Showing posts with label விருதுகள். Show all posts
எழுத்தாளர் சுஜாதா விருதுகள் 2011

தமிழின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 'ம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து ஆறு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் ரூ.10 ஆயிரம் பரிசும் பாராட்டு பத்திரமும் கொண்டது. பரிசுக்குரிய தேர்வுகள் போக ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து விண்ணப்பங்கள் பாராட்டிற்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
- சுஜாதா சிறுகதை விருது -சிறந்த சிறுகதை தொகுப்பிற்கு
- சுஜாதா நாவல் விருது -சிறந்த நாவலுக்கு
- சுஜாதா கவிதை விருது -சிறந்த கவிதை தொகுப்பிற்கு
- சுஜாதா உரைநடை விருது -சிறந்த கட்டுரை தொகுப்பிற்கு
- சுஜாதா இணைய விருது -சிறந்த வலைப்பூ(blog) , இணைய இதழ்
- சுஜாதா சிற்றிதழ் விருது -சிறந்த சிறுபத்திரிக்கைக்கு
>> முதல் நான்கு பிரிவுகளில் 2009 டிசம்பர் முதல் 2010 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த நூல்களில் 3 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். நூலாசிரியரைப்பற்றி தகவல்கள் மற்றும் முகவரியை தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும்.
>> ஐந்தாவது பிரிவில் தமிழில் சிறந்த வலைப்பூ (அல்லது) இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த வலைப்பூவை (அல்லது) இணையதளத்தை நடத்துபவர்கள் தம்மையும் தமது பதிவுகளைப் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த ஆக்கங்களின் பத்து சுட்டிகளையும்(link) மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். முகவரி- sujathaaawards@gmail.com
>> ஆறாவது பிரிவில் தமிழில் 2010 'ம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களின் பிரதிகளை அனுப்பவேண்டும். அந்த ஆண்டு குறைந்தபட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப்பட்டிருக்கவேண்டும். அந்த ஆண்டு வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் 3 பிரதிகள் வீதம் அனுப்பவேண்டும்.
>> விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களால் தேர்வு செய்யப்படும்.
>> தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி- மார்ச் 20, 2011
>> விருதுகள் மே 3 'ம் தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி...
சுஜாதா விருதுகள், உயிர்மை,
11 /29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்,
சென்னை-600018
தொலைபேசி- 044-24-993-448
--------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------
விருதுகள் 2010
ஜனவரி 1 என்று நாள், தேதி எல்லாம் குறித்தபின் கணினி காலை வாரிவிட்டது. ஒருவழியாக வழிக்கு வந்த கணினியின் உதவியோடு சொன்ன வார்த்தையை காப்பாற்ற விழைகிறேன்.
நான் இந்த விருதுகளை அதன் Body Types (அது என்ன?)வைத்து முடிவுசெய்திருக்கிறேன்.
2010'ன் சிறந்த ஹாச்பேக் (Best Hatchback of the year 2010)
Ford Figo (ஃபோர்ட் ஃபிகோ)
விலை- Rs.3,56,030- Rs.5,44,630 (Ex-Showroom Chennai)
என்னுடைய மார்க்- 8.5/10 (Overall)
2010'ன் சிறந்த செடான் (Best Sedan of the year 2010)
Toyota Etios (டொயோட்டா எடியோஸ்)
விலை- Rs.4,83,868- Rs.6,74,372 (Ex-Showroom Chennai)
என்னுடைய மார்க்- 9/10 (Overall)
2010'ன் சிறந்த கிராஸ் ஓவர் (Best Cross Over of the year 2010)
Skoda Yeti (ஸ்கோடா யெட்டி)
விலை- Rs.15,36,077- Rs.16,58,474 (Ex-Showroom Chennai)
என்னுடைய மார்க்- 7.5/10 (Overall)
2010'ன் சிறந்த உற்பத்தியாளர் (Best Manufacturer of the year 2010)
Mahindra & Mahindra
குறிப்பிடும்படியான தயாரிப்புகள்- சைலோ, ஸ்கார்பியோ, போலேரோ...
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
நான் இந்த விருதுகளை அதன் Body Types (அது என்ன?)வைத்து முடிவுசெய்திருக்கிறேன்.
2010'ன் சிறந்த ஹாச்பேக் (Best Hatchback of the year 2010)
Ford Figo (ஃபோர்ட் ஃபிகோ)
என்னுடைய மார்க்- 8.5/10 (Overall)
2010'ன் சிறந்த செடான் (Best Sedan of the year 2010)
Toyota Etios (டொயோட்டா எடியோஸ்)
என்னுடைய மார்க்- 9/10 (Overall)
2010'ன் சிறந்த கிராஸ் ஓவர் (Best Cross Over of the year 2010)
Skoda Yeti (ஸ்கோடா யெட்டி)
விலை- Rs.15,36,077- Rs.16,58,474 (Ex-Showroom Chennai)
என்னுடைய மார்க்- 7.5/10 (Overall)
2010'ன் சிறந்த உற்பத்தியாளர் (Best Manufacturer of the year 2010)
Mahindra & Mahindra
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
நானும் இந்த ஆட்டத்துக்கு ரெடி!

ஒரே நாள்ல என் கார்ல ஏறி இன்ப அதிர்ச்சி கொடுத்த ரவி அண்ணே, கீதா அக்கா, தமிழ் Blogs, மிதுன், மணிவண்ணன் யாதவராம் ஆகிய அனைவருக்கும் என் நன்றி.
முன்னரே என் கார்ல ஏறி குந்துன நிலாமகள், தாமஸ் ரூபன், உலவு காம், ரிஷபன், பிலாசபி பிரபாகரன் ஆகியோருக்கும் மிக்க நன்றி.
நன்றி படலத்தை முடிச்சாச்சி. அப்படியே நம்ம மேட்டருக்கு வருவோம். 2010' நல்ல மழை மற்றும் பனியோடு முடியப்போகுது. சரியான நேரத்துல விருது கொடுப்பதைப்பற்றி பேசுவோம்.
'ஆஸ்கார்','கோல்டன் க்ளோப்', 'பாரத ரத்னா', 'ஃபிலிம்பேர்', 'கிராமி', 'கலைமாமணி' போன்ற விருதுகள் நன்கு பரிட்சயம். ஆனால் பலப் பேருக்கு 'கார் ஆஃப் த இயர்' (Car of the Year) விருதுகள் பற்றி தெரியாது.
இந்த விருதை பல நிறுவனங்கள் அளித்தாலும் அனைவராலும் சில நல்ல பேர் மற்றும் மீடியா வசமுள்ள நிறுவனங்களின் கணிப்பை தான் உண்மையான விருதாக ஏற்கிறார்கள். (Overdrive-CNBC TV 18, Car & Bike Show-NDTV). இதைத் தவிர உலக அளவில் விருது கொடுப்பவர் உண்டு. (http://www.caroftheyear.org/)
கேள்வி; "அதெல்லாம் சரி, இந்த விருதயெல்லாம் காருக்கு கொடுத்து இன்னா பிரயோஜனம்?"
பதில்; நம்ம வாங்கருத்துக்கு தானுங்க...
நாம் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் விருது கிடைத்த காருக்கு(!!!)
>அங்கீகாரம் கிடைக்கும்
>எல்லோரிடமும் போய்ச் சேரும்.
அதுமட்டுமல்ல, சில பேர் கடந்த வருடத்திற்கு கொடுப்பார்கள். சில பேர் புது வருடத்திற்கான விருதாக கொடுப்பார்கள்.
கேள்வி; "சரி, இதெல்லாம் எதுக்கு இவன் சொல்லறான்???"
பதில்; "நானும் கொடுக்கருத்துக்குதேன்!!!"
ஆமாங்க, சரியா சனவரி 1, மார்கழி 17, முஹர்ரம் 25, சனிக்கிழமை, ஆங்கில வருடப்பிறப்பு (காலண்டர் வந்துரிச்சி!! ) அன்னிக்கி கரிக்டா உங்களுக்கு அலசி... ச்சும்மா அலசி, ஆராஞ்சி விருத கொடுக்கறேங்க! (ரஜினி ஸ்லாங்கு'ல பேசிப் பாருங்க! கி கி கி கி!)
இன்றைய படம்;
| விருது கொடுக்க எனக்காக கார் தேட போகுது பாத்தீங்களா! நண்பேன்டா! |
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
