Posted by : Sibhi Kumar SenthilKumar Tuesday, April 19

     பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுவது டயர் வெடிப்புகள் தான். இன்று நாம் கார் டயர் வெடிப்புகளைப் பற்றியும் அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் குறித்தும் காண்போம். 

இந்த பதிவிற்கு முன்னோடி சுமார் இரண்டுவாரங்களுக்கு முன்பு தர்மபுரியில் நடந்த விபத்துதான். பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த நண்பர்களை ஏற்றி வந்த கார்  நெடுஞ்சாலையில் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலையில் வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 


இதில் காரில் பயணித்த ஐந்து நபர்களும் லாரியின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த ஒரு பெண்மணி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குள்ளான சுமார் 15 லட்சம் மதிப்புள்ள டாடா சஃபாரி ஸ்டார்ம் கட்டுமானத்தில் உறுதியான கார் தான். ஆனாலும் விபத்தில் எப்படி நொறுங்கியிருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

"பாதுகாப்பாக தான் செல்கிறோம். ஆனால் அதீத வெயிலில் டயர் வெடித்தால் நாம் என்ன செய்ய முடியும்??" என்று பலர் நினைக்கிறார்கள், அதுதான் இல்லை. சூரிய வெப்பத்தை தவிர நிறைய காரணங்கள் உண்டு.

டயர் வெடிப்பதற்கான காரணங்கள்

     
1. டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைவிட குறைவாக இருப்பது. குறைவான காற்றழுத்தம் இருந்தால் டயரின் பக்கவாட்டு சுவர்கள் வளைந்து டயரின் அமைப்பை குலைக்கும். இதனால் வெப்பம் அதிகரித்து டயர் வெடிப்பிற்கு உள்ளாகிறது. மாதத்திற்கு ஒருமுறையோ நீண்ட பயணத்திற்கு முன்போ டயரின் காற்றழுத்தத்தை பரிசோதிப்பது நல்லது. நிறைய தூரம் காரில் பயணித்தப்பின் காற்றழுத்தத்தை பரிசோதித்தால் வெப்பத்தால் அளவில் வித்தியாசம் ஏற்படும். அதனால் பயணத்தை துவங்கிய போதோ அல்லது துவங்கிய 2-3 கி.மீட்டர்களிலோ பரிசோதிப்பது நல்லது.     2. டயரின் பக்கவாட்டில் வெட்டு/வீக்கம் ஏற்பட்டிருப்பது மற்றும் சமமில்லாது தேய்ந்துப்போன டயர்கள். அவ்வாறு சிறு சிறு சேதமிருக்கும் டயரோடு நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது சேதம் பெரிதாகும். இதனால் டயரின் அமைப்பு குலைந்து டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மாதம் இருமுறையாவது அனைத்து டயர்களையும் கவனியுங்கள். ஏதேனும் சேதமோ அல்லது சமமில்லாது தேய்ந்துப் போயிருந்தாலோ யோசிக்காமல் மாற்றிவிடுங்கள். வருமுன் காப்பது நல்லது.   3. அதிக வேகம் மற்றும் அதிக எடையை காரில் ஏற்றுவது. அனைத்து டயர்களுக்கும் அதிகபட்ச வேகம் மற்றும் எடை ஆகியவற்றை நிர்ணயித்திருப்பார்கள். அதனை தாண்டும்போது டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக கார் தயாரிப்பாளர்கள் /போக்குவரத்து துறை அனுமதித்த அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கையை கடைப்பிடிப்பது நல்லது. (எ.கா. டாடா இண்டிகா- 4+1 , டொயோட்டா இன்னோவா- 7+1). நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை டயரை பார்த்தே சொல்லிவிடலாம்.
உங்கள் டயரின் பக்கவாட்டிலுள்ள குறியீடுகளின் விரிவாக்கம் 

Speed Rating க்கான வேக அளவீடு

ஒரு வேளை நீங்கள் ஓட்டும்போது திடீரென்று டயர் வெடித்தால் என்ன செய்யவேண்டுமென்று பார்ப்போம்.

முதல் முக்கியமான விஷயம். எக்காரணத்தைக் கொண்டும் ப்ரேக்'ஐ அழுத்தவேண்டாம். அச்சமயத்தில் அனைவரும் செய்யும் பெரும் தவறு இதுதான்.

முன் பக்க டயர் வெடித்தால் அதிர்வுகளோடு எந்த பக்க டயர் வெடித்ததோ அந்த பக்கத்திற்கு வண்டியை இழுக்கும். பின் பக்க டயர் வெடித்தால் பெரும் அதிர்வுகளோடு காரை திருப்பிவிடும். எனவே ஸ்டீரிங் ஐ கட்டுபடுத்துவது மிகவும் முக்கியமானது. எனவே பதட்டப்படாமல் ஆக்சிலேட்டர் லிருந்து காலை எடுத்துவிட்டு காரின் திசையை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்.

ஸ்டீரிங் உங்கள் கட்டுக்குள் வந்த பின்பு, வண்டியின் வேகம் குறைந்தப் பிறகு ப்ரேக் ஐ அழுத்தலாம்.

பி.கு. சீட்பெல்ட் போடுபவர்கள் இவ்வகையான விபத்துகளிலிருந்து 90 சதவிகிதத்திற்கும் மேலானோர் உயிர்ப் பிழைக்கிறார்கள். எனவே வாசகர்களே... 

{ 3 comments... அவற்றை கீழே படியுங்கள். நீங்களும் சொல்லலாமே }

 1. சொந்த வாகனம் வைத்திருப்பது என்பது யானையைக் கட்டித் தீனி போடுவது போல என தெளிவாகிறது அவ்வப்போது!

  விழிப்புணர்வைத் தூண்டும் பதிவெழுதுவதற்கு பாராட்டுக்கள் சிபி.
  முடிப்பில் இருக்கும் சிறப்பு எழுந்து உற்சாகமாகக் கைதட்டத் தூண்டுகிறது :))

  ReplyDelete
 2. அருமையான ஆலோசனைகள் சிபி தேர்ந்த எழுத்தாளன் போல அழகாக எழுதி இருக்கிறாய் super

  ReplyDelete
 3. நல்லவிஷயம்
  பயனுள்ளதாக இருக்கிறது
  மற்றவர்களுக்கும் இதை பகிர்கிறேன் !!
  நன்றி

  ReplyDelete

Leave your Comments

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; a born Entrepreneur; accident predictor; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com fiverr.com, keyboardist, bathroom singer, great motivator and so on. actually, a good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

Get Notified !!! Give us your Email Address

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -