- Back to Home »
- கார் வாங்க ஆலோசனை , தெரிந்துகொள்வோம் »
- புரியாத புதிர்கள்..
Posted by : Sibhi Kumar SenthilKumar
Wednesday, December 4
இந்த காலத்தில் கார் இல்லாத வீடே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. முன்பெல்லாம் பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள் வசமிருந்த கார்கள் தற்போது சாமானியர்களுக்கு கூட எட்டும் வண்ணமே உள்ளது.
கார் வாங்க முடிவெடுத்துவிட்டால் போதும்.. குடும்பத்தலைவருக்கு உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாது நமக்கு எப்பொழுதோ லிஃப்ட் கொடுத்தவர்கள் என அனைத்து மட்டத்திலிருந்தும் ஆலோசனைகள் குவிந்துவிடும். அதுவரை நம்மிடம் பேசாத நண்பன் கூட அறிவுரைகளை அள்ளி தெளிப்பான். அந்த ஆலோசனைகளை கேட்க கேட்க நமக்கு ஒருப்பக்கம் உற்சாகமும் ஒரு பக்கமும் பயமும் வந்து சேர்ந்துவிடும்.
சமீபத்தில், தங்கள் கனவு வாகனத்தை பல லட்சங்கள் கொடுத்து வாங்கி விட்ட பிறகு அது தரும் தொல்லைகள் தாங்காமல் அதனை பாதி விலைக்கு விற்கும் பல மனிதர்களை சந்தித்தேன். அவர்கள் செய்த முக்கியமான தவறு மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை மட்டும் கருத்தில் கொண்டு கார் வாங்கியது தான்.
நெருங்கிய நண்பனுக்கு வாய்த்த தொல்லை தராத காரை நாமும் வாங்கினால் பின்பு பிரச்னை வராது என்று நினைத்தால் அது மிகவும் தவறு. ஏனென்றால் அவருடைய தேவைகள் வேறு. உங்களின் தேவைகள் வேறு. எனவே கார் வாங்கவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆராயுங்கள். இணையதள தேடலோடு நின்று விடாமல் ஒன்றுக்கு மேற்பட்ட ஷோரூம்களை பார்வையிட மறந்துவிடாதீர்கள்.
ஷோரூமுக்கு வந்தாயிற்று. அங்கே இருக்கும் விற்பனை அதிகாரி அங்கே நிற்கும் காரை உங்களது கனவு கார் என்று விவரிப்பார். எல்லா ஷோரூம்களிலும் அவர்களது காரை நன்றாக பாலிஷ் போட்டு அலங்கார விளக்குகள் வைத்து மிகவும் அழகாக காட்டுவார்கள். அதை பார்த்து உண்மையாக மயங்கினாலும் அவர்களது முன் காட்டிக்கொள்ள வேண்டாம். முக்கியமாக 'எனக்கு எதுவும் தெரியாது' என்பது போல நிற்கவேண்டாம்.
காரை உங்களிடம் காட்டியவுடன் டிரைவர் சீட்டில் அமர்ந்து உங்களுக்கு வசதியாக இருக்கிறதா என்று பார்த்துகொள்ளுங்கள். அந்த காரை பற்றி நீங்கள் முன்பே இணையதளத்தில் பார்த்த குறைகளை விற்பனை அதிகாரியிடம் கேட்க தவறாதீர்கள். இந்த சமயத்தில் தான் பல நபர்கள் ஏமாற்ற படுகிறார்கள். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு புரியாத சொற்களை கொண்டு விளக்குவார். நன்றாக நினைவில் கொள்ளுங்கள், அந்த சொற்கள்தான் உங்களின் மகிழ்ச்சியை நிர்ணயிக்க போகிறது.
அவற்றில் சிலவற்றை உங்களுக்கு சொல்கிறேன்...
AIRBAG::
இதனை பற்றி நான் முன்பே ஒரு பதிவில் விளக்கமாக எழுதியுள்ளேன். பார்க்க-- http://sibhikumar.blogspot.in/2011/02/blog-post_21.html
என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள். வாழ்க்கை நிலையற்றது. பாதுகாப்பாக இருக்கவேண்டியது நம் கடமை. எனவே நீங்கள் வாங்கும் காரில் கட்டாயமாக காற்றுப்பைகள் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்.
ABS (Anti Locking Braking System)::
அதி வேகத்தில் கார் செல்லும்போது பிரேக்கை பிடித்தால் டயர் லாக் ஆகிவிடும். இதுவே Toppling (அதாவது அந்தர் பல்டி) ஆவதற்கு மூல காரணம். ABS என்னும் இந்த தொழில்நுட்பம் இதனை கட்டுபடுத்துகிறது. அதாவது டயர் லாக் ஆகாமல் இந்த தொழில்நுட்பம் பார்த்துக்கொள்கிறது.
EBD (Electronic Brake Force Distribution)::
இதுவும் ABS னுடைய ஒரு அங்கம். நாம் கொடுக்கும் பிரேக்கை வண்டியின் எடையை பொறுத்து சமமாக முன் வீலுக்கும் பின் வீலுக்கும் பங்களிப்பது தான் இந்த தொழில்நுட்பத்தின் வேலை.
2-DIN Music system::
இதை பற்றி தெரிந்தால் நீங்களே வாய்விட்டு சிரிப்பீர்கள். ஆடியோ சிஸ்டத்தின் அளவை குறிப்பிடும் சொற்களே 1-DIN , 2-DIN ஆகும். இதனை மிகவும் பெரிய வசதியாக விற்பனை அதிகாரி விவரிப்பார்.
Keyless Entry::
சோம்பேறித்தனத்தின் எல்லை தான் இது. சாவியை பாக்கெட்டில் வைத்திருந்தால் போதும். நாம் காரை நெருங்கும்போது தானாகவே பூட்டு திறந்து கொள்ளும். உள்ளே சென்ற பிறகு கூட சாவியை போட தேவையில்லை. வண்டிக்குள் சாவி இருந்தால் போதும். Start/Stop பட்டனை தட்டினால் தானாகவே ஸ்டார்ட் ஆகிவிடும்.
Immobilizer::
காரின் உண்மையான சாவியில் (டூப்ளிகேட்டையும் சேர்த்து) ரகசிய எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த எண்கள் காரின் ரகசிய எண்களோடு பொருந்தினால் மட்டுமே ECU (Engine Control Unit) பணிசெய்யும். அச்சு அசலாக டூப்ளிகேட் சாவி செய்தால் கூட கதவை மட்டுமே திறக்க இயலும். இது ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு அம்சம். ஜெர்மனியில் 1998 ஆம் வருடமே இது அறிமுகபடுதினாலும் இந்தியாவிற்கு வந்தது சமீபத்திலே.
Cruise Control::
ஹைவேயில் செல்லும்போது ஆக்சிலேட்டரை மிதித்து கொண்டேயிருப்பது வெறுப்பாக இருக்கும். க்ருஸ் கன்ட்ரோல் வசதி இருந்தால் நாம் சொல்லும் வேகத்தில் ஆக்சிலேட்டரை லாக் செய்ய முடியும். இதனை ஆஃப் செய்ய கிளட்ச் 'ஐ பிடித்தால் போதும்.
இன்னும் நிறைய இருக்கிறதென்றாலும் இவையே முக்கியமானது. எனவே 'சூதானமா இருங்க மக்களே..!!!'

மேற்ப்படிப்பு எங்கு தொடர்வதாக முடிவு..
ReplyDeleteஇப்படி பயனுள்ள பதிவுகளால் தொடருங்கள்.. தொடர்கிறோம் நன்றி நண்பா.
மிக்க நன்றி நண்பா.. தற்போது வி.ஐ.டி யில் சாஃப்ட்வேர் எஞ்சினீரிங் படித்து கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஅவருடைய தேவைகள் வேறு. உங்களின் தேவைகள் வேறு. //
ReplyDeleteஅந்த சொற்கள்தான் உங்களின் மகிழ்ச்சியை நிர்ணயிக்க போகிறது.//
வாழ்க்கை நிலையற்றது. பாதுகாப்பாக இருக்கவேண்டியது நம் கடமை. எனவே நீங்கள் வாங்கும் காரில் கட்டாயமாக காற்றுப்பைகள் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்.//
சோம்பேறித்தனத்தின் எல்லை தான் இது.//
'எண்ணித் துணிக கருமம்' என்ற வள்ளுவப் பேராசான் எச்சரிக்கையை வலுப்படுத்துவதாய் இருக்கிறது பதிவு. சுவையாய் சொல்லத் தெரிந்தமைக்கு பாராட்டுக்கள் சிபி.
very useful
ReplyDelete