்றி. 
முன்னரே என் கார்ல ஏறி குந்துன நிலாமகள், தாமஸ் ரூபன், உலவு காம், ரிஷபன், பிலாசபி பிரபாகரன் ஆகியோருக்கும் மிக்க நன்றி.
நன்றி படலத்தை முடிச்சாச்சி. அப்படியே நம்ம மேட்டருக்கு வருவோம். 2010'  நல்ல மழை மற்றும் பனியோடு முடியப்போகுது. சரியான நேரத்துல விருது கொடுப்பதைப்பற்றி பேசுவோம்.
'ஆஸ்கார்','கோல்டன் க்ளோப்', 'பாரத ரத்னா', 'ஃபிலிம்பேர்', 'கிராமி', 'கலைமாமணி' போன்ற விருதுகள் நன்கு பரிட்சயம். ஆனால் பலப் பேருக்கு 'கார் ஆஃப் த இயர்' (Car of the Year) விருதுகள் பற்றி தெரியாது.
இந்த விருதை பல நிறுவனங்கள் அளித்தாலும் அனைவராலும் சில நல்ல பேர் மற்றும் மீடியா வசமுள்ள நிறுவனங்களின்  கணிப்பை  தான்  உண்மையான  விருதாக ஏற்கிறார்கள். (Overdrive-CNBC TV 18, Car & Bike Show-NDTV). இதைத் தவிர உலக அளவில் விருது கொடுப்பவர் உண்டு. (http://www.caroftheyear.org/)
கேள்வி;   "அதெல்லாம் சரி, இந்த விருதயெல்லாம் காருக்கு கொடுத்து இன்னா பிரயோஜனம்?"
பதில்;        நம்ம வாங்கருத்துக்கு தானுங்க...
நாம் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் விருது கிடைத்த காருக்கு(!!!) 
>அங்கீகாரம் கிடைக்கும்
>எல்லோரிடமும் போய்ச் சேரும்.
அதுமட்டுமல்ல, சில பேர் கடந்த வருடத்திற்கு கொடுப்பார்கள். சில பேர் புது வருடத்திற்கான விருதாக கொடுப்பார்கள்.
கேள்வி; "சரி, இதெல்லாம் எதுக்கு இவன் சொல்லறான்???"
பதில்;      "நானும் கொடுக்கருத்துக்குதேன்!!!"
ஆமாங்க, சரியா சனவரி 1, மார்கழி 17, முஹர்ரம் 25, சனிக்கிழமை, ஆங்கில வருடப்பிறப்பு (காலண்டர் வந்துரிச்சி!! ) அன்னிக்கி கரிக்டா உங்களுக்கு அலசி... ச்சும்மா அலசி, ஆராஞ்சி விருத கொடுக்கறேங்க! (ரஜினி ஸ்லாங்கு'ல பேசிப் பாருங்க! கி கி கி கி!)
இன்றைய படம்;
விருது கொடுக்க எனக்காக கார் தேட போகுது பாத்தீங்களா! நண்பேன்டா!

 //உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Thursday, December 16
Posted by Sibhi Kumar SenthilKumar

பழையவை-புதியவை

"என்னடா இது பழைய காலத்து எம்.ஜி.ஆர். படங்களில் பார்த்த கார் மாதிரி இருக்கிறதே?"

-உங்களுக்கு எழுந்த இதே சந்தேகம்தான் இதைப் பார்க்கும்போது எனக்கும் எழுந்தது.

இது 'ஃபியட்' (Fiat) கம்பெனியுடைய கார். இதைப் பார்க்கும்போது பலருக்கும் பழையக் காலத்து நினைவுகள் ஊசலாடும்.

கேள்வி; இந்த காலத்தில் இப்படி ஒரு கார் இருக்கிறதா?
பதில்    ; இருக்கிறது!!!

அதுதான் 'ஃபியட் 500'

பலரும், "இந்த கார் யூத்ஃபுல்லா இல்ல" என்பார்கள். ஆனால் இந்த காரை பெரிதும் விரும்புவர்கள் இளைஞர்கள் தான்!!! 'சாட்டர்டே நைட்  பார்டிக்கு' செல்பவர்களே... இதை கண்டிப்பாக வாங்குங்கள். பல கார்களின் முன்னிலையில் உங்கள் கார் 'பளிச்சென' தெரியவேண்டுமா? வாங்குங்கோ...

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். நிறைய பளிச் கலர்கள் இருக்கின்றன. இந்த காரைப் பற்றி விரிவாக எழுத நினைத்தேன். ஆனால், "ஒரு சின்ன இடைஞ்சலை பொறுத்துக்கொண்டு இந்த காரை வாங்குவேன்" என்கிறவர்கள் மட்டும் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். முழு விவரத்தையும் அனுப்பி வைக்கிறேன்.

என்னுடைய மின்னஞ்சல் முகவரி- mailto:mynameissibhi@yahoo.com

ஸ்... இடைஞ்சலை சொல்ல மறந்துட்டனே... கார மாதிரி விலையும் சிறுசில்லை... சும்மா ஒரு பதினாறு லட்சத்தை கொடுத்துட்டு வண்டிய உங்க வீட்டுக்கு தாராளமா எடுத்துட்டு போங்க.

இன்றைய படம்; 
இந்த கார வாங்க உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் 

 //உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Saturday, December 11
Posted by Sibhi Kumar SenthilKumar

லேசா தெரிஞ்சிக்குவோம்...

இன்றைக்கு நாம் எல்லோரும் சில கார்களின் Official website'களை காணப் போகிறோம்.
Mahindra Scorpio
Mahindra Xylo

http://www.mahindraxylo.co.in/

Tata Safari

http://www.safaridicor.com/

Toyota Etios

http://www.toyotaetios.in/

Maruti Swift

http://www.marutiswift.com/


Honda Jazz

http://www.hondacarindia.com/jazz/index.aspx

//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Monday, December 6
Posted by Sibhi Kumar SenthilKumar

Toyota Etios- ஒரு கண்ணோட்டம்

முந்தைய பதிவில் நான் கூறியிருந்தது போல 'எடியோஸ்' ஒரு திருப்தியளிக்கும் கார்.


இப்போது வெளியிட்டிருக்கும் 'எடியோஸ்' Sedan வகையைச் சார்ந்தது. விரைவில் Etios Hatchback ஒன்றை வெளியிடுவோம் என்று Toyota நிறுவனத்தினர் சொல்கிறார்கள். 'பாரிஸ் மோட்டார் ஷோ'வில் நான் பார்த்த Etios Hatch திருப்தி அளிக்கும் விதமாகவே உள்ளது. Hatchback வேண்டும் என்போர் சற்று பொறுத்திருக்கவும்.


இதற்கு முன்னர் மகேந்திரா-ரெனால்ட் 'லோகன்' விலை குறைவாகவும், வசதியாகவும் இருந்தது. இப்போது 'எடியோஸ்' அதன் இடத்தை பிடித்துள்ளது.
'எடியோஸ்'ன் முன்பக்கம் சற்று 'இன்னோவா' போல் இருந்தாலும் மிகவும் அழகாகவே உள்ளது. இதன் Styling இந்த கார் கூட்டத்தில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும். இதன் முக்கிய அம்சமே இதன் உட்புற இட வசதி (Interior space) தான். ஐந்து பேர்கள் வசதியாக செல்லலாம். பின்பக்க Boot (டிக்கி!!) பெரிதாக உள்ளதால் நிறைய லக்கேஜ் எடுத்து செல்லலாம். டிராவல்ஸ் நடத்தும் அன்பர்கள் இதை வாங்கினால் மிகவும் பயனடைவார்கள்.
இதனுடைய Glove Box (Co-Driver'ன் எதிரில் உள்ளது) மிக பெரியதாகவும் 'கூலர்' (Cooler) வசதி உடையது. AC, DVD/Audio Player'களை அளிக்கிறார்கள்.
முடிவாக இதன் விலை (சென்னை- Ex Showroom விலை)
Toyota Etios J            - ரூ.4,83,868  
Toyota Etios G           -ரூ.5,33,294
Toyota Etios G-OPT  -ரூ.5,83,794
Toyota Etios V           -ரூ.6,28,872
Toyota Etios VX         -ரூ.6,74,372  
இன்றைய படம்;
2020'ல கார் இப்படிதான் இருக்கும் சார்!
  
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Saturday, December 4
Posted by Sibhi Kumar SenthilKumar

வருக.. வருக.. Toyoto Etios

டிம்ர் -1

கார் ஆர்வலர்கள் ஆவலோடு (நானும்தான்...) எதிர்ப்பார்துக்கொண்டிருந்த 'எடியோஸ்' இன்று வெளியிடுகிறார்கள். இதைப் புரிந்துக்கொண்ட Toyota நிறுவனத்தினர், "டிசம்பர் 1 புக்கிங் ஆரம்பித்து டிசம்பர் 2 'ம் தேதியிலிருந்து டெலிவரி செய்ய துவங்கிவிடுவோம்" என்று அறிவித்துள்ளனர்.

இதன் சிறப்பு, 'எடியோஸ்' இந்தியாவிற்காக செய்யப்பட்ட கார். இதன் லோகோவை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். ETIOS என்பதில் I'க்கு பதிலாக குங்குமத் திலகத்தை வைத்து டிசைன் செய்துள்ளனர்.

இன்னொரு சிறப்பு, இதன் Brand Ambassador வேறு யாருமல்ல. நமது 'ஆஸ்கார் தமிழன்' ஏ.ஆர்.ரஹ்மான்.

இதன் விலை அனைவரும் வாங்கும்படியே உள்ளது. (4 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை என்று கேள்விப்பட்டேன். இருப்பினும் இதன் உறுதியான விலையை அறிந்தவுடன் சொல்கிறேன்)

ஆனால் இந்த காரின் உட்புறம், வெளிப்புறம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது இதன் விலை மிகவும் குறைவு என்பது என் கருத்து. இதனுடைய தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளை விலாவாரியாக பிறகு பார்ப்போம்.

இன்றைய படம்;

"என்னடா இது.. நசுங்கிப்போன கார்ல போறாங்களே" ன்னு பாக்குறீங்க. இதுக்கு பெயர் Flat Car

//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Wednesday, December 1
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -