வர்தா புயலும் எனது காரும்...

         இப்பொழுது தான் வர்தா புயலிடம் சிக்கி சின்னாபின்னமாகி ஊர் வந்து சேர்ந்தேன். இத்தனை நாட்களும் வெள்ளம் வந்தால் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி நிறைய படித்திருந்த நான் அவற்றை உபயோகப்படுத்தும் நாள் வந்தது. வர்தா புயலில் எனது காரை எப்படி காப்பாற்றினேன் என்பதை வரிசையாகச் சொல்கிறேன்.** இது வீட்டில் நின்றுகொண்டிருக்கும் காரில் வெள்ளம் ஆரம்பிக்கும் முன் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

1. சுற்று வட்டாரத்தில் உள்ள உயரமான இடத்தை தேர்வு செய்யவேண்டும். சாலையில் மற்றும் மரங்கள் அருகிலும் நிறுத்துவதை தவிர்க்கவேண்டும். எங்கள் சுற்று வட்டாரத்திலே உயரமான இடம் எங்கள் அபார்ட்மெண்ட் பார்க்கிங் தான் :)) . எங்கள் அபார்ட்மெண்ட் அடுத்துள்ள வீட்டில் வசிப்பவரிடம் மூன்று கார்கள் உள்ளன. இரண்டை எப்படியோ உயரமான இடத்தில் நிறுத்தி விட்டு ஒரு காரை என்னிடம் அனுமதி பெற்று எங்கள் அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் நிறுத்திக்கொண்டார்.

2. ஜன்னல்கள் கதவுகள் சரியாக மூடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளவேண்டும். பார்க்கிங் பிரேக் ஐ போட்டுவிட்டு இரண்டாவது கியரில் வண்டியை நிறுத்திவிடவேண்டும். (ஆட்டோமேட்டிக் கார் என்றால் கியரை 'P' மோடில் வைக்கவேண்டும்)

3. எக்ஸ்ஹாஸ்ட் பைப் (சைலன்சர்) முனையில் இறுக்கமாக பிளாஸ்டிக் கவரை கொண்டு கட்டிவிடவேண்டும்.

4. காரின் பேட்டரியின் டெர்மினல்களை எடுத்துவிட்டு பேட்டரியை பத்திரமாக வீட்டிற்குள் கொண்டு சென்றுவிடவேண்டும். இதனால் ஒரு வேளை வெள்ளத்தில் கார் மூழ்கினாலும் உள்ளே இருக்கும் எலெக்ரானிக் பாகங்களில் ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பி.கு. பேட்டரியை கழட்டி விட்டதால் சென்ட்ரல் லாக் மற்றும் ரிமோட் வேலை செய்யாது. எனவே ஒவ்வொரு கதவையும் திறந்து மேனுவலாக லாக் செய்யவேண்டும்.

அவ்வளவுதான்.

** வெள்ளம் முடிந்த பின் செய்யவேண்டிய நடவடிக்கைகள்.

1. வெள்ளம் வரும்போது காரில் தண்ணீர் எந்தளவுக்கு ஏறுகிறது என்பதை கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும். கவனிக்க முடியவில்லை என்றால் அக்கம் பக்கம் உள்ளபவர்களை விசாரிப்பது நல்லது. பானெட்டை திறந்து இன்ஜின் ஆயில் டிப் ஸ்டிக் ஐ எடுத்து பார்க்கவேண்டும். வழக்கத்திற்கு மாறாக அளவு அதிகமாக இருந்தால் தண்ணீர் உள்ளே புகுந்துவிட்டது என்று அர்த்தம். கூடவே அனைத்து ஆயில்களின் (பவர்ஸ்டீரிங் ஆயில், பிரேக் ஆயில், கூலண்ட்) அளவையும் பார்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தும் சரியாக இருந்தால் ஓகே.

2. வண்டியை சுற்றி ஏதேனும் வெளிப்புற டேமேஜ் இருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும். என் பக்கத்து வீட்டுக்காரரின் கார் எனது காரின் மீது சாய்ந்து ஒரு டொக்கு விழுந்துவிட்டது. பெரிய டேமேஜ் இல்லையென்றால் பிரச்சனையில்லை.

3. எக்ஸ்ஹாஸ்ட் (சைலன்சர்) பைப்பில் கட்டியிருந்த கவரை கழட்டிவிடவேண்டும். 

4. பேட்டரி டெர்மினல்களை கனெக்ட் செய்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்து பார்க்கவேண்டும். எல்லா உபகரணங்களும் (ஏசி, மியூசிக் பிளேயர், வைப்பர், பவர் விண்டோஸ் போன்றவை) வேலை செய்கிறதா என்பதை செக் செய்துக்கொள்ளவேண்டும். ஒரு நிமிடம் காரை ஐடிலிங்கில் வைக்கவேண்டும்.

கார் தப்பித்தது.

** கார் மூழ்கியிருந்தால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்.

1. காரை எக்காரணத்தை கொண்டும் ஸ்டார்ட்செய்யக்கூடாது.

2. காரை இன்ஷ்யூர் செய்திருந்த நிறுவனத்திற்கு தகவல் அளித்து அவர்களின் வழிமுறைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
பி.கு. தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் மட்டும் எடுத்திருந்தால்  இந்த பாயிண்டை மறந்திடுங்கள். காரை நம் காசிலே சரி செய்துக்கொள்ளவேண்டும்.

3. காரின் சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து காருக்கு ஒரு அப்பாயின்மென்ட் வாங்கவேண்டும்.

4. அவர்கள் குறித்த நேரத்தில் காரை டோ (Tow) செய்துக்கொண்டு போவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

ஆகமொத்தம் இந்த புயலில் ஒரு டொக்குடன் தப்பித்தது என் மேரியோ (Mario). ஃபியட் புன்டோ என்ற பெயரில் தயாரித்த என் காருக்கு நான் வைத்திருக்கும் பெயர் மேரியோ.

Wednesday, December 14
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -