Showing posts with label Etios. Show all posts

Toyota Etios- ஒரு கண்ணோட்டம்

முந்தைய பதிவில் நான் கூறியிருந்தது போல 'எடியோஸ்' ஒரு திருப்தியளிக்கும் கார்.


இப்போது வெளியிட்டிருக்கும் 'எடியோஸ்' Sedan வகையைச் சார்ந்தது. விரைவில் Etios Hatchback ஒன்றை வெளியிடுவோம் என்று Toyota நிறுவனத்தினர் சொல்கிறார்கள். 'பாரிஸ் மோட்டார் ஷோ'வில் நான் பார்த்த Etios Hatch திருப்தி அளிக்கும் விதமாகவே உள்ளது. Hatchback வேண்டும் என்போர் சற்று பொறுத்திருக்கவும்.


இதற்கு முன்னர் மகேந்திரா-ரெனால்ட் 'லோகன்' விலை குறைவாகவும், வசதியாகவும் இருந்தது. இப்போது 'எடியோஸ்' அதன் இடத்தை பிடித்துள்ளது.
'எடியோஸ்'ன் முன்பக்கம் சற்று 'இன்னோவா' போல் இருந்தாலும் மிகவும் அழகாகவே உள்ளது. இதன் Styling இந்த கார் கூட்டத்தில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும். இதன் முக்கிய அம்சமே இதன் உட்புற இட வசதி (Interior space) தான். ஐந்து பேர்கள் வசதியாக செல்லலாம். பின்பக்க Boot (டிக்கி!!) பெரிதாக உள்ளதால் நிறைய லக்கேஜ் எடுத்து செல்லலாம். டிராவல்ஸ் நடத்தும் அன்பர்கள் இதை வாங்கினால் மிகவும் பயனடைவார்கள்.
இதனுடைய Glove Box (Co-Driver'ன் எதிரில் உள்ளது) மிக பெரியதாகவும் 'கூலர்' (Cooler) வசதி உடையது. AC, DVD/Audio Player'களை அளிக்கிறார்கள்.
முடிவாக இதன் விலை (சென்னை- Ex Showroom விலை)
Toyota Etios J            - ரூ.4,83,868  
Toyota Etios G           -ரூ.5,33,294
Toyota Etios G-OPT  -ரூ.5,83,794
Toyota Etios V           -ரூ.6,28,872
Toyota Etios VX         -ரூ.6,74,372  
இன்றைய படம்;
2020'ல கார் இப்படிதான் இருக்கும் சார்!
  
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Saturday, December 4
Posted by Sibhi Kumar SenthilKumar

வருக.. வருக.. Toyoto Etios

டிசம்பர் -1

கார் ஆர்வலர்கள் ஆவலோடு (நானும்தான்...) எதிர்ப்பார்துக்கொண்டிருந்த 'எடியோஸ்' இன்று வெளியிடுகிறார்கள். இதைப் புரிந்துக்கொண்ட Toyota நிறுவனத்தினர், "டிசம்பர் 1 புக்கிங் ஆரம்பித்து டிசம்பர் 2 'ம் தேதியிலிருந்து டெலிவரி செய்ய துவங்கிவிடுவோம்" என்று அறிவித்துள்ளனர்.

இதன் சிறப்பு, 'எடியோஸ்' இந்தியாவிற்காக செய்யப்பட்ட கார். இதன் லோகோவை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். ETIOS என்பதில் I'க்கு பதிலாக குங்குமத் திலகத்தை வைத்து டிசைன் செய்துள்ளனர்.

இன்னொரு சிறப்பு, இதன் Brand Ambassador வேறு யாருமல்ல. நமது 'ஆஸ்கார் தமிழன்' ஏ.ஆர்.ரஹ்மான்.

இதன் விலை அனைவரும் வாங்கும்படியே உள்ளது. (4 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை என்று கேள்விப்பட்டேன். இருப்பினும் இதன் உறுதியான விலையை அறிந்தவுடன் சொல்கிறேன்)

ஆனால் இந்த காரின் உட்புறம், வெளிப்புறம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது இதன் விலை மிகவும் குறைவு என்பது என் கருத்து. இதனுடைய தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளை விலாவாரியாக பிறகு பார்ப்போம்.

இன்றைய படம்;

"என்னடா இது.. நசுங்கிப்போன கார்ல போறாங்களே" ன்னு பாக்குறீங்க. இதுக்கு பெயர் Flat Car

//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Wednesday, December 1
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -