Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts

டயர் வெடிபபு - தவிர்ப்பது, தப்பிப்பது எப்படி?

     பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுவது டயர் வெடிப்புகள் தான். இன்று நாம் கார் டயர் வெடிப்புகளைப் பற்றியும் அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் குறித்தும் காண்போம். 

இந்த பதிவிற்கு முன்னோடி சுமார் இரண்டுவாரங்களுக்கு முன்பு தர்மபுரியில் நடந்த விபத்துதான். பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த நண்பர்களை ஏற்றி வந்த கார்  நெடுஞ்சாலையில் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலையில் வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 


இதில் காரில் பயணித்த ஐந்து நபர்களும் லாரியின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த ஒரு பெண்மணி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குள்ளான சுமார் 15 லட்சம் மதிப்புள்ள டாடா சஃபாரி ஸ்டார்ம் கட்டுமானத்தில் உறுதியான கார் தான். ஆனாலும் விபத்தில் எப்படி நொறுங்கியிருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

"பாதுகாப்பாக தான் செல்கிறோம். ஆனால் அதீத வெயிலில் டயர் வெடித்தால் நாம் என்ன செய்ய முடியும்??" என்று பலர் நினைக்கிறார்கள், அதுதான் இல்லை. சூரிய வெப்பத்தை தவிர நிறைய காரணங்கள் உண்டு.

டயர் வெடிப்பதற்கான காரணங்கள்

     
1. டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைவிட குறைவாக இருப்பது. குறைவான காற்றழுத்தம் இருந்தால் டயரின் பக்கவாட்டு சுவர்கள் வளைந்து டயரின் அமைப்பை குலைக்கும். இதனால் வெப்பம் அதிகரித்து டயர் வெடிப்பிற்கு உள்ளாகிறது. மாதத்திற்கு ஒருமுறையோ நீண்ட பயணத்திற்கு முன்போ டயரின் காற்றழுத்தத்தை பரிசோதிப்பது நல்லது. நிறைய தூரம் காரில் பயணித்தப்பின் காற்றழுத்தத்தை பரிசோதித்தால் வெப்பத்தால் அளவில் வித்தியாசம் ஏற்படும். அதனால் பயணத்தை துவங்கிய போதோ அல்லது துவங்கிய 2-3 கி.மீட்டர்களிலோ பரிசோதிப்பது நல்லது.



     2. டயரின் பக்கவாட்டில் வெட்டு/வீக்கம் ஏற்பட்டிருப்பது மற்றும் சமமில்லாது தேய்ந்துப்போன டயர்கள். அவ்வாறு சிறு சிறு சேதமிருக்கும் டயரோடு நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது சேதம் பெரிதாகும். இதனால் டயரின் அமைப்பு குலைந்து டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மாதம் இருமுறையாவது அனைத்து டயர்களையும் கவனியுங்கள். ஏதேனும் சேதமோ அல்லது சமமில்லாது தேய்ந்துப் போயிருந்தாலோ யோசிக்காமல் மாற்றிவிடுங்கள். வருமுன் காப்பது நல்லது.



   3. அதிக வேகம் மற்றும் அதிக எடையை காரில் ஏற்றுவது. அனைத்து டயர்களுக்கும் அதிகபட்ச வேகம் மற்றும் எடை ஆகியவற்றை நிர்ணயித்திருப்பார்கள். அதனை தாண்டும்போது டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக கார் தயாரிப்பாளர்கள் /போக்குவரத்து துறை அனுமதித்த அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கையை கடைப்பிடிப்பது நல்லது. (எ.கா. டாடா இண்டிகா- 4+1 , டொயோட்டா இன்னோவா- 7+1). நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை டயரை பார்த்தே சொல்லிவிடலாம்.




உங்கள் டயரின் பக்கவாட்டிலுள்ள குறியீடுகளின் விரிவாக்கம் 

Speed Rating க்கான வேக அளவீடு

ஒரு வேளை நீங்கள் ஓட்டும்போது திடீரென்று டயர் வெடித்தால் என்ன செய்யவேண்டுமென்று பார்ப்போம்.

முதல் முக்கியமான விஷயம். எக்காரணத்தைக் கொண்டும் ப்ரேக்'ஐ அழுத்தவேண்டாம். அச்சமயத்தில் அனைவரும் செய்யும் பெரும் தவறு இதுதான்.

முன் பக்க டயர் வெடித்தால் அதிர்வுகளோடு எந்த பக்க டயர் வெடித்ததோ அந்த பக்கத்திற்கு வண்டியை இழுக்கும். பின் பக்க டயர் வெடித்தால் பெரும் அதிர்வுகளோடு காரை திருப்பிவிடும். எனவே ஸ்டீரிங் ஐ கட்டுபடுத்துவது மிகவும் முக்கியமானது. எனவே பதட்டப்படாமல் ஆக்சிலேட்டர் லிருந்து காலை எடுத்துவிட்டு காரின் திசையை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்.

ஸ்டீரிங் உங்கள் கட்டுக்குள் வந்த பின்பு, வண்டியின் வேகம் குறைந்தப் பிறகு ப்ரேக் ஐ அழுத்தலாம்.

பி.கு. சீட்பெல்ட் போடுபவர்கள் இவ்வகையான விபத்துகளிலிருந்து 90 சதவிகிதத்திற்கும் மேலானோர் உயிர்ப் பிழைக்கிறார்கள். எனவே வாசகர்களே... 

இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்

     "அது தாம்பரம் வண்டி..."
சாலையில் செல்லும் வண்டியை பார்த்த மாத்திரத்தில்  எவராவது சொல்லும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். ஒரு வண்டியின் வாகனப் பதிவு எண்ணை வைத்து, பதிவு செய்யப்பட்ட மாநிலம், மாவட்டம் மற்றும் வழங்கப்பட்ட உரிமம் ஆகியவற்றை சுலபமாக கண்டுப்பிடிக்கலாம்.

உதாரணத்திற்கு இந்த பதிவு எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள்


TN 01 AA 3456


முதல் இரண்டு எழுத்துக்கள் (TN) பதிவு செய்யப்பட்ட மாநிலத்தைக் குறிக்கும். அடுத்த இரண்டு எண்கள் (01) பதிவு செய்யப்பட மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி நான்கு எண்கள் தான் அந்த வாகனத்தின் பிரத்யேக எண்.

அடுத்து, வழங்கப்பட்ட உரிமத்தை அடையாளம் காண்பது எப்படி என்று பார்ப்போம்.

  •  TN 01 AA 3456  -  வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களை தாங்கியிருந்தால் அந்த வாகனத்தை உரிமையாளரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே தந்திருக்கும் உரிமம்.
  •  TN 01 AA 3456  -  மஞ்சள் நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களை தாங்கியிருந்தால் அந்த வாகனத்தை உரிமையாளர் வணிக ரீதியாகவும் பயன்படுத்திக்கொள்ள (ஓட்டுவதற்கு வணிக ஓட்டுநர் உரிமம் அவசியம்) தந்திருக்கும் உரிமம்.
  •  TN 01 AA 3456  - கருப்பு நிறப் பின்னணியில் மஞ்சள் நிற எழுத்துகளை தாங்கியிருந்தால் அந்த வாகனத்தை வணிக ரீதியாக பயன்படுத்திக்கொள்ள (ஓட்டுவதற்கு வணிக ஓட்டுநர் உரிமம் அவசியமல்ல) தந்திருக்கும் உரிமம்.
  •  77 CD 423  - நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிற எழுத்துகளை (CD) தாங்கியிருந்தால் அது வெளி/ஐக்கிய நாடுகளின் தூதகர்களுக்குச் (Consular Diplomats/United Nations) சொந்தமான வண்டிகளுக்கு தந்திருக்கும் உரிமம்.
  •  52 CC 999  - மஞ்சள் நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களை  (CC) தாங்கியிருந்தால் அது வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு (Consular Corps) சொந்தமான வண்டிகளுக்கு தந்திருக்கும் உரிமம்.
இப்போது பதிவு செய்யப்பட்ட மாநிலத்தை அறிந்துக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

AN - அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
AP - ஆந்திர பிரதேசம்
AR - அருணாச்சல பிரதேசம்
AS - அஸ்ஸாம்
BR - பீகார்
CG - சட்டிஸ்கர்
CH - சண்டிகர்
DD - தாமன் தியு
DL - தில்லி
DN - தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
GA - கோவா
GJ - குஜராத்
HR - ஹரியானா
HP - இமாசலப் பிரதேசம்
JH - ஜார்க்கண்ட்
JK - ஜம்மு காஷ்மீர்
KA - கர்நாடகம்
KL - கேரளம்
LD - லட்சத்தீவுகள்
MH - மகாராஷ்டிரம்\
ML - மேகாலயா
MN - மணிப்பூர்
MP - மத்திய பிரதேசம்
MZ - மிசோரம்
NL - நாகாலாந்து
OD - ஒரிசா
PB - பஞ்சாப்
PY - புதுச்சேரி
RJ - ராஜஸ்தான்
SK - சிக்கிம்
TN - தமிழ்நாடு
TR - திரிபுரா
TS - தெலங்கானா
UK - உத்தரகாண்ட்
UP - உத்தரப் பிரதேசம்
WB - மேற்கு வங்காளம் 
ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு தனித்தனியாக பிரத்யேக எண்கள் உள்ளது. தமிழக மாவட்டங்களின் எண்களை (மேம்படுத்தப்பட்ட பட்டியல்) இங்கே பார்ப்போம். சமீபத்தில் தமிழக போக்குவரத்து துறை, அதிக வாகன பதிவெண்ணிக்கை காரணமாக பழைய மாவட்டங்களைப் பிரித்துள்ளது.
(எ.கா.  TN-31 ல் முன்பு கடலூர் / சிதம்பரம் / நெய்வேலி / பண்ருட்டி / விருத்தாசலம் இருந்தது. தற்போது TN-31 ல் கடலூர் / பண்ருட்டி  மற்றும் TN-91 ல் சிதம்பரம் / நெய்வேலி / விருத்தாச்சலம் ஆக உள்ளது)

TN-01சென்னை சென்ட்ரல் (அயனாவரம்)
TN-02சென்னை - வட மேற்கு (அண்ணா நகர்)
TN-03சென்னை - வட கிழக்கு (தண்டையார்பேட்டை)
TN-04சென்னை - கிழக்கு (பேசின் பாலம்)
TN-05சென்னை - வடக்கு (கொளத்தூர்) 
TN-06சென்னை - தென்கிழக்கு (மந்தவெளி)
TN-07சென்னை - தெற்கு (திருவான்மியூர்)
TN-09சென்னை - மேற்கு (கே.கே. நகர்)
TN-10சென்னை - தென்மேற்கு (விருகம்பாக்கம்)
TN-11சென்னை புறநகர் - தெற்கு (தாம்பரம்)
TN-12சென்னை புறநகர் - வட மேற்கு (பூந்தமல்லி)
TN-13சென்னை புறநகர் - வடக்கு சென்ட்ரல் (அம்பத்தூர்)
TN-14சென்னை புறநகர் - தென்கிழக்கு (சோழிங்கநல்லூர்)
TN-15உளுந்தூர்பேட்டை / கள்ளக்குறிச்சி
TN-16திண்டிவனம் / செஞ்சி
TN-18சென்னை புறநகர் - வடக்கு (செங்குன்றம் / கும்மிடிப்பூண்டி)
TN-19செங்கல்பட்டு / மதுராந்தகம்
TN-20திருவள்ளூர் / திருத்தணி
TN-21காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதூர்
TN-22சென்னை புறநகர் - தெற்கு சென்ட்ரல் (மீனம்பாக்கம்)
TN-23வேலூர் / குடியாத்தம்
TN-24கிருஷ்ணகிரி
TN-25திருவண்ணாமலை / ஆரணி / செய்யார்
TN-27சேலம் (தற்போது உபயோகத்தில் இல்லை)
TN-28நாமக்கல் வடக்கு / ராசிபுரம்
TN-29தர்மபுரி / பாலக்கோடு / ஹரூர்
TN-30சேலம் மேற்கு / ஓமலூர்
TN-31கடலூர் / பண்ருட்டி
TN-32விழுப்புரம்
TN-33ஈரோடு கிழக்கு
TN-34திருச்செங்கோடு
TN-36கோபி / பவானி / சத்தி
TN-37கோயம்புத்தூர் - தெற்கு / சூலூர்
TN-38கோயம்புத்தூர் வடக்கு
TN-39திருப்பூர் வடக்கு / அவினாசி
TN-40மேட்டுப்பாளையம்
TN-41பொள்ளாச்சி / வால்ப்பாறை
TN-42திருப்பூர் தெற்கு / காங்கேயம்
TN-43நீலகிரி
TN-45திருச்சி மேற்கு / மணப்பாறை
TN-46பெரம்பலூர்
TN-47கரூர் / அரவக்குறிச்சி / குளித்தலை / மணமங்கலம்
TN-48ஸ்ரீரங்கம் / முசிறி / துறையூர் / லால்குடி
TN-49தஞ்சாவூர் / பட்டுக்கோட்டை
TN-50திருவாரூர் / மன்னார்க்குடி / திருத்துறைப்பூண்டி
TN-51நாகப்பட்டினம்
TN-52சங்ககிரி / மேட்டூர்
TN-54சேலம் கிழக்கு
TN-55புதுக்கோட்டை / இலுப்பூர் / அறந்தாங்கி
TN-56பெருந்துறை
TN-57திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் / வேடசந்தூர் / வத்தலக்குண்டு / பழனி
TN-58மதுரை தெற்கு / திருமங்கலம் / உசிலம்பட்டி
TN-59மதுரை வடக்கு / வாடிப்பட்டி / மேலூர்
TN-60தேனி / உத்தமப்பாளையம்
TN-61அரியலூர்
TN-63சிவகங்கை / காரைக்குடி
TN-64மதுரை சென்ட்ரல்
TN-65இராமநாதபுரம் / பரமக்குடி
TN-66கோயம்புத்தூர் சென்ட்ரல்
TN-67விருதுநகர் / அருப்புக்கோட்டை
TN-68கும்பக்கோணம்
TN-69தூத்துக்குடி / கோவில்பட்டி
TN-70ஓசூர்
TN-72திருநெல்வேலி / வள்ளியூர்
TN-73ராணிப்பேட்டை / அரக்கோணம்
TN-74நாகர்கோவில்
TN-75மார்த்தாண்டம்
TN-76தென்காசி / அம்பாசமுத்திரம்
TN-77ஆத்தூர் / வாழப்பாடி
TN-78தாராசுரம் / உடுமலைப்பேட்டை
TN-79சங்கரன்கோவில்
TN-81திருச்சி கிழக்கு . திருவெறும்பூர்
TN-82மயிலாடுதுறை / சீர்காழி
TN-83வாணியம்பாடி / திருப்பத்தூர்/ ஆம்பூர்
TN-84ஸ்ரீவில்லிபுத்தூர் / சிவகாசி
TN-85சென்னை புறநகர் - தென் மேற்கு (குன்றத்தூர்)
TN-86ஈரோடு மேற்கு
TN-88நாமக்கல் தெற்கு / பரமத்தி
TN-90சேலம் தெற்கு
TN-91சிதம்பரம் / நெய்வேலி / விருத்தாச்சலம்
TN-92திருச்செந்தூர்
TN-99கோயம்புத்தூர் - மேற்கு 
TN - ** - 'N' / 'AN'அரசு போக்குவரத்துக் கழக வாகனங்கள்
TN - ** - 'G' / 'AG' / 'BG' / 'CG'அரசு அலுவலக வாகனங்கள்

தற்போது தூதகர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பதிவெண் குறித்து பார்ப்போம்.

77 CD 234

முதல் இரண்டு (அல்லது மூன்று) எண்கள் (77) தூதுவரின் நாட்டை குறிக்கும். பின்வரும் இரண்டு எழுத்துக்கள் (CC- Consular Corps | CD - Consular Diplomats) அவரது பதவியை குறிக்கும். கடைசி மூன்று எண்கள் அந்த வாகனத்தின் பிரத்யேக எண்.

இப்பொழுது நாடுகளின் குறியீட்டு எண்களைப் பார்ப்போம்.

1ஆஃப்கானிஸ்தான்
2அங்கோலா
5ஆஸ்திரேலியா
17சீனா
52நெதர்லாந்து 
68சுவிட்சர்லாந்து
75ரஷ்யா
77அமெரிக்கா
109இஸ்ரேல்
134போட்சுவானா

-------------------------------------------------------------------------------------------------------------

வாசகர்களின் வசதிக்காக, வாகனப் பதிவெண் கையேடு (PDF file size: 607 KB) என்ற இந்த வலைப்பதிவின் மின்-வடிவ கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதை டவுன்லோட் செய்ய Click Here
-------------------------------------------------------------------------------------------------------------
Sunday, August 9
Posted by Sibhi Kumar SenthilKumar

உங்கள் மைலேஜ் அதிகரிக்க, ஏ.சி யை போடுங்கள் !!

ஊரில் எத்தனை அநியாயங்கள் நடந்தாலும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் நம் மக்கள், பெட்ரோல்/டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏறினால் கூட கொதித்து போவார்கள். அதிலும் கார் வைத்திருப்பவர்களின் பாடு திண்டாட்டம் தான். கடந்த முறை அதிகளவில் பெட்ரோல்/டீசல் விலை இறங்கியபோது கார் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் ஜெயிலிலிருந்து வெளிவந்த கைதிகளை போல (என்னையும் சேர்த்து!!) காரை எடுத்துக்கொண்டு சுதந்திரமாக சுற்றினர்.

     அதனால் கார் வைத்திருக்கும் அனைவரும் மைலேஜ் அதிகமாக கிடைக்க பல குட்டிக்கரணங்கள் போடுவார்கள். கூகுளில் தேடி பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அதில் முக்கியமான ஒன்று, முடிந்தவரை ஏ.சி யின் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென்பதே. குளிர் காலங்களில் ஏ.சி யின் தேவையில்லாமல் பயன்படுத்தாமல் இருக்கும்போது கிடைக்கும் ஒன்றிரண்டு கூடுதல் மைலேஜில் குளிர்ந்துப்போகும் அனைவரும் வெயில் காலத்தில் பல்லை கடித்துக்கொண்டு ஏ.சி யை அணைத்துவிட்டு ஓட்டுவார்கள். இனி அது தேவையில்லை.


      நெடுஞ்சாலைகளில் ஏ.சி யை போட்டுக்கொண்டு போகும்போது மைலேஜ் குறைவதில்லை என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், நெடுஞ்சாலைகளில் அனைவரும் சுமார் 80கிமீ க்கும் மேலே தான் செல்வர். பொதுவாக நெடுஞ்சாலைகளில் காற்றை தடைசெய்யுமளவுக்கு உயரமான கட்டிடங்கள் இருப்பதில்லை. அப்பொழுது நீங்கள் கண்ணாடிகளை இறக்கியிருந்தீர்கள் என்றால், உங்களது வாகனம் வேகமான காற்றை கிழித்துக்கொண்டு செல்லவேண்டுமென்பதால், இன்ஜினுக்கு வேலை பளுவு அதிகமாகும். இதனால் அதிக எரிப்பொருள் வீணாகும்.



     உங்களது கார் கண்ணாடிகள் மூடியிருந்ததால், இன்ஜினுக்கு எந்த கூடுதல் பளுவும் ஏற்படாது. ஆகவே, ஏ.சி யினால் ஏற்படும் எரிப்பொருள் இழப்பை விட திறந்திருக்கும் கண்ணாடியால் ஏற்படும் இழப்பு அதிகமாக இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பு: இது நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

     எனவே, வாசகர்களே எதற்கும் பயப்படாமல் ஏ.சி. யை போட்டுக்கொண்டு உங்கள் பயணத்தை தொடருங்கள் !!
Saturday, March 7
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -