Archive for November 2010

Stars- Cars ஒரு அலசல்

நம் அனைவருக்கும் பிரபலங்கள் பயன்படுத்தும் பொருள்களை அறிய ஆவலாக இருக்கும்; அதுவும் சினிமா பிரபலங்களின் பொருள்கள்... (சொல்லவேவேண்டாம்!!!)
இந்த பதிவில் நாம் சினிமா பிரபலங்கள் உபயோகப்படுத்தும் கார்கள் மற்றும் அதனுடைய விலை ஆகியவற்றை பார்க்கபோகிறோம்.
முதலில் சூப்பர் ஸ்டார்!
சூப்பர் ஸ்டார் மிகவும் எளிமையானவர் என்று உங்களுக்கு தெரியும்.  அவர் தனக்கென சொந்தமாக வெள்ளை நிற டவேரா மற்றும் அம்பசிடர் வைத்திருக்கிறார்.
Chevrolet Tavera- Rs.9,92,804
HM Ambassador- Rs.4,11,890
அடுத்து உலகநாயகன்...
கமலஹாசன் தனக்கென்று சொந்தமாக ஹம்மர் (சம்மர் இல்லை!!), பிராடோ வைத்திருக்கிறார்.
Hummer H3            - Rs.1,00,00,000
Landcruizer Prado - Rs.53,33,562
அடுத்தது இளைய தளபதி....
விஜய் தனக்கென்று சொந்தமாக ஒரு கருப்பு  BMW வைத்திருக்கிறார்.
BMW X5- Rs.1,10,00,000
சூர்யா...
'வாரணம் ஆயிரம்' வெற்றியை தொடர்ந்து தனக்கென சொந்தமாக வெள்ளை நிற Q7 ஒன்றை கௌதம் வாசுதேவ் மேனனின் ஆலோசனையின் பேரில் வாங்கினார்.
Audi Q7- Rs.65,33,485
நடிகை அசினும் Audi Q7 ஒன்றை தற்போது வாங்கியுள்ளார்.
அடுத்தது 'அமாப் கே கோன்'- அமிதாப்ஜி
நடிகர் அமிதாப் வைத்திருக்கும் கார்- Phantom. (விது வினோத் சோப்ரா என்கிற இயக்குனர் கொடுத்த கிஃப்ட்)  
Rolls Royce Phantom- Rs.4,20,00,000 (செம காஸ்ட்லியான கிஃப்ட்!!!) 
அடுத்து பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா வைத்திருக்கும் கார் Cayenne.
Porsche Cayenne- Rs.1,13,78,250
Photo Shoot!!!

விஜய் தனது கருப்பு BMW' ஐ ஓட்டுகிறார்.

நடிகர் அமிதாப், விது வினோத் சோப்ரா மற்றும் அவருடைய தாயார்.

இன்றைய படம்:

கார் மேல் செய்திருக்கும் அற்புதமான கலரிங் இது
  //உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Sunday, November 28
Posted by Sibhi Kumar SenthilKumar
Tag :

Mahindra Great Escape- ஓர் அறிமுகம்


கார் வாங்குபவர்களெல்லாம் ஒரே பயன்பாட்டிற்காக வாங்குவது அல்ல. சிலர் ஓட்டுகிற அனுபவத்திற்காக வாங்குவர்; சிலர் பிறர் மதிப்பதற்காக வாங்குவர். ஆனால் எல்லோரும் own driving செய்வதில்லை.
அப்படி own driving செய்பவர்களில் சில பேருக்கு 'ரேஸில்' கலந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கும். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் சாத்தியப்படும்படியான விஷயம் அல்ல.
உங்கள் ஏக்கத்தை தீர்த்து வைக்க வருகிறார்கள் மகேந்திரா மோட்டர்ஸ். "உங்கள்ட்ட மகேந்திரா கார் இருக்கிறதா? இருந்தா சொல்ற இடத்துக்கு வாங்க. ஸ்டிக்கர் ஒட்டி சும்மா பூந்து விளையாடலாம்" என்று உற்சாகத்தோடு சொல்கிறார்கள். 'ஸ்கார்ப்பியோ', 'போலீரோ' மற்றும் ஜீப்புகள் வைத்திருப்பவர்கள் அவர்கள் மாநிலத்திலே கலந்துக்கொள்ளலாம்!!! ஆம், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் 1996'ம் வருடத்திலிருந்து நடத்திகொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து அவர்களிடம் 'எதற்காக நடத்துகிறீர்கள்?' என்று கேட்டால், "இதன் மூலம் எங்கள் தயாரிப்பு கார்களின் உறுதியும், தரத்தையும் உரிமையாளர்கள் அறிந்துகொள்வார்கள்" என்கிறார்கள். மேலும், "இது ஒரு போட்டியல்ல. சும்மா த்ரில்லுக்குதான்" என்று சொல்கிறார்கள். இதற்கு சில விதிமுறைகள் சொல்கிறார்கள். அவை
  • அதிகபட்சம் 4 பேர்தான் ஒரு காரில் அனுமதிக்கபடுவர். நம் பாதுகாப்பிற்காக அழைத்துக்கொள்ளலாம்.
  • கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும்.
  • கண்டிப்பாக முதலுதவிப் பெட்டி வைத்திருக்கவேண்டும்.
கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் ரூ.3000 டி.டி எடுத்து அனுப்பவேண்டும். பெட்ரோல் அல்லது டீசல் செலவு கட்டணத்தில் அடங்காது.

முகவரி;
Mahindra & Mahindra Ltd.,
Automotive Sector, Mahindra Towers- 3rd Floor,
Akurli Road,
Kandivali (East),
Mumbai – 400101
Tel : 28468525
Fax : 28468523
E-mail :greatescape@mahindra.com

ரிஜிஸ்டர் செய்ய இங்கு செல்லுங்கள்.
ஆன்லைனில் பணம் கட்ட இங்கு செல்லுங்கள்.

இன்றைய படம்;
சும்மா பதிவுக்கு சம்பந்தமா ஒரு சவாலான படம்.
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Wednesday, November 17
Posted by Sibhi Kumar SenthilKumar

REVAi- ஓர் அறிமுகம்

இன்று அனைவருக்கும் போக்குவரத்து வாகனங்கள் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு விஷயமாக இருக்கிறது. அலுவலகத்திற்கு செல்ல, வார விடுமுறையை கொண்டாட என்று பலவகையான தேவைகள் இருக்கிறது.

நீங்கள் நகரத்தில் உங்கள் அலுவலகத்திற்கு டிராஃபிக் ஜாம்' ல் தவழ்பவரா? உங்களுக்கான பதிவிது.

நம் அனைவருக்கும் E-Bike பரிட்சியமானது. இ-கார்களை கேள்விப்பட்டிருக்கிறோம். அவை பெரும்பாலும் வெளிநாட்டில் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிலும் ஒரு கார் இருக்கிறது. அதுதான் Maini REVAi.



இது ஒரு இரண்டு பேர் அமர்ந்து செல்லும் கார். இதனுடைய battery, 48V, 200A lead acid வகையை சார்ந்தது. எட்டு மணிநேரம் சார்ஜ் போட்டால் முழு பாட்டரியும் சார்ஜ் ஆகிவிடும். இதனுடைய டாப் ஸ்பீட் 80kmph.
இதனுடைய இன்னொரு சிறப்பு- பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. அதுமட்டுமில்லாமல் லக்கேஜ் 'க்கும் நிறைய இடம் இருக்கிறது. தேவையென்றால் ஒரு சீட்டை மடக்கி கொள்ளலாம். இப்போது சில வசதிகளைப் பார்ப்போம்;
  • Gear கிடையாது; Clutch கிடையாது. Fully ஆட்டோமேடிக்.
  • Tubeless Tyres
  • Leather seats, luxury carpets, floor mat
  • AC உண்டு
  • ஸ்டீரியோ சிஸ்டம்/ FM சிஸ்டம்
  • ஆறு கலர்களில் உண்டு- கருப்பு, வெள்ளை, சிவப்பு, சில்வர், நீலம், மஞ்சள்.
இதனுடைய விலை ரூ.3,40,000 - ரூ.4,16,000 வரை உள்ளது. பெண்கள் எளிதாக பயன்படுத்தலாம். பார்க்கிங் செய்வது மிகவும் எளிதானது.

இன்றைய படம்;

பளபளக்கும் இந்த காரினுடைய விலை ரூ.64,40,000. முழுவதும் வைரம் மற்றும் வெள்ளை தங்கத்தால் ஆனது (இஞ்சின் உட்பட!!!)
 //உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Monday, November 15
Posted by Sibhi Kumar SenthilKumar

தெரிந்துகொள்வோம்- Body Types

அது ஒன்னுமில்லீங்க, பொதுவாக உலகமெல்லாம் கார்களை பிரித்தெடுக்கும் முறை இது. கார்களை அதன் தோற்றத்தை வைத்து பிரிப்பார்கள்.




முதலில் வருவது Hatch Back...
கார் வாங்கவேண்டும் என்று தோன்றியவுடன் நம் நினைவுக்கு வருவது இவ்வகை கார்களே. எல்லா நாடுகளிலும் இவ்வகை கார்கள் தவழும். இவையனைத்தும் 4-5 பேர் பயணிக்கும் கார்கள்.
Maruti 800Hyundai Santro Xing

ஆனால் சிலசமயம் இரண்டு பேர் (ஓட்டுபவர் உட்பட) பயணிக்கும் கார்களும் இவற்றில் அடங்கும். முதன்முதலில் காரை ஓட்டுபவருக்கும் மிகவும் எளிதாக அமைவது இவ்வகை கார்களின் சிறப்பு. ஆனால் ஊருக்கு குடும்பத்துடன் போகும்போது, அங்கே இருப்பவர் "நானும் உங்களுடன் வருகிறேன்" என்றால் 'சட்னிதான்'. நகரத்தில் வாழ்பவர்களுக்கு ஏற்றமானதாக இருக்கும்.

காரின் பின்புறம் அமுங்கி இருப்பதால் இதற்கு Hatch Back என்று பெயரிட்டனர்.

அடுத்தது Sedan..
Sedan' க்கும் Hatch Back' க்கும் சிறிய வித்தியாசம் தான். Hatch Back' இன் பின்புறத்தை கொஞ்சம் 'இழுத்த' மாதிரி இருக்கும். மத்த எல்லா வசதியும் Hatch Back போலதான். Sedan' இல் உள்ள ஒரு வசதி- பின்புற ஸ்டோரேஜ் இடம் பெரிதாக இருக்கும்.

Chevrolet AveoBMW M3

சில வாகன உற்பத்தியாளர்கள் ஒரு மாடலை Sedan' ஆகவும் Hatch Back' ஆகவும் புத்திசாலியாக வெளியிடுவார்கள். பெரும்பாலும் இந்த முயற்சி வெற்றியடைந்துவிடும்.
எ.கா. Tata Motors 'இண்டிகா' மற்றும் 'இண்டிகோ' வையும் இதுமாதிரி வெளியிட்டு பெரும் வெற்றியடைந்தார்கள். தற்போது வெளியிடப்பட்ட 'இண்டிகா விஸ்டா' மற்றும் 'இண்டிகோ மான்சா' வையும் இதுப்போல வெளியிட்டுள்ளார்கள்.

அடுத்து வருவது SUV...
"இந்தியா ஒரு SUV மற்றும் MUV தேசம்" - இது கார் விமர்சகர்களின் ஸ்டேட்மென்ட். அந்த அளவிற்கு இந்திய மக்கள் விரும்புவது இவ்வகை கார்களே. SUV என்றால் 'Sport Utility Vehilcle'.

Tata SafariAudi Q5

பார்ப்பதற்கு பெரியதாக இருக்கும் இவ்வகை கார்கள், 2 row மட்டுமே இருக்கும். பின்னால் நிறைய இடம் வெற்றிடமாக இருக்கும். இவை பெரும்பாலும் Buisness, Finance ஆகிய துறைகளில் இருப்பவர்கள் வைத்திருப்பார்கள்.

அது என்ன MUV?
MUV என்றால் 'Multi Utility Vehicle'. அதாவது 'எப்படி வேணாலும் பயன்படுத்தலாம்' வகை கார்கள். நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு MUV, Omni. இந்த காரை பின் சீட்டில் லக்கேஜ் 'ம் வைத்து ஓட்டலாம். 

Toyota InnovaMahindra Xylo 

3 row இருக்கும். பெரும்பாலும் 7-8 பேர் தாரளமாக அமரலாம்.

மேற்சொன்ன நான்கு வகைகள் தான் அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படும் வகைகள். இதை தவிர Convertibles, Roadster, Coupe, MPV, Wagons, Pick ups ஆகிய வகைகள் உண்டு. MPV 'ம் MUV'ம் ஒன்றுதான்.  

இன்றைய படம்;

Bugatti Veyron
Bugatti Veyron- உலகில் விலை அதிகமான கார்- 23 கோடி ரூபாய் 

 //உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//

வணக்கம்

                       னிதன் சக்கரத்தை கண்டுபிடித்த நாளிலிருந்து போக்குவரத்தை சுலபமாக்கவும், சொகுசாக்கவும் தன் மூளையை உபயோகித்து கொண்டிருக்கிறான்.

                       கடந்த நூற்றாண்டுகளில் பெரும்பாலும் கார் என்றால்  'பிளைமோத்', 'அம்பாசடர்', 'பத்மினி' என்று விரல் விட்டு எண்ண கூடிய அளவில்தான் இருந்தது. இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான கார்கள் இருக்கிறது. சராசரி வருமானமுள்ள மனிதர்களாலே வாங்க கூடிய அளவில் வந்துவிட்டன. அவற்றை பற்றிய தகவல்களை அறிய நம் அனைவருக்குமே ஆர்வம் மிகுதியாக உள்ளது. இதுபற்றியான எனது தேடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

                     கார் வாங்கவேண்டும்  என்ற  முடிவெடுத்தவுடன்  பெரும்  குழப்பம் ஏற்படுகிறது. கவலையைவிடுங்கள், உங்கள் குழப்பத்தை தெளிவு செய்ய நான் இருக்கிறேன்.

                     கார் வாங்க நிறைய ஆலோசகர்கள் இருக்கிறார்கள். சில இணையதளம்  இவற்றை இலவசமாக இச்சேவையை அளிக்கிறது. அவர்கள் பெரும்பாலும் கேட்கும் விவரங்கள்-

             1.Budget
             2.Body Style
             3.Make
             4.Category

   தொடர்ந்து பேசுவோம்...

இன்றைய படம்;
அந்த கால இந்தியா
//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
Saturday, November 13
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -